அறுசுவை

 உணவே மருந்து 

அறுசுவையும் ஆரோக்கியமும்


1 துவர்ப்பு சுவை


 உடலுக்கு உறுதியையும் உற்சாகத்துடன் சுறுசுறுப்பையும் தரும் சுவை இது


   உடலில் துவர்ப்பு சுவை குறைந்து விட்டால் அதிக வியர்வையுடன் கூடிய படபடப்பு ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தோன்றும்


      இந்த நோய்கள் தோன்றினால் வாழைக்காய் வாழைப்பூ மாதுளம் பழம் அத்திக்காய் போன்ற பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இதனால்  உடலுக்கு தேவையான துவர்ப்பு சுவை கிடைத்து விடும் துவர்ப்பு சுவை பற்றாக்குறையால் வருகின்ற நோய்கள் இதன் மூலம் விலகும்


    பொதுவாக உடலுக்கு தேவையான ஆற்றலைத் தரும் சுவையாக துவர்ப்பு சுவை விளங்குகின்றது


2 கார்ப்பு சுவை


  இந்த சுவையை அதிகமாக விரும்பி சாப்பிட்டால் உடலில் நீர்த்தன்மை பாதிக்கும் இதனால்  உடல் இளைத்து விடும் சத்துப் பற்றாக்குறை உண்டாகும் எனவே உணவில் வர மிளகாய் பச்சை மிளகாய் போன்ற கார்ப்பு சுவை உள்ள பொருட்களை பயன்படுத்தக் கூடாது


இதற்கு பதிலாக தீமையைத் தராத கார சுவையுள்ள இஞ்சி பூண்டு மற்றும் மிளகு போன்ற பொருட்களை உணவில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்


    பசி உணர்வைத் தூண்டும் சுவையாக இது விளங்குகிறது மேலும் உடலுக்கு கிடைத்த ஆற்றலை செயல்படுத்தும் குணமும் இந்த  சுவைக்கு உள்ளது


3 இனிப்பு  சுவை


  தேவையற்ற செயற்கை முறையில் கிடைக்கின்ற இனிப்பு சுவையை அதிகமாக உட்கொண்டால் இரத்த கொதிப்பு மற்றும் தோல் அரிப்பு போன்ற நோய்களை இது உண்டாக்கிவிடும்


   எனவே கடைகளில் கிடைக்கின்ற இனிப்பு சுவை உள்ள பொருட்களையோ அல்லது வெள்ளை சர்க்கரை சேர்ந்த உணவு வகைகளையோ  உட்கொள்ள கூடாது


இனிப்பு சுவை உள்ள பொருட்களை அறவே நீக்கி விட்டால் ஞாபக சக்தி குறைந்துவிடும் மூளையில் சிந்தனைத்திறன் ஏற்படாது எனவே இனிப்பு சுவையை அறவே நீக்கக் கூடாது அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்


உடலுக்கு தீமையை தராத இனிப்பு சுவையுள்ள அத்திப் பழம் பப்பாளி பழம் கொய்யா பழம் போன்ற பழங்களை உண்ணலாம்


   இயற்கையாகக் கிடைக்கின்ற இனிப்பு சுவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்


  ஏனெனில் 

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடிய சுவை இனிப்பு சுவையாக விளங்குகின்றது இந்த சுவையை அதிகமாக உண்டால் உடல் பருமனாகிவிடும் குறைவாக உண்டால் உடல் நலத்தை பாதுகாக்கும்


4 உவர்ப்பு சுவை


  ரத்தத்தை தூய்மை செய்யவும் உண்ட உணவை செரிமானம் செய்வதற்கும் இந்த சுவை உள்ள பொருட்கள் தேவைப்படுகிறது ஆனாலும் அதிக அளவில் உணவில் உப்பை சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டு விடும்


  எனவே உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும் இயற்கையாக கிடைக்கின்ற உடலுக்கு தீமை தராத இளநீர் மற்றும் வெள்ளரிப் பிஞ்சுகளை உண்டுவந்தால் உப்பு சுவை உடலுக்கு கிடைக்கும் மேலும் உடலுக்கு ஆரோக்கியமும் உண்டாகும்


   உடல் வளர்ச்சி மற்றும் உடலுக்கு தெளிவு நிலையைத் தரும் சுவையாக உவர்ப்பு சுவை விளங்குவதால் உப்பை அறவே நீக்காமல் குறைவாக பயன்படுத்தி வருவதே உத்தமமாகும்


5 கசப்பு சுவை


  உடலுக்கு நன்மையைத் தரக்கூடிய சுவை இது நோய் எதிர்ப்பு சக்தி கசப்பு சுவையில் அதிகமாக இருக்கின்றது


   கசப்பு சுவையை தினந்தோறும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் உடல் எரிச்சல் உடல் அரிப்பு காய்ச்சல் போன்ற நோய்கள் வராது மேலும் ரத்தம் சுத்தமாகும்


இயற்கையில் கிடைக்கின்ற உடலுக்கு தீமை தராத வேப்பம்பூ பாகற்காய் சுண்டைக்காய் வெந்தயம் ஓமம் போன்ற பொருள்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடலின் இயக்கங்கள் நல்ல முறையில் செயல்படும்


    இந்த சுவையை விரும்பி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய்கள் வராது எதிர்ப்புசக்தி எப்பொழுதும் உடலில் இருக்கும்


6 புளிப்பு சுவை


   உடலுக்கு செரிமான சக்தியை தரும் சுவையாக இது விளங்குகிறது


ஆனாலும் இந்த சுவையை அதிகமாக விரும்பி உட்கொள்ளக்கூடாது காரணம் பற்களின் நரம்புகள் பாதிக்கும் ரத்தக்கொதிப்பு தோல் அரிப்பு போன்ற நோய்கள் உண்டாகும் அதனால் புளிப்பு சுவையை உணவில் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்


    புளிப்பு சுவையை அறவே நீக்கி விட்டால் சீரண குறைபாடு உண்டாகும் எனவே தீமை தராத புளிப்பு சுவையுடைய தக்காளி நெல்லிக்காய் மாங்காய் தயிர் போன்ற உணவு வகைகளை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்


    உடல் இன்பத்தை தரும் சுவையாக புளிப்பு சுவை விளங்குவதால் அறவே நீக்காமல் குறைவாய் சேர்த்துக்கொண்டு நிறைவாய் வாழலாம்


             சித்தர்களின் சீடன்

Comments