Posts

Showing posts from February, 2022

பழங்களின் மருத்துவம்

 Group: *_பழங்களின் மருத்துவ குணங்கள்:-_* 1. செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. 8. நாவல் பழம் :- நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும். 9. திரட்சை :- 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும். 10. மஞ்சள் வழைப்பழம் :- மலச்சிக்கலைப் போக்கும். 11. மாம்பழம் :- மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் ...

அதிக உதிப்போக்கு சீராக

 *அதிக உதிரப்போக்கை சீராக்கும் சிறந்த பானம்:* வெள்ளரித் துண்டுகள் – 100 கிராம் வெண் பூசணித் துண்டுகள் – 100 கிராம் வெள்ளை மிளகு – 10 கிராம் ஏலகாய் – 10  எலுமிச்சைசாறு – 50 மி.லி தேன் – 25 மி.லி  வெள்ளரி, வெண்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து அத்துடன் மேற்கண்டவற்றையும் சேர்த்து சுவையாக அருந்தவும்.  உடல் பருமன், தொப்பை குறைக்கும் சிறந்த பானம், பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை நீங்க இதனை வாரம் 3 முதல் 4 நாள் உபயோகிக்க தொப்பைக் கரையும். மேலும் பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி, அதிக உதிரப்போக்கு ஆகியவற்றுக்கும் சிறந்தது.  உங்கள் நலனில் என்றும் அக்கறையுள்ள *செல்வராஜ்*               *ஸ்ரீ உமையாள் இயற்கை மருத்துவமனை*        மதுரை.

கால் அணி

 #பாதங்களில்ஏற்படும் #வலிஅரிப்பு, #வெடிப்புதொல்லைகள் நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு பாதமும் 26 எலும்புகளை கொண்டது. வாழ்நாளில் உலகத்தினை ஆறு முறை சுற்றி வரும் அளவு கூட நடந்து விடுகின்றோம்.  ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் கவனம்தான் மிகக் குறைவு. ஆக அதற்கான சில பாதுகாப்பு முறைகளை இன்று பார்ப்போம்.  பாத விரல்களின் நடுவில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. அரிப்பு, வலி என்ற தொந்தரவுகள் இருக்கும். இது எளிதில் பரவக் கூடியது என்பதால் ஜிம், நீச்சல் குளம் இவ்விடங்களில் வெறுங்காலோடு நடப்பவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர்.தோல் உரிதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். இதற்கான மருந்துகள் கடைகளில் கிடைக்கும். இருப்பினும் சரும மருத்துவர் அறிவுரை பெறுக.  இறுக்கமான காலணிகளை அணிவதன் காரணமாக கட்டைவிரல் பக்கத்தில் வலி, கட்டி போன்ற பாதிப்பும் இருக்கும். நடக்கும் பொழுது கட்டை விரல் வலிக்கும். ஐஸ் ஒத்தடம் உடனடி நிவாரணம் தரும். பொதுவில் காலணியினை சரியாக அணிவதே வரும் முன் தீர்வாக அமையும். ஆனால் சற்றே வளைந்த கட்டை விரலினை சரி செய்ய மருத்துவ உ...

முட்டை கோஸ்

 அடிக்கடி முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.: முக்கியமாக வயதான காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனை வராமல் தவிர்க்க வேண்டும் என்றால், வாரம் ஒரு முறை முட்டைகோஸ் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது. உடல் சூட்டை தணிக்கும். தலைமுடி உதிர்வதை தடுக்கும். முடியின் வேர்களுக்கு பலம் கொடுக்கும். இது சரும வறட்சியைப் போக்கி சருமத்திற்கு பொலிவையும் தரக்கூடியது. முட்டைகோஸ் பச்சையாக அப்படியே சாப்பிடும் பொழுது அதில் இருக்க கூடிய சத்துக்கள் அனைத்தும் நமது உடலிற்கு கிடைக்கிறது. மிக முக்கியமாக, அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிட்டால், அதில் உள்ளஅனைத்தும் வெளியேறி விடும். முட்டைக்கோஸை நறுக்கும் முன்பு நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு அறுக்க வேண்டும். ஏனென்றால் நறுக்கி விட்டு கழுவினால் அதன் சத்துகளை தண்ணீரில் இழக்க நேரிடும். முட்டைக்கோஸை பருப்பு சேர்த்து, பொரியல், கூட்டு அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடலாம். அதுமட்டுமல்ல முட்டைக்கோஸில் லாப்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்று இளம் வயதினருக்கு உள்ள ஒரு ...

வள்ளலார் கற்பம்

 🇨🇭#மனிதவுடலை_வாட்டும் #அனைத்து……… 🇨🇭#நோய்களும்_குணமாக…❓❓❗❗ காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும்.  ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினை அருளியுள்ளார். 💊#தேவையானவைகள்❓ ▶ வெள்ளை கரிசலாங்கண்ணி - 200 கிராம் ▶ தூதுவளை - 50 கிராம்   ▶ முசுமுசுக்கை  - 50 கிராம்  ▶ சீரகம்  - 50 கிராம்   ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்) இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் [ உணவுக்கு முன் ] பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் #பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். 🇨🇭இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து……… ⭐ மலம் #கருப்பு நிறத்தில் வரும். ⭐சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் #பழைய_மலங்கள் வெளித்தள்ளப்படும். ⭐சிறுகுடல் உறிஞ்சிகள் (VILLUS) தூய...

காது அக்குபஞ்சர்

Image
 காது அக்குபஞ்சர் AURICULOTHERAPY -  EAR ACUPUNCTURE    உடல் அக்குபஞ்சர் வைத்தியமுறைப் போலவே காது அக்குபஞ்சரும் நோய்களை  தீர்க்க பயன்படுகின்றது. உடலில் ஏற்படும் நோய்களை கண்டறிந்து காதில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை செய்வது "காது அக்குபஞ்சர் சிகிச்சை(Auriculo Therapy) ஆகும்.   நம் இந்தியாவிலும், சீனாவிலும் 2000ஆண்டுகளுக்கு முன்பே காது அக்குபஞசர் சிகிச்சை கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால்  1957-ஆம் ஆண்டு, சைனாவில் உள்ள நெய்ஜிங்ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நரம்பு அறுவை சிகிச்சையாளரான டாக்டர் பால் நோகியர் (Dr. Paul Nogier) அவர்கள் தான் காது அக்குபஞ்சர் வரையரை செய்து இதற்கு முழு வடிவம் கொடுத்தார்.   நம் அனைத்து உறுப்புகளையும் சார்ந்த நரம்புகளின் மெல்லிய முடிவுகள் காதில் வந்து முடிகின்றன. காதுகளில் ஒரு குறிப்பிட்ட பகுதி தூண்டப்படும் போது அவ்வுறுப்பு நலமடைகிறது. காது அக்கு பஞ்சருக்கென்றே புதியதாக வடிவமைக்கப்பட்ட வளையங்களைக் கொண்ட ஊசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை காது அக்குப்புள்ளிகளில் பொருத்திவிட்டால் தானாக விழும் வரை நமக்கு பலன் க...

வயிற்றுப்புண் குணமாக

 ஏழே_நாட்களில்_அல்சரை_குணப்படுத்தும்_அற்புதமான_மூலிகை_மருத்துவம் #இது_முற்றிலும்_அனுபவ_மருந்து #கேஸ்டிக்_அல்சர் #பெப்டிக்_அல்சர் யாராக இருந்தாலும் இந்த எளிய வீட்டு மூலிகை மருந்தினை தாராளமாக உட்கொள்ளலாம் .. .. #தேவையான_பொருட்கள் 1. புதிதாக எடுக்கப்பட்ட ஒரு ஸ்பூன் தயிர் #குறிப்பு: கண்டிப்பான முறையில் புளித்த தயிர் எடுத்து கொண்டால் அல்சர் அதிகமாகும் .. .. 2. சீரக தூள் - கால் ஸ்பூன் 3. இந்து உப்பு - அரை ஸ்பூன் ( கண்டிப்பாக இந்து உப்பு தான் பயன் படுத்த வேண்டும் .. நாம் உபயோகிக்கும் அயோடின் கலந்த உப்பு தான் அல்சருக்கு முக்கிய காரணம் என்பதையும் விளங்கி கொள்ளுங்கள் .. #செய்முறை ➡ முதலில் ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு நன்றாக கடைய வேண்டும் .. .. ➡ பின்னர் கால் ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவேண்டும் சீரகத்தை பொண் வருவளாக வறுத்து , நன்றாக பொடியாக்கி வைத்து கொள்ளவும் .. ➡ பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு இந்து உப்பு கலக்க வேண்டும் .. இந்துப்பு தூளாக வாங்கி கொள்ள வேண்டும் .. இந்துப்பு பொடியை தான் அரை ஸ்பூன் போட வேண்டும் .. #உட்கொள்ளும்_முறை ✅ அல்சர் நோய் ஆரம்பமாக உள்ள...

புடலங்காய் மருத்துவம்

 புடலங்காயை நாம் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கள் அனைத்தும் நீங்கும். புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சி...