கால் அணி

 #பாதங்களில்ஏற்படும் #வலிஅரிப்பு, #வெடிப்புதொல்லைகள்


நமது பாதங்கள் அன்றாடம் நம்மிடம் படும்பாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு பாதமும் 26 எலும்புகளை கொண்டது. வாழ்நாளில் உலகத்தினை ஆறு முறை சுற்றி வரும் அளவு கூட நடந்து விடுகின்றோம். 


ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் கவனம்தான் மிகக் குறைவு. ஆக அதற்கான சில பாதுகாப்பு முறைகளை இன்று பார்ப்போம். 


பாத விரல்களின் நடுவில் பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. அரிப்பு, வலி என்ற தொந்தரவுகள் இருக்கும். இது எளிதில் பரவக் கூடியது என்பதால் ஜிம், நீச்சல் குளம் இவ்விடங்களில் வெறுங்காலோடு நடப்பவர்கள் எளிதில் பாதிக்கப்படுவர்.தோல் உரிதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். இதற்கான மருந்துகள் கடைகளில் கிடைக்கும். இருப்பினும் சரும மருத்துவர் அறிவுரை பெறுக. 


இறுக்கமான காலணிகளை அணிவதன் காரணமாக கட்டைவிரல் பக்கத்தில் வலி, கட்டி போன்ற பாதிப்பும் இருக்கும். நடக்கும் பொழுது கட்டை விரல் வலிக்கும். ஐஸ் ஒத்தடம் உடனடி நிவாரணம் தரும். பொதுவில் காலணியினை சரியாக அணிவதே வரும் முன் தீர்வாக அமையும். ஆனால் சற்றே வளைந்த கட்டை விரலினை சரி செய்ய மருத்துவ உதவி அவசியம் தேவைப்படும். 


நகம் தசை மடிப்பினுள்ளாக வளர ஆரம்பித்தால் அது தாங்க முடியாத வலியினைத்தரும். முறையில்லாத, இறுக்கமான ஷூக்களை அணிவதே இதற்கு முதல் காரணம். பரம்பரையும் இதற்கு காரணமாக அமையும். வீக்கம், சிவப்பு, வலி, கசிவு என பாதிப்பு இருக்கும். 


* கிருமி நாசினி சோப்பு கொண்டு கழுவி சுத்தமாக ஈரமின்றி வைக்க வேண்டும். 


* நகங்களை சீராய் நேராய் வெட்ட வேண்டும். பாதிப்பு அதிகமானால் மருத்துவ சிகிச்சை அவசியம் பெற வேண்டும். 


* சிலருக்கு காலையில் எழுந்தவுடன் காலை கீழே வைக்க முடியாத அளவு காலில் வலி இருக்கும். அதிக எடை மற்றும் சில காணங்களை குறிப்பிட்டாலும் இன்னமும் இதற்கான குறிப்பிட்ட காரணத்தை கூற முடியவில்லை. அதிகம் ஓடுபவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகின்றதாம். காலுக்கு ஓய்வு கொடுப்பதும், ஐஸ் ஒத்தடம் கொடுப்பதும், ஸ்டீராய்ட்  இல்லாத வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் முன்னேற்றம் தரும். உடற்பயிற்சி  செய்யும் முன்பும், பின்பும் கால்களுக்கும், பாதத்திற்கும் ஸ்டிரெச் பயிற்சி கொடுங்கள். 


காலில் நீர் கோர்த்த கொப்பளங்கள் நாம் சாதாரணமாய் பார்க்கும் ஒன்று. அதிக நேரம் நடப்பவர்கள், சரியில்லாத ஷூ அணிபவர்கள் அதிகம் வியர்த்த கால்களை உடையவர்களுக்கு இந்த நீர் கொப்பளங்கள் ஏற்படும். இது பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த கொப்பளங்களை அப்படியே ஆறி வற்ற விடுவதே நல்லது. 

ஆனால் அடிக்கடி இப்படி கொப்பளங்கள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.


கால் ஆணி எனப்படுபவை மிக தடித்த சரும வெளிப்பாடு. இது காலப் போக்கில் அதிக வலி கொடுக்கும். இறுக்கமான காலணியாலும் பாதிப்பு ஏற்படும். இதற்காக பிரத்யேக பிளாஸ்டர்கள் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். இதுபோன்ற பாதிப்புகளுக்கு கவனமும் மருத்துவ சிகிச்சையும் உங்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும். 


உங்களால் பீச்சுக்கு செல்ல முடியும் என் றால் அங்கு சென்று ஷூ, சாக்ஸ், இல்லாமல் முடிந்த வரை நன்கு நடங்கள். காலுக்கும், பாதத்திற்கும் இது சிறந்த பயிற்சி. 


விரல்களை மடக்கி நீட்டுங்கள். 

பாதத்தின் வளைவில் நீங்களே சிறிது மசாஜ் செய்யுங்கள். 

பாதத்தின் கீழ் சிறிய பந்தினை வைத்து நாற்காலியில் அமர்ந்தபடி பந்தினை உருட்டுங்கள். 

பழைய, தேய்ந்த செருப்பினை உடனடியாக மாற்றுங்கள். 

குதிகால் உயர ஷூக்களை கண்டிப்பாய் தவிருங்கள்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி