ஜீவனே சிவன்

 "ஜீவசிவோஹம்"


 அன்பு சகோதர, சகோதரிகளுக்கு,


சூரியனாய், சூரியனால் பிறப்பெடுத்த சூச்சுமமே!

கருமமதை கருத்துடனே கபலமேற்றுவீர், கருமமான வாயுவதை கபாலமேற்றுவீரே!

காலமதை வெல்லலாம், காலனையும் உதைக்கலாம்!


தூங்கும் போது ஒடுங்கும் மனமதை , தூங்காமல் ஒடுக்கியே, சீவனை சிவனாக உணர்வீர், உணர்வை பிரம்மமாக...

சித்தம், புத்தி, மனம், அகங்காரம் என பிரம்மம் உன்னில், சுக்கிலமான, சுப்ரமணியனாக சுடர்விடட்டும்!


சுக்கிலம் பிரம்மமாய் சூரியனால் சூலில் கூடி பிறப்பதுவே அடைந்திட்டாய், சூட்சுமத்தை நீ உணர்வாய் சுக்கிலத்தை போசித்தே...


மனமடங்க, மனம் குருவாகும், மனம் பிறழ மனம் இயமனாகும்.


மனமதை நவதூவாரங்களினூடே நசியாமல், நாசியில் மனதைக்கட்டு, நலமதை உணர்ந்திடலாம்!


நன்மையும், தீமையும் நாடி நலம் புரிந்த தன்மையால் ஆளப்படும்! நன்மையை நாடி , நன்மெய்யை நாடி, நடு நாடியை அடைந்திடுவாய்...


நடுவை அடைந்த சீவன் , தன் நாட்டை அடைந்திடுமே! ஆம் தன் தா(ழ்)ய் நாட்டை அடைந்திடுமே...


தாய்நாட்டை , அடைந்திட்டால் , தன் தாய், தந்தையை உணர்ந்திடலாம்.


அநாதையாய் திரிந்த மனம், நாதனை கண்டிட்டால், நாதனோடு நர்த்தனமே புரிந்திடுமே...


நர்த்தனம் புரிந்து அர்த்தநாரியாய் உயர்ந்து, உணர்ந்து ஜீவித்திடுவீர் சிரசினிலே சிரஞ்ஜீவியாய்...


வாழ்க! வாழ்க! வாழ்க!

எல்லாம் வல்ல ஈசனென்ற ஜீவனால் சகல சௌபாக்கியங்களை பெற்று வாழ வாழ்த்துகிறோம்!

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி