மூலம் குணமாக

 🇨🇭#மூலம்_நோய்_குணமாக


🇨🇭#வீட்டு_வைத்திய_குறிப்புகள்…❓


💢பிரண்டை சூரணம்💢


உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீக்கும் பிரண்டைச் சத்துமாவு


❓தேவையானவை:


நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ,


புளித்த மோர் – ஒரு லிட்டர்,


கோதுமை – ஒரு கிலோ,


கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


❓செய்முறை:


பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும்.


பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும்.


இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


★மருத்துவப் பயன்:


உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.


🔴 இரத்த மூலம்  சூரணம்


மூலத்திலிருந்து   இரத்தம்  வாருவது  ஒரு  வாரத்துகுள்   நின்று விடும்   பேதியையும்  கட்டுப்படுத்தி உடல்  வெப்பத்தையும்  தணிக்கும்.


1. ஓமம்                       35 கிராம்


2. இந்துப்பு                   15 கிராம்


3. கடுக்காய் தோல்     75 கிராம்


4. சுக்கு                             35 கிராம்


5 .வால் மிளகு             25 கிராம்


6. அரிசித்திப்பிலி       20 கிராம் 


இந்துப்பை   பொடித்து  கொள்லாம்  ,  ஒவ்வோரு   சரக்கையும் தனித்தனியே    லேசாக  வறுத்துக் கொள்ளவும்.. 


பிறகு சூரணித்து   ஒன்று  சேர்த்துப்  பத்திரப்  

படுத்தவும்.


காலை வெறும்  வயிற்றிலும்   மாலை  6 மணிக்கு   அரை தேக்கரண்டி  மோருடன்   சாப்பிட   குணமாகும்.


💢 மூலநோய் தீர 

சோள தோசை


❓தேவையானவை:


சோளம் – 2 கப்


கிகப்பரிசி – 1 டம்ளர்


சின்ன வெங்காயம் – 10


பச்சை மிளகாய் – 2


கருவேப்பிலை – சிறிது


கொத்தமல்லி – சிறிது


உப்பு – தேவையான அளவு


நல்லெண்ணெய் – தேவையான அளவு


❓செய்முறை:


     சோளத்தைத் தண்ணீர் தெளித்து பிசைந்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். உமி தனியாக வரும். சோளத்தை சிகப்பரிசியுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நைசாக அரைக்கவும். கடாயில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கி மாவில் கலக்கவும். பின்பு தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.


⭐⭐மேலும் சில வைத்தியர்

குறிப்புகள்…❓


1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்புசேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறைசாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.


2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும்.இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு,சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம்பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டுவதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள்தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.


3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடிஅளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன்ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சிலநாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும்கட்டவும்) 


4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனிசெடியைத் தேவையான அளவு எடுத்து வந்துதண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டுநன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்துவைத்துக் கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவுஎடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவுசேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பதுநாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும்

குணமாகும் . இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிககாரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக்கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.


5- சீரகத்தை வாழைப்பழத்துடன்  பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.


6- மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.


7- காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு  விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும்.


8- துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும்  ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும்.


9- நான்கு துத்தி இலைகளுடன் சிறிய துண்டு மஞ்சள் சேரத்து தண்ணீர் சேரத்து அம்மியில் வைத்து அரைக்கவும். பிறகு அரைத்ததை பசும்பாலில் சேர்த்து கலக்கி காலை உணவுக்கு முன் 5 நாடகள் குடிக்கவும். மூலம போயே போச்சு.


10-வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.


11- எல்லா வகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து. அது தான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது, மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை, உடல் உறவு கூடாது. சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறும் நல்லது.


12- வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு குடிக்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.


13- வில்வம்பழத்தை எடுத்து விதைகளை

நீக்கிய பழம் 500கிராம் சுத்தமான தேன்

750 m l பழத்தைநீர்விடாமல் மிக்சியிலிட்டு லேசாக அரைத்துக்கொண்டு அத்துடன் தேனையும்  விட்டு கலந்து கண்ணாடிப் போத்தலில் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டு காலை மாலை உணவுக்கு முன் இரண்டு மேசைக்கரண்டிவீதம் சாப்பிட்டு வர

மேலே சொல்லப்பட்ட நோய்களும் குழந்தை பெற்ற தாய்மார்களின் பால் இல்லாப் பிரச்சினைகழும் நிவர்த்தியாகும்.


14- மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். 


♦மாங்கொட்டை


காய்ந்த மாங்காய் கொட்டைகளை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்த பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வரவும். அதேபோல் ஒரு ஸ்பூன் இஞ்சி, மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு புதினா இல்லை மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.


♦மாதுளை தோல்


மாதுளம் பழத்தின் தோலை எடுத்து, நீரில் கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள் . இந்த நீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். இது வெறுமனே மூலத்தை மட்டுமல்லாது வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியையும் தீர்க்கும்.


♦பாகற்காய் 

இலை சாறு


தினமும் காலையில் நீர் மோருடன் பாகற்காய் இலையின் சாற்றை சேர்த்து பருகுவதால் மூல நோய் குணமாகிறது. இதில் சிறிது மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் இதில் குணப்படுத்தும் தன்மை உள்ளது. ஆகவே தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்


♦நாவல் பழம் 


நவாப்பழம் அல்லது நாவல் பழம் , மூல நோய்க்கு சிறந்த ஒரு தீர்வாகும். இந்த பழம் பொதுவாக கோடை காலத்தில் அதிகமாகக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி மூல நோயைப் போக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.


♦வாழைப்பழம்


மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க ஒரு கனிந்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதில் ஒரு கப் பால் சேர்த்து பருகலாம். இதனை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பின்பற்றலாம்.


⭕ மூலநோய் வராமல் தடுக்க…❓


உணவில் கீரை வகைகள்,

காய் பழ வகைகள்,

தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அடிக்கடி நீர்அருந்தவேண்டும்,


தினமும் காலை மாலை மலம்கழித்தல் வேண்டும், 


மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,


தினமும் நடைப் பயிற்சி அல்லது எளிய 

உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.


உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம்,தவறாது சேர்த்தல் வேண்டும். 


கருணைக் கிழங்குஅடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று. 


காரமான உணவு தவிர்க்கவும். 


வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி