இதயம் பலம் பெற

 *#இருதயம்_பலம்பெற_மருத்துவம்.


*1.இருதய பட படப்பு குறைய:*


மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.


*2.இதயம் பட படப்பு தீர:*


 தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.


 *3.இதய நோய்கள் தீரு:*


 துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.


 *4.இதயத்தில் குத்து வலி தீர:*

 கருந்துளசி,செம்பருத்திப் பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை தீரும். 


*5.இதய பலகீனம் தீர:*


 தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீரும். 


*6.இதய பலம் பெற:*


 அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 கரண்டி வீதம் காலை மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும். 


*7.இதய நடுக்கம் தீர:*


 திருநீற்றுப் பச்சிலை சாற்றை மூக்கின் வழியாக நுகர்வதால் இதய நடுக்கம் தீரும்.


 *8.இதயம் பலம் பெற:*


 மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும்.


 *9.இதய பலகீனம் தீர:*


 செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வர (காலை மாலை)இதய பலகீனம் தீரும்.


 *10.மாரடைப்புத் தீர:*


 தான்றிக்காயைப் பொடி செய்து 2 சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற் தடவி வர மாரடைப்புத் தீரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி