சீத்தாபழம்

 🔯#புற்றுநோயை_குணமாக்கும்…❗


💚#முள்சீத்தா..❗💚


துரியன்பழம் போன்ற தோற்றத்துடன், கொக்கிவடிவ முட்களை உடையது முள்சீத்தா பழம். 


இனிப்பு சற்று புளிப்பு சுவையுடன் இருக்கும். குடல், மார்பு, நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது. 


இதன் இலையை புழு பூச்சி ஆடு மாடு எதுவும் உண்ணாது இந்த மரத்துக்கு எந்த நோயும் வராது. இதன் வேர், பட்டை, இலை, பழம், விதை அனைத்தும் மருத்துவகுணம் வாய்ந்தவை. 


👉 மூலிகையின் பெயர் – சீத்தா.


> தாவரவியல் பெயர்= ANNONA SQUMOSA.

                                             Sugar apple,


> தாவரக்குடும்பம் = ANNONA CEAE.


💢 #பயன்படும்_பாகங்கள்❓


இலை, வேர், பழம், பழத்தின்தோல், விதை, மற்றும் பட்டை.


⭕#வகைகள்❓


 👉ராம்சீத்தா


👉 சீதா பழம்


👉நோனி பழம்


👉 மலைசீத்தா பழம்


👉 முள்சீத்தா பழம்


👉 அன்னமுன்னா பழம்


👉 புத்தர்தலை பழம்


👉 Custard Apple 


 என்று பல பெயர்களில் அழைப்பது உண்டு. வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.


முள்சீத்தாப்பழம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பழப்பயிராகும்.


அமேசான் காடுகள் தான் முள் சீதாவின் பிறப்பிடமாகும். தற்போது பல வெப்பமண்டல நாடுகளில் பரவி வருகின்றது.,


பிலிப்பைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.


இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகின்றது.


இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். 


பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்று அழைக்கப்படுகிறது. 


ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது


புற்றுநோய்க்கு மிகவும் சிறந்த பழம்

புற்று நோய் வராமலும் தடுக்கும் ஆற்றல் பழத்திற்க்கு உண்டு


இதன் சதைப்பகுதி மிகவும் தித்திப்பாக இருக்கும். இதன் விதைகளின்  மேல் பகுதி சொரசொரப்பாக இருக்கும்


சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.


முள்சீத்தாப் பழம் மார்பகப் புற்று நோய் செல்களை அழிக்கும் வலிமையுடையது. 


கிட்டத்தட்ட 12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் வல்லமையும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது. ஆனால் மற்ற செல்களை அழிப்பதில்லை. இப்பழத்தில் அசெட்டோஜெனின் என்னும் தாவர வேதிப்பொருள் அதிகமாகவுள்ளதால் புற்றுநோய் செல்களை விரைவாக அழிக்கிறது. மேலும் புற்றுநோய் கட்டிகள் வராமலும் தடுக்கிறது.


அத்துடன் புற்றுநோயால் உருவாகும் கட்டிகளை கரைத்தல், கர்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்பனவற்றை குணப்படுத்துவதுடன், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் ஆற்றலும் முள் சீத்தாப்பழத்திற்கு இருக்கின்றது.


இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகவும், இயற்கையின் கொடையாகவும் முள்சீத்தாப்பழம் திகழ்கின்றது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயது முதிந்தவர்கள், அறுவைசிகிட்சை செய்ய முடியாதவர்கள், புற்றுநோய் கதிர்வீச்சு மருத்துவம் மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த நோயிலிருந்து நிவாரணம் பெற நமது இயற்கை வழங்கியுள்ள வீரியமிக்க ஒரு பழம் தான் இந்த முள்சீத்தா. 


💊 #சீத்தாவில்_அடங்கியுள்ள 

#உணவுச்_சத்துக்கள்.❓


நீர்          63.8 கிராம்.


புரோட்டீன்   1.17 கிராம்.


கொழுப்பு     0.5 கிராம்.


மாவுசத்து    20 கிராம்.


நார்சத்து      6.6 கிராம்.


கால்சியம்17.6  -  27 மில்லிகிராம்.


இரும்பு      11.4 மில்லிகிராம்.


மக்னீசியம்   84 மில்லிகிராம்.


தாமிரம்       .43 மில்லிகிராம்.


பாஸ்பரஸ்  14.7 மில்லிகிராம்


ரிபோபிளேவின் பி2 0.086 மில்லிகிராம்.


ரியாசின்    .175 மில்லிகிராம்.


அஸ்கார்பிக்அமிலம் 15.0 மில்லிகிராம்.


கலோரி   95..


🔯 சீத்தாவின் மருத்துவப் பயன்கள்❓


சீத்தாவின் இலை கசாயம் வைத்துக் குடிக்க வயித்துப் போக்கைக் கட்டுப் படுத்தும். இந்த இலை சயரோக வியாதியைக் குணப்படுத்தும். அல்சரைப் போக்கும். 


விதைபூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. இதைப்பொடி செய்து தலைக்குக் குளிக்கjப் பேன் தொல்லை நீங்கும் .


விதையிலிருந்து 30 சதம் எண்ணெய் இருப்பதால் எண்ணெய் எடுக்கிறார்கள். இது சோப்புத் தயாரிக்கப் பயன்படுகிறது..


பழத்தில் பவுடர் தயாரிக்கிறார்கள். இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. இந்தப்பழத்தின் சதைப் பகுதியிலிருந்து குளிர்பானம் தயாரிக் கிறார்கள். 


இதில் 16.5 சர்கரை இருப்பதால் குண்டானவர்கள் சாப்பிடக் கூடாது. 


இதன் வேர் கருச்சிதவை கட்டுப் படுத்துகிறது. 


இதன் பழம் சாப்பிட இதயம் பலம் பெரும். 


குழந்தைகளுக்குக் கொடுக்க எலும்பு, பல் உறுதியாகும். 


குளிர்காச்சலைப் போக்கும். 


செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் குணமாகும். 


இலையை அரைத்துப் புண்களுக்கு வைக்க புண்கள் குணமடையும்.


🔯 முகப் பருக்கள் குணமடையும்


சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவைபழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாககுணமடையும்.


🔯 மேனி பளபளப்பாகும்


விதைகளை பொடியாக்கி சமஅளவுபொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடிமிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.


சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.


சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர்காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்துஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.


மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம்ஏற்படும்


🔯 எலும்பு பலமடையும்


சீத்தாபழத்தில் உடலைவலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்லபலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும்.எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலைகுணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும்ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். மண்ணின் மைந்தன்.


🔯 நினைவாற்றல் அதிகரிக்கும்


சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம்சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல்அதிகரிக்கும்.


🔯 முள்சீத்தா இலை


முள்சீத்தா இலையில் பழத்தைவிட அதிக அளவில் தாவர வேதிப்பொருள் அடங்கியுள்ளது.இரண்டு அல்லது மூன்று புதிதாக பறித்த இலையை தண்ணீர் சேர்த்து டீயாக குடித்துவர பழங்களைப் போன்று புற்றுநோய் செல்களை அழிக்கும்.


மேலும் முள்சீத்தா இலை டீ 1கப் இரவு ஆகாரத்திற்கு பின் குடிக்கவும். 


அத்துடன் புதிய இலைகளை தலையணையில் அடைத்தும், சிறிது இலைகளை படுக்கையில் விரித்து போட்டு தூங்க நல்ல இயற்கையான தூக்கம் உண்டாகும்.


👉 முள்சீத்தாபழத்தை ஆகாரத்திற்கு முன் சாப்பிட்டுவர கல்லீரல் நோய்கள் குணமாகும்.


❌ #பக்க_விளைவுகள் ❌


அதிக அளவில் முள்சீத்தா பழங்கள் அல்லது இலையை பயன்படுத்துவதால் நடுக்கு வாதம் ஏற்படும்.இந்தபழத்தை நீண்டநாட்கள் பயன்படுத்த கூடாது. 


ஏனெனில் Annonacin என்ற தாவர நஞ்சு வேதிப்பொருள் இலை மற்றும் பழத்தில் இருப்பதால் நரம்பு மண்டலத்தை கேட்டைய செய்யலாம். 


கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்கள் இந்த பழத்தை குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி