Posts

குப்பை மேனி

 குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைக்காதீங்க குப்பை மேனி தானே என்று சாதாரணமா நினைச்சுக்காதீங்க. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகளில் குப்பைமேனியும் ஒன்று. குப்பை மேனியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் நன்மைகளை இங்கு கான்போம். குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.. குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி, சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும். குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு பூசினால் புண் விரைவில் குணமாகும். 10 கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற வ...

தர்ப்பை புல்

 தர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்! ☬தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும்.  ☬தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. ☬இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். ☬சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ☬தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். ☬இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். ☬உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும். ☬சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன...

கருமை முடி பெற

 வெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்! sare நரை முடி என்பது 30 வயதில் ஆரம்பிக்கும் என்பது போய், 20 வயதுகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு காரணம் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம். நரை முடி வந்த பின்னும் உங்கள் முடியை கருமை நிறத்திற்கு மாற்றலாம். நீங்கள் கெமிக்கல் டை உபயோகிக்காத வரை. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.   அவுரி + மருதாணி : அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நெறத்தில் மாறும். தேயிலை மாஸ்க் : தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் த்டவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் க...

செவ்வாழை

 🇨🇭#செவ்வாழை……… 🇨🇭#மருத்துவ_குணங்கள் ❗❗❓❓❓❓ செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது.  வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.  பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது...  செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது.  🍌இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். 🍌 செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.  🍌இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. 🍌மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.  🍌பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட க...

Diabetes

 🇨🇭#சர்க்கரை_நோயாளிகளின்…… 🇨🇭#உடலில்_உள்ள_சத்துக்கள் #வெளியேறக்கூடாது…… 🇨🇭#அதற்கு_என்ன_வழி...❓❓❓❓ ▶ மஞ்சள் தூள் 3 கிராம் ▶ அதிமதுரம் 5கிராம் ▶ வாய்விடங்கம் 3 கிராம் ▶ சோம்பு 3 கிராம் ▶ மல்லி விதை 3 கிராம் 💊மேற்கண்ட மருந்துகள் சூரணமாக மருந்துக்கடைகளில் கிடைக்கும் கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து தண்ணீரின் அளவு பாதியானதும் காலை மாலை குடித்து வரவும்..இதனை டீக்கு பதிலாகவும் குடிக்கலாம்.. 💊நாள் ஒன்றுக்கு 4 வேளை வேண்டுமானாலும் குடிக்கலாம்.... 💊குறைந்த பட்சம் ஒரு வேளைக்கு 50 மில்லியாவது குடிக்க வேண்டும்.. வேறு மருந்துகள் சாப்பிட்டு வந்தாலும் பிரச்சனை இல்லை.இதனையும் சேர்த்து சாப்பிடுவதால் நோயின் வீரியம் விரைந்து குறையும்.. இந்த கஷாயத்தை 24 நாட்கள் தொடர்ந்து குடித்து உங்களுக்கு #சுகரின் அளவு குறையவில்லை என்றால் நீங்கள் #ஆயுட்கால_நீரழிவு_நோயாளி என்ற முடிவுக்கு வந்துவிடலாம்..❗❗❗

இன்சுலின்

 **இன்சுலின் என்பது என்ன?  இன்சுலின் குறைபாடு என்றால் என்ன? இன்சுலின் எதிர்ப்பு என்றால் என்ன?** உடலில் அமைந்துள்ள பல்வேறு சுரப்பிகள் மூலம் சுரக்கப்படும் ரசாயன திரவங்களே ஹோர்மோன்கள் ஆகும். அதாவது குறிப்பிட்ட உறுப்புக்களும், களங்களும்  பிற உறுப்புக்களோடும், களங்களோடும் தொடர்பு கொண்டே இயங்குகிறது. அவற்றிக்கு இடையே ஒரு ஊடகமாக செயல்படும் ஒரு  கெமிக்கல் சிக்னல் தான் ஹோர்மோன் ஆகும். அவை ரத்தத்தில் கலந்து, ரத்தம் ஊடாக உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் முக்கியப் பணி, உடல்நிலை மற்றும் மனநிலை ஆகியவற்றை சீராக வைத்திருப்பதாகும்.  இதில் கணையத்தில் இருந்து சுரக்கப்படும் ஒரு ஹோர்மோன் தான் இன்சுலின் ஆகும்.  பொதுவாக நாம் அரிசி, மாவு போன்ற மாச்சத்துக்கள் (Carbohydrates) நிறைந்த உணவுகளை உண்ணும் பொழுது அது சர்க்கரையாக அதாவது குளுக்கோஸாக  மாறி ரத்தத்தில் கலக்கிறது. அந்த குளுக்கோஸை  களங்களுக்கு கொண்டு செல்லும் தொழில்பாட்டை இன்சுலின் ஹோர்மோன் செய்கிறது.  அளவான மாவு சத்துக்களை உட்கொண்டு, நல்ல உடல் உழைப்போடு இருக்கும் ஒரு சராசரி மனிதருக்கு அவர் உடலில் சேரும...

மஞ்சள் மருத்துவம்

 🇨🇭#நாம்_அன்றாடம்_பயன்படுத்தும் #மஞ்சளில்_உள்ள…… 🇨🇭#குர்குமின்_மகிமைகள்_என்ன❗❓❓ மஞ்சள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் தான் குர்குமின். மஞ்சளிலுள்ள வேதிப் பொருள்களில் முக்கியமானது `குர்குமின்’ (Curcumin). ஆர்கானிக் சந்தைகளில் மாத்திரை வடிவிலான குர்குமின் இப்போது பிரபலமடைந்துவருகிறது. ஆக, மஞ்சள் மகத்தானது❗இதில் நமக்குத் துளிக்கூடச் சந்தேகம் வேண்டாம். இன்று கடைகளில் கிடைக்கும் மஞ்சளில், நிறத்துக்காகப் பல செயற்கை கெமிக்கல்களைச் சேர்க்கிறார்கள். இயற்கையாக, எந்த பிரிசர்வேட்டிவும் சேர்க்காத மஞ்சள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள், மஞ்சள் கிழங்குகளை வேகவைத்து, அதை உலரவைத்துப் பயன்படுத்தலாம். மஞ்சள் கிழங்கை வாங்கும்போது, அதை உடைத்துப் பார்த்து வேண்டும். அதன் உள்பகுதி ஈரமாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் இருந்தால், அது நல்ல மஞ்சள். மஞ்சளில் வாலட்டைல் எண்ணெய் (Volatile Oil) என்ற திரவம் இருக்கிறது. அதிலுள்ள குர்குமின் (Curcumin) என்ற நிறமிதான் இதற்கான காரணம். குர்குமினில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில், மூளையில் ஏற்படும் பிர...