செவ்வாழை

 🇨🇭#செவ்வாழை………


🇨🇭#மருத்துவ_குணங்கள் ❗❗❓❓❓❓


செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது.

 வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.

 பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது... 


செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. 


🍌இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.


🍌 செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. 


🍌இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.


🍌மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். 


🍌பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.


🍌சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.


🍌 நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.


🍌தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். 


🍌தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.


🍌 தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. 


🍌எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.


🍌செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். 


🍌இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.


குறிப்பாக பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி தாராளமாக உள்ளன.


🍌 பீட்டா கரோட்டீன், தமனிகள் தடிமனாவதை தடுக்கும் மற்றும் உடலை இருதய புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். 


🍌பீட்டா கரோட்டீன் உடலுக்கு முகவும் இன்றியமையாதது.

கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.


🍌செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும். சிறுநீரகப் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது நல்லது.

செவ்வாழை பழத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் உட்கொண்டு வர, சரும நோய், விரைவில் குணமாகும். 


🍌எப்போதும் சோம்பலாய் இருப்பவர்களுக்கு இப்பழம் சிறந்த அருமருந்து.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி