மழைக்கால நோய்களுக்கு மருத்துவம்

 🇨🇭#மாத்திரையின்றி…❗❗❗


🇨🇭#மழைகாலம்_மற்றும்_குளிர்கால

#நோய்களை……


🇨🇭#எப்படி_குணப்படுத்தலாம்...❓❓❓


💊#அதற்க்கான_வீட்டு__மருத்துவம்

#என்னா❓


☀ காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி குடித்து தற்காலிகமாக நிவாரணம் காண்பர். ஆனால் இந்த சளி, இருமலுக்கு நமது சில நம்ம வீட்டு வைத்தியங்கள் நல்ல தீர்வை வழங்கும் என்பது தெரியுமா❓


குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு. அடுத்து வீட்டில் ஒவ்வொருவராய் மாறி மாறி சளி, காய்ச்சல் என வந்து குளிரோடு உடல் நிலையும் பாதித்து இம்சை பண்ணும். 


குளிர்கால தட்பவெப்பம் கிருமிகள் பெருக்கத்திற்கு ஏதுவான காலமென்பதால் விரைவில் நமது உடலில் புகுந்து நோய்களை உண்டாக்குகின்றன.


சளி பிடித்தால், நமது உடலிலுள்ள வெள்ளையணுக்களே அக்கிருமிகளுடன் சண்டையிடும். அவற்றை பூஸ்ட் அப் செய்வது போல் நமது மூலிகைகளைய அவற்றிற்கு தரும் போது வெள்ளையணுக்கள் பலம் பெற்று கிருமிகளை வெளியேற்றும். இது நடப்பதற்கு குறைந்தது 3 -5 நாட்களாகும்.


இப்படி இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளை நாம் மாத்திரைகள் கொண்டு தடுக்கும் போது, வெள்ளையணுக்கள் எதிர்த்து போரிடாமல் சோம்பேறியாகும். நமது உடல் எல்லாவ்ற்றிற்கும் மாத்திரைகளையே எதிர்பார்க்கும். ஆகவே முடிந்தாரை மாத்திரைகளை தவிர்த்து இயற்கை வைத்தியங்களை முயற்சியுங்கள்.


நம்ம வீட்டு வைத்தியங்களின் மூலம் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் போது, அது பிரச்சனைகளை மட்டும் சரிசெய்வதோடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்தும். மேலும் நம்ம வீட்டு வைத்தியங்கள் எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் அச்சமின்றி எவர் வேண்டுமானாலும் பின்பற்றலாம்.


🇨🇭#நம்ம_வீட்டு_வைத்தியம்……🇨🇭


🔴 சைனஸ் முதல ஆஸ்துமா வரை ,

ஜலதோஷம், இருமல் தொண்டை கரகரப்பு, சளி, டான்சில்,

மூக்கு அடைப்பு, குணமாக………❗❗❗


💊 இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1 டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு கலந்து, அதில் ஒரு துளியை மூக்கில் விட்டால், மூக்கடைப்பு நொடியில் குணமாகும்.


💊 சளி பிடித்திருக்கும் நேரத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் வெங்காயத்தை சாறு பிழிந்து ஒவ்வொரு சொட்டு விட்டால் மூக்கடைப்பு சரியாகிவிடும்.


💊 மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும் பிறகு கலக்கி 

வடி கட்டி எடுத்து இரண்டு சொட்டுகள்

படுத்த வாறு மூக்கில் விட்டுக் கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.....


💊 திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வர சளி,இருமல்,இளைப்பு நோய் குணமாகும்.


💊 திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.


💊 திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.


💊 திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாயு குணமாகும்.


💊 மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும்.


💊 சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.


💊 நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும்.


💊 நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.


💊 தூதுவளை‌‌ இலையை 4 அ‌ல்லது 5 எடு‌த்து அத‌ன் மு‌ட்களை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு கழு‌வி‌க் கொ‌ள்ளவு‌ம். இலை‌க்கு‌ள் 4 அ‌ல்லது 5 ‌மிளகு வை‌த்து வெ‌ற்‌றிலை‌ப் போ‌ல் மடி‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிட இர‌ண்டே நா‌ளி‌ல் மா‌ர்‌பு‌ச் ச‌ளி போ‌ய், தொட‌ர்‌ந்து வ‌ந்த கு‌‌த்த‌ல் இருமலு‌ம் காணாம‌ல் போகு‌ம்.


💊 கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்தால்  தொண்டைப்புண் ஆறும்.


💊 மிளகு, சுக்கு, திப்பிலி  - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், உள்ளிட்ட கப நோய்கள் அனைத்தும் தீரும்.


💊 கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும் , மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம் , மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.


💊 அரை கிராம் மிளகுத் தூளுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர தலைவலி, மூக்கடைப்பு தீரும்.


💊 கிராம்புப் பொடியை ( அரை ஸ்பூன் ), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி , ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும்  வயிற்றுப் போக்கும் குணமாகும்.


💊 மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் உடனே நிற்கும்.


💊 10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கஷாயமாக செய்து குடித்து வந்தால் கோழை மற்றும் இருமல் தீரும்.


💊 பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.


💊 பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.


💊 வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.


💊 கிராம்பு , மஞ்சள் , சாம்பிராணி- மூன்றையும் சம அளவு பொடி சேய்து , நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால்  தலைவலி , தலைபாரம் தீரும்.


💊 கிராம்பு ( 5 ) , சீரகம் ( 2 ஸ்பூன் )- இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.


💊கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.


💊ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.


💊ஒரு டம்ளர் அன்னாசிச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு மறையும் சளித்தொல்லை குணமாகும்.


💊வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.


💊மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.


💊கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.


💊வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.


⭕ 💊 அடிக்கடி சளியால் அவதிபடுபவர்களுக்கு மஞ்சள், பால் மற்றும் மிளகு அருமருந்தாக அமைகின்றது.


குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.


மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் ஒன்றுசேரும்போது, இருமல், சளி பறந்தோடி விடும்.


⭕ 💊 சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு - கருப்பட்டி காபி குடித்தால் விரைவில் பலன் கிடைக்கும்.


▶ தேவையான பொருட்கள்❓


1. தண்ணீர் - 1 கப்


2. சுக்கு பொடி - 1 டீஸ்பூன்


3. கருப்பட்டி - 2 டேபிள் ஸ்பூன்


★சுக்கு பொடிக்கு 


√ தேவையான பொருட்கள்:


1. உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்


2. மல்லி - 2 டேபிள் ஸ்பூன்


3. சீரகம் - 1 டீஸ்பூன்


4. மிளகு - 1 டீஸ்பூன்


5. பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்.


⏩ செய்முறை ❓


1. சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.


2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.


3. பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சூடான சுவையான கருப்பட்டி காபி ரெடி!!!


⭕ 💊 சளி, தொண்டை வலிக்கு இதமான மிளகு - சீரக சாதம்❗❓


சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மிளகு, சீரக சாதம் இதமாக இருக்கும். இன்று இந்த சாதத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


▶ தேவையான பொருட்கள்❓


புழுங்கலரிசி - 2 கப்


மிளகு - 3 டீஸ்பூன்


சீரகம் - 2 டீஸ்பூன்


வெங்காயம் - 1


நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை


முந்திரிப்பருப்பு - சிறிது


கறிவேப்பிலை - சிறிதளவு


உப்பு - 1 டீஸ்பூன் அல்லது 

தேவைக்கேற்றவாறு


◀செய்முறை❓


* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.


* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.


* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயத்தை போட்டு வதக்கவும். 


* அடுத்து அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.


* சத்தான மிளகு, சீரக சாதம் ரெடி.


➡ கவனிக்க


அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும். அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.


🔴 சளி மற்றும் இருமலை விரட்டும் ஒரு அற்புத மருந்து


ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் என மருந்துகளை அதிகமாக வாங்கி வந்து சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். 


ஜலதோஷத்தை போக்க மிக எளிமையான தீர்வு உண்டு. மூலிகை மருந்துக்கடைகளில், #திரிகடுகம் என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை  வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்தாகும்.

 

உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். இதனை தேநீர் தயாரித்து ஜலதோஷத்தை எவ்வாறு போக்குவது என்பதை பார்ப்போம். 

 

➡ தேநீர் செய்ய❓

 

இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தை இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்து  மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து,  சற்று சூடு தணிந்த பிறகு, சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தேநீர் ஆகும்.

 

★நன்மைகள்

 

திரிகடுக தேநீர் மூக்கு அடைப்பு,சளி,

ஜலதோசத்தை போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே,உடல் நிலை சரியாகிவிடும்.


💊ஆடாதோடைக் குடிநீர்💊


ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,


சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.


வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.


சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.


💊 துளசி குடிநீர் 💊


துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.


அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.


டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.


🔯 சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 


10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். 


சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 


600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 


200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.


குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.


🔯 சுவையான ஆரோக்கியமான 

துளசி டீ 💊


▶தேவையான பொருட்கள்❓


துளசி - 1 கப் 


தண்ணீர் - 2 கப்


டீத்தூள் - 2 ஸ்பூன்


தேன் அல்லது கருப்பட்டி - சுவைக்கு


பால் - தேவைக்கு


➡ செய்முறை❓


* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் துளசி இலையை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.


* அடுத்து டீத்தூள், கருப்பட்டியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும்.


* தேவையான அளவு பாலை ஊற்றி பருகவும்.


* சுவையான ஆரோக்கியமான துளசி டீ ரெடி.


* தேன் பயன்படுத்துவதாக இருந்தால் குடிக்கும் போது தேன் சேர்த்தால் போதுமானது. பால் சேர்க்காமலும் இந்த டீயை அருந்தலாம்.


**பலன்கள்: 


துளசியில் ஆக்சிஜன் அதிக அளவு இருப்பதால், உடலுக்கு மிகவும் நல்லது. அதிகமான வியர்வையைக் கட்டுபடுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். முகப்பொலிவுக் கூடும்.


🔯 சளி இருமல் தொல்லையா? இந்த மருந்து உடனே பலன் தரும்!


▶ தேவையான பொருட்கள்❓


400 மில்லி வெந்நீர்.


கருப்பு புள்ளி உள்ள பழுத்த வாழைப்பழம் இரண்டு.


இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்.


◀ செய்முறை 1 ❓


கரும்புள்ளி விழுந்த பழுத்த வாழைப்பழத்தை தோல் நீக்கி, மசிக்க வேண்டும். மசிக்கும் போது மரத்தாலான கரண்டியை பயன்படுத்துங்கள். இரும்பு வகையிலான கரண்டியை பயன்படுத்தும் போது பழம் சீக்கிரமாக கருமையாகிவிடும்.


◀செய்முறை 2


மசித்த வாழைப்பழத்தை ஒரு மண் பானையில் போடு வையிங்கள். அதில் வெந்நீரை சேர்க்கவும். இதை 30 நிமிடங்கள் விட்டுவிடவும்.


◀செய்முறை 3


வெந்நீரில் கலந்த மசித்த வாழைப்பழம் குளுமை அடைந்தவுடன், தேன் சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். தேனை முன்கூட்டி சேர்த்துவிட வேண்டாம். மசித்த வாழைப்பழம் வெந்நீர் சூடாக இருக்கும் போது தேன் கலந்தால், தேனின் நற்குணங்கள் இழந்துவிடும்.


➡ உட்கொள்ளும் முறை 1


நூறு மில்லி அளவில் ஒரு நாளுக்கு நான்கு முறை உட்கொள்ள வேண்டும். (ஒரு நாளுக்கு நானூறு மில்லி)


⏩ உட்கொள்ளும் முறை 2


ஒரு நாளுக்கு நானூறு மில்லி போதுமானது. தினமும் புதியதாக ஃப்ரெஷாக தயாரித்து உட்கொள்ள வேண்டும்.


⏩ உட்கொள்ளும் முறை #3


இதன் பலன் ஐந்து நாட்களில் தெரியவரும். இது முழுக்க முழுக்க இயற்கை மருந்து என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் உண்டாகாது.


⭕💊 சுக்கு மிளகு திப்பிலி குழம்பு


மழைக்காலத்தில் வரும் சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகளுக்கு இந்த சுக்கு மிளகு திப்பிலி குழம்பு நிவாரணம் தரும். இதன் செய்முறையை பார்க்கலாம்.


√ தேவையான பொருட்கள் : 


தோல் சீவிய சுக்கு - சிறிய துண்டு, 


மிளகு - ஒரு டீஸ்பூன், 


அரிசி திப்பிலி - 4, 


புளி - நெல்லியளவு, 


சின்ன வெங்காயம் - 10, 


பூண்டு - 10 பல், 


வத்த குழம்பு பொடி - ஒரு டீஸ்பூன், 


கறிவேப்பிலை - சிறிதளவு, 


கடுகு - கால் டீஸ்பூன், 


கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன், 


வெந்தயம் - கால் டீஸ்பூன், 


★தாளிக்க :


மஞ்சள் தூள் - சிட்டிகை, 

நல்லெண்ணெய் - தேவைக்கு,

உப்பு - தேவைக்கு, 


★செய்முறை :


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.


புளியை கரைத்து கொள்ளவும்.


பூண்டை தோல் உரித்து வைக்கவும்.


வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, அரிசி திப்பிலி சேர்த்து வறுத்து கொள்ளவும். 


ஆறிய பின் அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். 


வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 


பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 


புளி பச்சை வாசனை போன பிறகு அரைத்த விழுது, வத்த குழம்பு பொடி சேர்த்து கொதிக்க விடவும். 


குழம்பு நன்கு கெட்டியான பிறகு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


⭕ 💊 சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்……


சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்


▶தேவையான பொருட்கள்❓


மிளகு – ஒரு டீஸ்பூன்


சீரகம் – ஒரு டீஸ்பூன்


சோம்பு – ஒரு டீஸ்பூன்


காய்ந்த மிளகாய் – 3


மல்லி (தனியா) – 3 டீஸ்பூன்


பூண்டு – 4 பல்


சின்னவெங்காயம் – 2


கறிவேப்பிலை – சிறிது


◀செய்முறை❓


இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துச் சூடாக்கி மிளகு, சீரகம், சோம்பு, காய்ந்த மிளகாய், மல்லி (தனியா) ஆகியவற்றை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். கடைசியாக இதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் ரசப்பொடி ரெடி.


➡ தேவையான பொருட்கள் ❓


நண்டு – ஒரு கிலோ


தக்காளி – 3


கறிவேப்பிலை – சிறிது


மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்


கடுகு – ஒரு டீஸ்பூன்


உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்


பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்


சோம்பு – கால் டீஸ்பூன்


நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்


புளிக்கரைசல் – கால் கப்


தண்ணீர் – 4 கப்


கொத்தமல்லித்தழை – சிறிதளவு


உப்பு – தேவையான அளவு


◀செய்முறை❓


* தக்காளியை அரைத்து கொள்ளவும்.


* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.


* அடுப்பில் வாணலியை வைத்து, சுத்தம் செய்த நண்டுடன் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.


* அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.


* அடுத்து அதில் தயார் செய்த ரசப்பொடியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


* அடுத்து அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.


* பிறகு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.


* அடுத்து அதில் வேகவைத்த நண்டு மற்றும் அதன் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.


* உப்பு, காரம், புளிப்பு சரி பார்த்து தீயை மிதமாக்கவும். ரசம் நுரைகூடி வரும்போது கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.


* சூடாக சூப் போல் பரிமாறலாம் அல்லது சாதத்துடனும் பரிமாறலாம்.


* சளி, இருமல், தலைபாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் தரும். ரசத்தை சாப்பிடும்போது அதில் ஊறிய நண்டைச் சுவைக்க அருமையாக இருக்கும்.


⭕💊 திப்பிலி ரசம் - இயற்கை மருத்துவம்……


புளியை ஊறவைத்து, கரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரில் ரசப்பொடி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பிறகு அதில் பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் சிறிதாக அரிந்த திப்பிலி இலை அல்லது திப்பிலி பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து மூடி போட்டு, மூடிவிடவும். கடைசியாக நெய்யில் கடுகு, சீரகம் தாளித்து, ரசத்தில் சேர்த்தால், திப்பிலி ரசம் தயார்.


◀வைத்தியமுறை❓


இந்த ரசத்தை இளஞ்சூடாக பருகலாம். அல்லது, சாதத்தில் கலந்து உண்ணலாம். சளித் தொல்லை, இருமல், குழந்தை மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படும் ஆஸ்துமா போன்ற நோய் நிலைகளில் இந்த ரசம் உண்பதால் நல்ல பலன் தெரியும். திப்பிலி, சுவாசப் பாதையை விரிவடையச் செய்யும், சளியை வெளியேற்றும்: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், அலர்ஜியை குறைக்கும்.


💊🔯மிளகு ரசம் செய்முறை 🔯


சளி பிடித்திருந்தால், அப்போது மிளகு ரசம் செய்து சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் காணாமல் போய்விடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். 


▶தேவையான பொருட்கள்❓


புளி - 1 எலுமிச்சை அளவு


கொத்தமல்லி - சிறிது


உப்பு - தேவையான அளவு


வறுத்து அரைப்பதற்கு... மிளகு - 1 டீஸ்பூன்


சீரகம் - 1 டீஸ்பூன்


பூண்டு - 1


வரமிளகாய் - 1


துவரம் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்


⏩ தாளிப்பதற்கு...❓


நெய் - 1 டீஸ்பூன்


எண்ணெய் - 1 டீஸ்பூன்


கடுகு - 1 டீஸ்பூன்


கறிவேப்பிலை - சிறிது


பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை


வரமிளகாய் - 2


√செய்முறை:


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் புளியை 1 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் தாளித்ததை கொதிக்கும் ரசத்தில் ஊற்றி மீண்டும் ஒரு கொதி விட்டு, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மிளகு ரசம் ரெடி!!!


🔯 💊 நுரையீரல் வியாதிகள் தீர துளசி மல்லி கஷாயம்


▶ தேவையான பொருள்கள்❓


பச்சைத் துளசி – 100 கிராம்


சுக்கு – 20 கிராம்


ஏலக்காய் – 5


தனியா (மல்லி) – 20 கிராம்


பனை வெல்லம் – தேவையான அளவு


◀செய்முறை❓


துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டி தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். பின்னர் வடிகட்டி பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அதிகாலையில் பருகவும்.


சளி, இருமல், ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, சருவ வியாதிகள், நுரையீரல் வியாதிகள் அனைத்தும் தீரும்.


💊🔯 கம கம இஞ்சி ரசம் 🔯


▶தேவையான பொருட்கள்❓


புளி - ஒரு எலுமிச்சை அளவு

தக்காளி - ஒன்று 


◀அரைக்க❓


இஞ்சி - இரண்டு அங்குல துண்டு 

மிளகு - அரை தேக்கரண்டி 

சீரகம் - ஒரு தேக்கரண்டி 

முழு தனியா - ஒரு மேசை கரண்டி 

காய்ந்த மிளகாய் - இரண்டு 

கொத்துமல்லி தழை - கால் கைபிடி அளவு 

கறிவேப்பிலை - கால் கைபிடி அளவு 


◀தாளிக்க❓


நெய் - ஒரு தேக்கரண்டி 

கடுகு - அரை தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி 

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவுசெய்முறை 


புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.


அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போடு அரைத்து கொள்ளவும்.


தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.


கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும். 


👉 சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி❗


▶குறிப்பு 


1. பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம். 


2. சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளிர்காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.


3. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாதத்தில் பிசைந்து கொடுக்கலாம்.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன🇨🇭


   ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎


💊#மேப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி