வில்வ இலை மருத்துவம்

 *  கொடிய வியாதிகளை குணமாக்கும்

           வில்வ இலையின் மகத்துவம்


1 சிறுநீர் எரிச்சல் மற்றும் 

      நீர் அடைப்பு குணமாக


  வில்வ இலையை இரண்டு கைப்பிடியளவு எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு இதனுடன் பதினைந்து கிராம் சீரகத்தை சேர்த்து இதில் நானூறு மில்லி தண்ணீர் ஊற்றி இதை நூறு மில்லியாக சுண்டக்காய்ச்சி இந்த கசாயத்தை காலை வெறும் வயிற்றில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நீர் அடைப்பு குணமாகும் சிறுநீர் எரிச்சல் நீங்கி உடல் குளிர்ச்சியடையும் இதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும்


2 மூக்கடைப்பு நீங்க


  வில்வ இலை துளசி இலை இரண்டையும் தனித்தனியாக இடித்து சாறுபிழிந்து இந்த சாற்றினை சம அளவாக சேர்த்து


    இந்த மூலிகையின் சாறின் மொத்த அளவிற்கு சமமாக இதனுடன் தேங்காய் எண்ணெயைகலந்து கொண்டு


     இவை அனைத்தையும் ஒரு மண் பாத்திரத்தில் ஊற்றி லேசான தீயில் எரித்து மூலிகைச்சாறு சுண்டும் வரை காய்ச்சி 


     எண்ணெய் தைல பதத்திற்கு வரும் பொழுது இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு இந்த எண்ணெயை நாள்தோறும் தலைக்குத் தேய்த்து வர மூக்கடைப்பு தீரும் 


  இந்த எண்ணையில் இரண்டு  துளி எடுத்து தினம் இரு வேளை மூக்கிற்கு நசியமாக விட்டு வர வெகு எளிதில் மூக்கடைப்பு பூரணமாக குணமாகி விடும்


3         சுவாசகாசம் என்றும் ஆஸ்த்துமா

           என்றும்

சொல்லும் இளைப்பு நோய் குணமாக


  மழை காலம் மற்றும் பனி காலத்தில் மூச்சு விட முடியாத அளவிற்கு சுவாச தொந்தரவை தரும் இளைப்பு நோய்க்கு 

ஐந்து வில்வ இலையுடன் ஏழு மிளகை சேர்த்து காலை மாலை இரண்டு வேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர சுவாசிக்க முடியாத அளவிற்கு தொந்தரவு தரும் இளைப்பு நோயானது ஒரு வாரத்தில் குணமாகிவிடும்


   ஆஸ்துமா தொந்தரவு இருக்கின்ற போதெல்லாம் இந்த வைத்திய முறையை பயன்படுத்தி வந்தால் சுவாச தொந்தரவுகள் நீங்கி நலமாக வாழலாம்


இந்த வைத்திய முறையை பயன்படுத்தி வருபவருக்கு ஞாபக சக்தி கிடைப்பதுடன் சித்த பிரம்மை நீங்கும் 


4 உடல் சூடு தணிய


    காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பத்து  வில்வ இலைகளை மென்று விழுங்கி விட்டு பசுவின் பால் கால் லிட்டர் அளவு பருகிவர உடல் சூடு குறைந்து உடல் சோர்வு நீங்கி உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்


மேலும் கண் எரிச்சல் குணமாகும் உடல் வறட்சியினால் ஏற்படும் உடல் மெலிவு நீங்கி உடலுக்கு வலிமை ஏற்படும்


நாற்பது நாட்கள் இந்த வைத்திய முறையை கடைபிடித்து வந்தால் மேலும் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்


5 உடலில் அளவிற்கு அதிகமான சூடு

   இருந்தால் அதை நிவர்த்தி செய்ய ஒரு

   எளிய வைத்தியம்


தேவையான பொருட்கள்


வில்வ இலை ஒரு கைப்பிடி 

சின்ன வெங்காயம் 7 எண்ணிக்கை மிளகு ஒரு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன்


  இவை அனைத்தையும் ஒன்றிரண்டாக இடித்து இதை முந்நூறு மில்லி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்ட காய்ச்சி  இதை காலை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் காங்கை எனும் அதிகமான உடல் உஷ்ணம் தணிந்து மூன்று வேளை மருந்தில் அதாவது மூன்றே நாளில் உடல் குளிர்ச்சி அடைந்து விடும்


          வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

                      சித்தர்களின் சீடன்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி