நுணா இலை மருத்துவம்

 வெண்புள்ளி நோய் மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுணா இலையின் மருத்துவம்.:


சருமத்தில் வரும் வெண்புள்ளி நோய் கிடையாது. இதற்கு சருமத்தில் தோன்றும் நிறமாற்றம் தான் காரணம். இது பரவவும் செய்யாது. பரம்பரை நோயும் கிடையாது.சருமத்தில் வரும் வெண்புள்ளி வியாதியோ குஷ்டமோ கிடையாது. சருமத்தில் தோன்றும் நிறமாற்றம் தான். இது பரவவும் செய்யாது. பரம்பரை நொயும் கிடையாது.


நுணா இலையை எண்ணெயில் ஊறவைத்து அதை வெண் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தாள் இவை நாளடைவில் மறையக்கூடும்.


பல் வலி.:

நுணாஇலையையும் உப்பையும் (நான்கில் ஒரு பங்கு) எடுத்து இலேசாக வறுத்து, ஒன்றிரண்டாக அல்லது கொரகொரப்பாக பொடித்தெடுக்கவும். இதை அடை போல் தட்டி அகலமான தட்டில் வைத்து அதன் மேல் மெல்லிய துணியில் கட்டி வெயிலில் உலர விடவும். இவை நன்றாக உலர்ந்ததும் அதை இடித்து பொடியாக்கி கண்ணாடி பாட்டிலில் வைக்கவும்.


தினமும் காலையில் இந்த பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களின் வெண்மை, பல் வலி, பல் வீக்கம், ரத்தக்கசிவு போன்றவை குணமாகும்.


குடல் சுத்தம்.:

மூன்று மாதத்துக்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு குடல் சுத்தம் செய்யும் மாத்திரை எடுத்துகொள்வது வழக்கம்.அது போன்று நுணா வேரை சிறிதளவு இடித்து சாறு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்துவந்தால் குடல் சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.


சொரி, சிரங்கு.:

சருமத்தில் சொரி, சிரங்கு பிரச்சனை இருப்பவர்கள் நுணா இலையை அரைத்து அதன் மேல் பூசி வந்தால் புண் சிரங்கு மறையும். ஆழமான புண் ஆறாத புண் இருந்தால் நுணா இலையை அரைத்து விழுதை புண்ணின் மீது வைத்து கட்டினால் புண் ரணம் ஆறும்.


தொண்டை வலி.:

தொண்டை வலி இருக்கும் போது நுணா இலையை எடுத்து சாறு எடுத்து தொண்டையின் மீது பத்து போட்டு வந்தால் வலி உபாதை குறையும். நாள்பட்ட இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி இருப்பவர்கள் நுணா இலை சாறை எடுத்து பத்து போட்டு வந்தால் வலி உணர்வு குறையும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி