Posts

நோயெர்ப்பாற்றலை அதிகரிக்க

 #இரண்டாவது_கொரோனா… #நோய்_எதிர்ப்பு_சக்தியை #பலப்படுத்தினால்…… #வைரசஸுக்கு_எதிராக #போராடலம்…❗❗ 👉""" வருமுன் காக்க வந்தபின் எதிர்த்து போராட """👈 🔴 நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன❓     நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான சக்தியை வழங்கி, நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்ட சக்திதான் நோய் எதிர்ப்பு சக்தி எனப்படுகிறது. இது நம் உடலோடு கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம் தான். இது நம் உடலின் உள்ளே இருந்து நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகள் மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதே நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவமாக இருக்கிறது. நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதே இதன் பிரதான செயலாகும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்றவைகளால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுவது தான் இதன் முக்கியமான பணி. குறிப்பாக எந்த பொருளால் நம் உடலுக்கு ஆபத்து நேர்கிறது என கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியை செய்கிறது இந்த நோய் எதிர்ப்பு சக்தி. தீங்கு தரும் இதுபோன்ற பொருட்களை அழித்து உடலை அவ்வ...

தாமரை பூ

 தாமரைப்பூவின் மருத்துவ குணங்கள் !!  ஒரு கிராம் தாமரை  விதையை அரைத்து, பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிடு வர வேண்டும். 10 கிராம் தாமரைப்பூ, இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ¼ லிட்டராக்கி, வடிகட்டி, காலை, மாலை சாப்பிட்டுவர உடல் சூடு குணமாகும். தாமரை கிழங்கினை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்துவர பார்வை மங்கல் குணமாகும். தாமரை விதையைத் தேனுடன் அரைத்து, நாக்கில் தடவிவர வாந்தி, விக்கல் குணமாகும். நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும். கண்கள் குளிர்ச்சியடையும். வெண்தாமரை – மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். காம்புகள், துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வெண்தாமரை விதைகள், சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் த...

தலையில் நீர்கோர்த்து தலைபாரம் நீங்க

 தலையில் அடிக்கடி நீர் கோர்த்துக் கொண்டால் அதை சரி செய்யும் எளிய இயற்கை மருத்துவம். தேவையான மூலபொருள் 1.கிராம்பு -  4 எண்ணிக்கை 2.மிளகு -  5 எண்ணிக்கை 3.பால் -  சிறிதளவு செய்முறை  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.. பிறகு கிராம்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக(வாசனை வரும் வரை)வறுத்து எடுக்கவும். பிறகு வறுத்த இரண்டு பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலை(இரண்டு தேக்கரண்டி)எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சூடுபடுத்தவும். மேலும் இந்த மருந்தை லேசான சூட்டில் நெற்றி மற்றும் மூக்கு மீது பூசி வந்தால் தலையில் இருந்து வியர்வை வெளியேறி தலை நீர் குறையும்.

வாழைப்பூ

 ♥ பசி  மற்றும்  நோய் தீர்க்கும் மருந்து  -  உணவு பாகம் - 13. ♥ ♥  வாழைப்பூ. ♥                 ♥  வாழை  ஒரு மரத்தைப் போல தோற்றமளித்த போதிலும், உண்மையில்,  வாழை  ஒரு மூலிகையாகும்;  சக்திவாய்ந்த வேர்களைக் கொண்ட ஒரு மூலிகை, மேற்பரப்புக்கு வெளியே வராத ஒரு குறுகிய வாழைத்தண்டு,   வாழைநார்,   வாழைபட்டை,  வாழை இலைகள்,  வாழைப்பூ,   வாழைக்காய், வாழைப்பழம்......  etc., உலகின் மிக உயரமான மூலிகையாகும். உலகெங்கும்  70 வகை வாழைகள்  உள்ளன.  நமது    சித்த மருத்துவ நூல்களில் 12 வகை வாழையைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.                 ♥  சித்த மருத்துவர் பானுமதி,   "துவர்ப்பு சுவை கொண்ட வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித...

நாளொரு கசாயம்

 #கஷாயம்_வாரம் - தினந்தோறும் என்ன கஷாயம் குடிக்கலாம் #திங்கட்கிழமை: ☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. #செவ்வாய்க்கிழமை: ☕ கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். #புதன்கிழமை: ☕ தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.   #விழயாகிழமை: ☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும். #வெள்ளிக்கிழமை: ☕ வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும். #சனிக்கிழமை: ☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்...

பூனைமீசை மூலிகை

 சிறுநீரக செயலிழப்புக்கு பூனை மீசை மூலிகை..  உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன , நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன .ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டஉணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்தநட்சுபோருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி . இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும் .இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல.   இந்த பூனை மீசை மூலிகை பயன்படுத்தினால் சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். ...

பிள்ளை வளர்ப்பு

 #பிள்ளை_பெறுவது_பெரிதல்ல❗ #அதைப்_பேணி_வளர்ப்பது  #தான் #பெரிது_என்று  #பெரியவர்கள்_சொல்வார்கள்.❗❗❗ பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை  #தங்கக்_கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர். பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை.  இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது. குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது. பள்ளி விட்டு வந்ததும்...