தாமரை பூ

 தாமரைப்பூவின் மருத்துவ குணங்கள் !! 

ஒரு கிராம் தாமரை


 விதையை அரைத்து, பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிடு வர வேண்டும். 10 கிராம் தாமரைப்பூ, இதழ்களை ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, ¼ லிட்டராக்கி, வடிகட்டி, காலை, மாலை சாப்பிட்டுவர உடல் சூடு குணமாகும்.

தாமரை கிழங்கினை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, தினமும் காலையில் பாலில் கரைத்துக் குடித்துவர பார்வை மங்கல் குணமாகும்.


தாமரை விதையைத் தேனுடன் அரைத்து, நாக்கில் தடவிவர வாந்தி, விக்கல் குணமாகும். நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும். கண்கள் குளிர்ச்சியடையும்.


வெண்தாமரை – மலர்கள் வெண்மையானவை. தாமரையின் அனைத்து மருத்துவக் குணங்களும் இதற்கும் பொருந்தும். காம்புகள், துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை.


வெண்தாமரை விதைகள், சிறுநீர் பெருக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். தண்டு, இலை ஆகியவை செரியாமை, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.

வெண்தாமரை பூ, உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், காய்ச்சல், நீர்வேட்கை ஆகியவற்றைக் குணமாக்கும்.


தாமரை மலரின் கொட்டையிலிருக்கும் பருப்பு புரதச் சத்து மிகுந்தது, நீடித்துச் சாப்பிட ஆண்மையைப் பெருக்கும். பருப்பைத் தூள் செய்து, பானம் தயாரித்து அருந்தும் பழக்கம் பிலிப்பைன்ஸ் மக்களிடம் உள்ளது.

வெண் தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட, இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்; இருமல் கட்டுப்படும்; மூளைக்குப் பலம் தரும், மகரந்தங்களை உலர்த்தி பாலிலிட்டு குடிக்க பெண் மலட்டுத் தன்மை குணமாவதாக நம்பபடுகிறது 🙏

 வெண் தாமரை மருத்துவ குணங்கள்


* வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், போன்ற கண் நோய்களுக்கு தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால் 100 மில்லி, சுத்தமான தண்ணீர் 100 மி.லி. சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சவும். நன்றாக காய்ந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, வரும் ஆவியை பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி செய்ய வேண்டும். இதை காலை, மாலை, இருவேளை செய்து வந்தால் கண்குறைபாடுகள் நீங்கும். இதற்கு செந்தாமரை பூவையும் பயன்படுத்தலாம்.


*தாமரைப்பூ அதன் இலை, தண்டு கிழங்கு இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்து, அரைத்து (வகைக்கு 100மில்லி அளவு) சாறுகளை சேகரித்து கொள்ளவும். இத்துடன் சுத்தமான நல்லெண்ணை (750 ml) கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணை கொதித்து காய்ந்தபிறகு, சிவப்பு நிறமடையும். நல்ல நறுமணம், எண்ணையிலிருந்து எழும். இந்த பக்குவ நிலையில் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து வடிகட்டி, போத்தலில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த தைலத்தை   தலையில் தடவி வாரம் ஒரு முறை குளித்து வந்தால் கண் பார்வை சீராகும்

*வெண் தாமரை பூவால் ஈரலின் வெப்பமும், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும். தாமரை விதை ஆண்மையை பெருக்கும். கிழங்கு கண் ஒளி, குளிர்ச்சி இவற்றைத் தரும் விதைகளை பொடித்து 1 - 2 கிராம் எடை உள்ளுக்கு கொடுத்து வர உடலுக்கு வலிமை தரும். விதைகளை தேன் விட்டரைத்து நாக்கில் தடவ, வாந்தி, விக்கல், நிற்கும்.வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியைத் தூண்டுகிறது. நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர்.


மருத்துவப் பயன்கள்


ஈரலைப் பற்றிமிக ஏறுகின்ற வெப்பமும்போங் 

கோர மருந்தின் கொடுமையறும்-பாருலகில் 

தண்டா மணத்தையுள்ள தாழ்குழலே! காந்தல்விடும் 

வெண்டா மரைப்பூவால் விள் 

            -அகத்தியர் குணவாகடம்


பொருள் - வெண்தாமரைப்பூவால் ஈரல் பாதிப்பு, குடல்புண், வெப்பமுள்ள மருந்துகளின் உட்சூடும் நீங்கும்.  தேக எரிச்சல் நீங்கும். 


தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து பனை  வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். பித்தத்தைக் குறைக்கும்.   


நீர்ச்சுருக்கு, நீர்த்தாரை எரிச்சல் போன்றவற்றைப் போக்கும். 


சுரக் காய்ச்சலுக்கும் இதனைக் கொடுத்து வந்தால் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். 


ஞாபக சக்தியைத் தூண்டும்.  மூளைக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்வூட்டும். 


வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  சரும எரிச்சலைப் போக்கும்.

தாமரைத் தண்டை வெயிலில் உலர்த்தி நார் தயாரித்து அதனை கொண்டு விளக்கேற்றப் பயன்படுத்தலாம்.

 

* தாமரையின் விதைகள் கரிய நிறத்தில் கடினமானதாக இருக்கும். இதனை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட்டால் இவை உங்கள்  இதயத்துக்கு வலிமை சேர்க்கும்.

 

* வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் கட்டுப்பட, மூளைக்கு பலம் தருவதற்கு  பயன்படுகிறது.

 

* கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப் பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும். கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்.

தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ்  ஆகியவையும் உள்ளன.

* தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சீராகும்.

 

* தாமரை இதழ்களுடன் அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலைகளைச் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து தலைக்கு தேய்த்துவர இளநரை மாறும். முடி உதிர்வதும் குறையும்.

 

* தாமரை இதழ்களை நீரில் வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தனியும். சிறுநீரகத் தொற்றுகள் நீங்கும்.  நினைவாற்றல் கூடும். சருமம் பளபளக்கும்.

இதயத்தைப் பாதுகாக்கும்.  இதய தசைகளை வலுப்படுத்தும்.  இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கும். 


தாமரைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பனை வெல்லத்துடன் கலந்து பாகுபோல் காய்ச்சி சாப்பிட்டு வந்தால், இருமல், அதிக உதிரப் போக்கு போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கும். 


வெண்தாமரைப் பூ மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.  நரம்புகளுக்கு பலம் கொடுக்கிறது என சித்தர்கள் பலர் கூறியுள்ளனர். 


தாமரைப் பூவின் மகரந்தப் பொடியுடன் தேன் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.  காது கேளாமை நீங்கும்.  ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். 


மருந்துகளால் சிலருக்கு ஒவ்வாமை உண்டானால் அது பலவகைகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.  அப்பாதிப்புகளைக் குறைக்க தாமரைப்பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து குடிநீராக தினமும் அரை அவுன்ஸ் அளவு அருந்தி வந்தால் ஒவ்வாமையால் உண்டான  பாதிப்பு குறையும். 


தாமரை விதையை தேன் விட்டு அரைத்து நாக்கில்  தடவினால், விக்கல், வாந்தி நிற்கும்.

மூளை வளர்ச்சி


உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.


கண்பார்வை தெளிவு


வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.


உயர் ரத்த அழுத்தம்


வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

தாமரை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, பாலில் கலந்து குடித்துவர  ஞாபகசக்தி அதிகரிக்கும்.

 வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊறப் போட்டு மறுநாள் அதை அடுப்பில் வைத்து 1 லிட்டர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, சர்க்கரை 1 கிலோ கலந்து தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு 15 மில்லி எடுத்து வெந்நீரில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் உடல் சூடு குறையும் தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.


இருதயநோய் போக்கும்


செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.


இருமல் போக்கும் நீர்


தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.

 தாமரைத் தண்டை நல்ல விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள் அதை திரியாக உபயோகித்தால் செல்வா வளம் பெருகும். இதன் இல்லை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன் பட்டு வருகிறது .தாமரை இலையில் சப்பிட்டாலேபல வியாதிகள் தீரும் . முக்கியமாக நரை விரைவில் வராது .

மலர்களும் மருத்துவப்பயன் கொண்டவை.  இன்று உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப் பெற்று வருகிறது.  இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட மலர்களில் தாமரையும் ஒன்று தாமரை மலர் நம் இந்தியாவின் தேசிய மலராகும். தாமரையில் கல்விக்கு உரிய சரஸ்வதியும், செல்வத்துக்கு உரிய மஹாலட்சுமியும்  அமர்ந்திருப்பதாக இந்து மதத்தினர் நம்புகின்றனர்.  தாமரைப் பூவை இறைவனுக்கு பூஜைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.


தாமரையில் வெண்மை, சிவப்பு, நீலம், மஞ்சள் என பல வகைகள் உண்டு. 


தாமரைப் பூவை அரவிந்தம், பொன்மனை, கமலம், சரோகம், கோகனம், சலசம், வாரிசம், பங்கசம், நளினம், சரோருகம் என பல பெயர்களில் அழைக்கின்றனர்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி