சிகைக்காய்

 சீயக்காய் மரம்

       Soap pod wattle

      Acacia concinna


      சிகைக்காய் = சிகை + காய். சிகை என்றால் தலை முடி என்று பொருள். சிகையை தூய்மையாக்க பயன்படுவதால் சிகைக்காய் எனப்பட்டு பின்னர் சீயக்காய், சீக்காய் என பேச்சு மொழியில் பேசப்படுகிறது.


ஆசியாவிற்கே தனித்துவம் வாய்ந்த குறிப்பாக மத்திய மற்றும் தென்னிந்தியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு சிறு மர வகையை சார்ந்தது இந்த சிகைக்காய் ஆகும்.முட்கள் நிறைந்த இதன் இளந்தண்டுகள் சற்று கொடி போல தோற்றமளிக்கும்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் பகுதியில் இவை அதிகமாக வளர்க்கப்படுகிறது.


இதன் இலை இரட்டைச்சிறகிலை யமைப்பையும், பூ மஞ்சள் நிறத்திலும் கோளகவடிவிலும் காணப்படும். காய் பழுப்பு வண்ணத்திலும், காய்ந்த நிலையில் சுருக்கம் மற்றும் துண்டிட்டதுப் போலவும் காட்சியளிக்கும். இதன்காய்களில் 6-10 விதைகள் காணப்படும்.


இத்தாவரத்தின் பழங்களில் கூடுதல் அல்கலாய்டுகள் காணப்படுகின்றன. இத்தாவரத்திலிருந்து பெறப்படும் காய்களில் இருந்து உருவாக்கப்படும் தூள் சிகையை அலசவும் கழுவவும் பயன்பட்டுவருகிறது. ஆகையால் இதைச் சிகைக்காய்த் தூள் என அழைக்கிறோம்.


இதை இந்தியா மற்றும் பண்டையத் தமிழ் மரபில் பல நூற்றாண்டுகளாக இயற்கை முடிப்பராமரிப்பாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.


இச்செடியின் சிறப்பே இதன் காய்களால் என்றுச் சொன்னால் மிகையல்ல. இதன் காய்களைப் பொடித்து பெறப்படும் தூளைப் பல நூற்றாண்டுகளாக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன் படுத்தி வந்துள்ளனர்.


முடிபராமரிப்பிற்கு நமது வீட்டிலேயே சிகைக்காய் பொடியை எவ்வித ரசாயன கலப்பில்லாமல் செய்து கொள்ளலாம்.


சீயக்காய் - 1/2 கிலோ

பச்சைப்பயறு - 200 கிராம்

வெந்தயம் - 100 கிராம்

காய வைத்த கறிவேப்பிலை -

காய வைத்த பன்னீர் ரோஜா இதழ்கள்

காய வைத்த செம்பருத்தி இலைகள், பூக்கள்

காய வைத்த கருந்துளசி இதழ்கள் - ஒரு கைப்பிடி

காய வைத்த வேப்பிலை இதழ்கள் - ஒரு கைப்பிடி

சீயக்காயை வெய்யிலில் காய வைக்கவும். எல்லாவற்றையும் சீயக்காய் அரைக்க என்று தனியாக இருக்கும் மிஷினில் அரைத்து சிறிது நேரம் நிழலில் உண்ர்த்தி காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சாதம் வடித்த கஞ்சியில் இந்த சீயக்காய்ப் பொடியைக்கலந்து தேய்த்துக்கொண்டால் கூந்தலுக்கு மிகவும் நல்லது.பொடுகு மற்றும் இதர முடிகளை தாக்கும் நோய்களை நீக்கி முடி உதிர்தலை நிறுத்தும் தன்மை இந்த மூலிகை பொடிக்கு உண்டு.


முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்கும் பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

 

சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். அதோடு சேர்த்து அது மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.

 

உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.


பெரும்பாலான செயற்கை முடிப்பராமரிப்புப் பொருட்களில் சிகைக்காய் தூள் கலக்கப்படுகின்றன.

இதற்கு பூஞ்சான் எதிர்ப்பு பண்பு, சரும மற்றும் தோல் நோய்களுக்குச் சிறப்பான மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. மலமிளக்கியாகவும், இருமல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தவல்லது.


இதன் மரப்பட்டைகளில் இருந்து சேப்போனின் என்னும் பொருள் பிரித்து எடுக்கப் படுகிறது. இதன் இலைகளில் டானின், அமினோக் காடிகள் மற்றும் புரதங்கள் நிறைந்து காணப்படுகிறது.


இதன் இலைகளில் புளிமத்தன்மைக் கூடுதலாகக் காணப்படுவதால் இதை சட்டினி தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.


இதன் காய்களில் இருந்து உருவாக்கப்படும் பொடியில் உள்ள அமில மற்றும் கார நெறித்தன்மை முடியின் பாதுகாப்பிற்கும், அதனில் உள்ள நுரைக்கும் தன்மை முடியைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இதனால் இதை தலையில் தேய்த்து  எண்ணெய் பிசுக்குகளை நீக்கி முடியை பாதுகாப்பாய் சுத்தப்படுத்த தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.


நன்கு வறட்சியை தாங்கி வளரும் சிகைக்காய் மரங்களை சீமைக்கருவேல் மரங்களுக்கு பதிலாக வளர்க்கலாம்.வறண்ட ஓரளவு மழை குறைவாக உள்ள மலையடிவாரங்களில் இவற்றை பருவமழை காலங்களில் நடவு செய்யலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி