கப சுத்தம்

 *                 மரணத்தை வெல்ல 

சித்தர்கள் சொன்ன மாபெரும் ரகசியம் 


  உடலில் தோன்றும் கோழை எனும் கபத்தை அன்றாடம் நாம் நீக்கினால் அதன்மூலம் அதிக நாட்கள் வாழலாம் என்பது சித்தர்கள் கருத்தாகும்


  கபம் எனும் வழலையை நீக்க சித்தர்கள் சொன்ன வைத்திய முறை இது


   கரிசலாங்கண்ணி இலையை பறித்து இதில் பல் தேய்த்து வாய் கொப்பளித்து விட்டு அதன்பின் கரிசலாங்கண்ணி இலையை சிறிது எடுத்து மைபோல அரைத்து 


    இதனுடன் சிறிது பசு நெய் சேர்த்து இரண்டையும் குழைத்து நமது வலது கை பெருவிரலின் நுனியில் இதை தடவி விரலை நமது உண்ணாக்கு மேலே வைத்து உள் நாக்கை சுற்றி விரலை லேசாக சுழற்றி தேய்த்து வந்தால்


      அப்போதே கபாலத்தில் சேர்ந்துள்ள கபநீரும் நரம்பு மண்டலத்தில் உள்ள வழலை எனும் விஷமான கப நீரும் தொண்டையில் உள்ள கோழையும்


    கற்றாழையின் சாறினை போல வழ வழ என்று விளக்கெண்ணையை போல  தாரைதாரையாக வாய் வழியாக வந்து வெளியே விழும் இதுவே வழலையை வெளியேற்றும் சித்தர்கள் சொன்ன முறையாகும்


   இந்த கோழையை தான் நம்மோடு இருக்கும் நம்முடன் வாழும் எமன் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் 


மேலும்


   கோழையை வெளியேற்றுவதன் மூலம் சுவாசப்பையில் உள்ள சளிகளும் வெளியேறிவிடும் பித்தப்பை கெட்டு பித்தம் அதிகமாக உடலில் தேங்கி இருந்தாலும் இதுவும் கோழையாக உடனே வெளியே வந்துவிடும் 


 வெள்ளை கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி கோழையை தினமும் வெளியேற்றுவதால் கிடைக்கின்ற அதிசய பலன்களை பற்றி பார்ப்போம்


   தினமும் கபால நீரை வெளியேற்றுவதால் இதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்தம் சுத்தமாகி அதில் இருக்கின்ற விஷ நீர் வெளியேறி விடுகின்றது 


  விஷ நீர் வெளியேறி விடுவதால் தொண்டையில் உள்ள எமன் எனும் கோழை உற்பத்தியாகாமல் தடுக்கப்படுகின்றது


 தினமும் கபால நீரை வெளியேற்றுவதால் இதன் மூலம் நரம்பு மண்டலத்தில் சுரக்கின்ற விஷ நீரும்


  வழலை எனும் கபம் வெளியேறி விடுவதால் இதன் மூலம் தொண்டையில் உள்ள எமன் எனும் கோழையும்


   தினமும் கபால நீரை வெளியேற்றுவதால் இதனால் நரம்பு மண்டலத்தில் உள்ள ரத்தத்தின் அசுத்தங்களும்  வெளியேறி ரத்தம் சுத்தமடைகின்றது


  மேலும் வழலையை வெளியேற்றி விடுவதால் தொண்டையில் சளி உற்பத்தியாதற்கு வழி இல்லாமல் போகின்றது


  சளி உடலில் இல்லாத காரணத்தினால் சுவாசப்பை சுத்தமாகி  இதன் மூலம் சீரான சுவாசம் நடைபெறுகின்றது 


  சீராக சுவாசம் நடைபெறுவதால் உடலில் பித்தம் எனும் உஷ்ணம் எளிதாக தணிந்து விடுகின்றது 


  பித்தம் தணிந்து விடுவதால் இதன் மூலம் கல்லீரலும் பித்தப்பையும் சீராக இயங்குகின்றன 


   கல்லீரலின் இயக்கம் சீராக இருப்பதால் இதன் மூலம் மலம் என்னும் கழிவும் சிறுநீர் கழிவும்  சிக்கலின்றி எளிதாக வெளியேறி விடுகின்றது


   உடல் கழிவுகள் உடலில் தங்காததால் இதனால் பெருங்குடலும்  சிறுநீரகமும் பலகீனம் அடையாமல் வலிமையுடன் இயங்குகின்றன


  நரம்பு மண்டலம் எப்பொழுதும் சுத்தமாக இருப்பதால் பியூட்டரி சுரபியும் மூளையும் நன்றாக இயங்குகின்றது இதனால் சீரான சுவாசம் நடைபெற்று ஆயுள் கூடுகின்றது


   அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்குவதால் நோய்கள் எதுவும் உடலில் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகின்றது இதன் மூலம் ஆயுள் நீட்டிக்கப்படுகிறதுது


கரிசலாங்கண்ணியை சாப்பிடும் முறை


 ஐம்பது மில்லி கரிசலாங்கண்ணிச் சாறுடன் சிறிது தேன் கலந்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் உடல் உறுப்புகள் மற்றும் உடலில் உள்ள சப்தசத்துகள் அனைத்தும் வலிமை பெற்று ஆரோக்கியம் உண்டாகி நீண்ட நாள் வாழ வழி வகுக்கின்றது 


  மேலும் கரிசலாங்கண்ணியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் முகத்தில் ஒரு வசீகரம் உண்டாகும் இளமை நீடிக்கும் நோயில்லாமல் நீண்ட நாட்கள் வாழலாம்


இதுவே நிஜம் 

இதுதான் சித்தர்களின் கருத்து  


             நோயின்றி வளமுடன் வாழ   

                           வாழ்த்துக்கள்

                பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி