மன அழுத்தம்

 🔯 #பைத்தியம்_ஏன்_ஏற்படுகிறது❓

#அதன்_காரணம்_என்ன❓


👉 மனசு பாதித்தால் மனஅழுத்தம் வரும்❗


👉 மனஅழுத்தம் வந்தால் மனநோய் வரும்❗


👉 மனநோய் வந்தால் பைத்தியம் பிடிக்கும்❗❓


⭕ உடல்ரீதியான குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது.


அழுக்கடைந்த அரை குறை ஆடைகளுடன், சுத்தமில்லாமல் சாலையில் ஏதேதோ புலம்பிக் கொண்டு செல்பவர்கள் தான் மனநோயாளிகள் என்றும் பைத்தியம் என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் அதிக மனஅழுத்தம், பயம் கொண்டவர்களும் மனநோயாளிகள் தான் என்றால் அதை நம்ப முடிகிறதா❓


"மென்ட்டல்', "பைத்தியம்', 

"லூசு', "கிறுக்கன்' என முத்திரை குத்தப்பட்டு வாயில் எச்சில் ஒழுக, குளிக்காமல் தானாக பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போல பயங்கரமாக, வித்தியாசமாக இருந்தால்தான் மன நோய் எனக் கருத வேண்டாம்.


""சோம்பேறி'', ""டென்ஷன் பேர் வழி'', ""உதவாக்கரை'', ""முரடன்-முன் கோபி'', ""நேரம் சரியில்லை'' என எந்த வேலைக்கும் போகாமல், எந்த வேலைக்குப் போனாலும் சில மாதங்களுக்கு மேல் நிலைக்க முடியாமல் இருப்பதும்கூட மன நலப் பிரச்னைதான்.


இப்படி பொதுவான மன நலப் பிரச்னைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மது, பான் மசாலா, தூக்க மாத்திரைகள் ஆகியவற்றுக்கு அடிமையாவது, கணவன் அல்லது மனையின் நடத்தையில் சந்தேகம்,


மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசுவதாக தனக்கு எதிராக செயல்படுவதாக சந்தேகம், செய்வினை, சூனியம் செய்து விட்டதாக சந்தேகம் உள்ளிட்டவையும் மன நலப் பாதிப்புக்கான அறிகுறிகள்தான்.


👫▶ குழந்தைகளுக்கு………❗


ஆனால் குழந்தைகளுக்கான பாதிப்பு மேற்சொன்னவாறு வெளிப்படாது. மாறாக எப்பொதும் எரிச்சல், கோபம், கார்ட்டூன் சேனல்கள் போன்றவற்றுக்கு அடிமையாதல், படிப்பில் நாட்டம் - கவனம் குறைந்து மோசமாவது,


சரியாக சாப்பிடாமல் தனிமையை நாடுதல், அதீத குறும்பு, வயதாகியும்கூட தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது, விரல் சூப்புதல், நகம் கடித்தல், பயங்கர பிடிவாதம் ஆகிய ஏதேனும் அறிகுறிகள் வெளிப்படலாம்.


🔞 குடிப்பழக்கமும் மனப் பிரச்னை தான்❗


குடி, பான்பராக், ஹான்ஸ், புகையிலை, மாவா, கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களும் சர்க்கரை நோய் போன்று ஒரு நோய்.


தீவிரமான குடிநோயாளிகூட தனக்கு குடிநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டார். அது அவர்களின் ஈகோவை பாதிக்கும். குடியால் உடல் நலம், குடும்ப அமைதி, மன அமைதி, வேலை / தொழிலில் சரிவு, மானம் / மரியாதை, கௌரவம் என படிப்படியாக எல்லாவற்றையும் இழக்க நேரிடும்.


""நான் நினைத்தால் நிறுத்தி விடுவேன், மலைக்கு போனப்பகூட ஒரு மாதம் குடிக்கவில்லை. நான் குடிகாரன் இல்லை'' என்பார்கள். சும்மா ஜாலி, கவலை, தூக்கமின்மை என அவர்களின் ஈகோ அவர்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றிக் கொண்டிருக்கும்.


ஒருவரது குடிப் பழக்கம் காரணமாக, அவரது குடும்பம், மனைவி, குழந்தைகள் தினமும் அனுபவிக்கும் துயரங்கள் மிகவும் வேதனையான ஒன்று. இருந்தபோதிலும் நோயாளியை நினைத்து நொந்து கொள்வதைவிட சிகிச்சை அளிப்பதே அறிவியல்பூர்வமானதும் அறிவுப்பூர்வமானதும் ஆகும்.


👈காதில் யாரோ பேசுவதுபோல மாயக் குரல் கேட்பது, கண்களில் மாயத் தோற்றம் தெரிவதுதான் இந்த நோயின் முக்கியப் பாதிப்பு. காதுகளில் கேட்கும் மாயக்குரல் பாதிக்கப்பட்டவர்களை வழி நடத்தும் அந்தக் குரல் என்ன சொல்கிறதோ அதற்கேற்றாற்போல் செயல்படுவார்கள். அந்தக் குரலுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனியாகப் பேசுவார்கள். அந்தக் குரல் அவர்களின் மூளையிலிருந்துதான் உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. 


தன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்போதும் பின் தொடர்கிறார்கள் என்பதுபோன்ற சந்தேகங்கள் இருக்கும். இதனால் அதிக பய உணர்ச்சி ஏற்பட்டு, அன்றாடம் பின்பற்றும் குளிப்பது, முகம் கழுவுவது போன்றவற்றைக்கூடத் தவிர்ப்பார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழகுவதைக் குறைத்து தனிமையை நாடுவார்கள். 


'ஏதோ, ஒரு குரல் கேட்கிறது' என்று மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது மற்றவர்கள் 'இல்லை'யென்று மறுத்தால், அவர்கள்மீது கோபம் உண்டாகித் தாக்க முயல்வார்கள். அனைத்து நடவடிக்கைகளும் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு காணப்படும். அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கலாம் என்றாலும் 18-லிருந்து 30 வயதில் அதன் அறிகுறிகள் வெளிப்படும். 


🇨🇭 அறிவியல் காரணங்கள்❓


👉 மூளையில் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல் அனுப்பும் பணியை `டோபமைன்' (Dopamine) என்ற அமிலம் செய்கிறது. இந்த அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்தால்.மேலும்

மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் செரட்டோனின் குறையும்போது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாகக் குறைகிறது. மற்றும் டோபமைன், குளூட்டமேட் என்ற ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்களாளும் இந்தக் குறைபாடு ஏற்பட்டும்………


👉 மூளை நரம்புகளில் சிந்தனை நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது என்பதால், இது சிந்தனையை வெகுவாகப் பாதித்தும்…… 


மனச்சிதைவு ஏற்பட்டு மனஅழுத்தம் மற்றும் மனநோய் ஏற்படும். பின் நாளில் இதுவே பைத்தியம் பிடிக்க காரணமாக அமைகிறது.


⏩ இது மரபணுக்கள் மூலமாகப் பரம்பரையாகத் தொடர்ந்துவர வாய்ப்பு அதிகம். 


சிலருக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தானாக ஏற்படும். 


சிலருக்கு வாழ்க்கையின் ஏதாவது முக்கியப் பிரச்சினைகளின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தின் போதோ இழப்புகளின் போதோ அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்தும்…


மனஅழுத்தம் மற்றும் மனநோய் ஏற்படும். பின் நாளில் இதுவே பைத்தியம் பிடிக்க காரணமாக அமைகிறது.


⭕ மன நல பாதிப்புகளுக்கான மற்ற அறிகுறிகள்❓


◀தூக்கமின்மை, பசியின்மை, 


◀அன்றாட விஷயங்களில் நாட்டம் - ஈடுபாடு இல்லாமை


◀எப்பொழுதும் உடலில் ஒரு அசதி, 

சோர்வு ,பயம், பதற்றம், நடுக்கம், குழப்பம்


◀ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப மனதில் வந்து தொல்லை கொடுப்பது 


◀கை கழுவுதல், சுத்தம் செய்தல் ஆகியவற்றை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பது.


◀கணவன் - மனைவிக்குள் தினமும் சண்டை சச்சரவு சந்தேகம்.


◀தனியாக இருக்கும்போது காதில் குரல் கேட்பது


◀சாமி வருவது, பேய் பிடிப்பது 

ஆகியவையும் ஒரு விதமான மன நல பாதிப்பே.


◀சிக்கலான சமூகம், 


◀குடும்பம் மற்றும் அலுவலகத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள், 


◀உடலியல் தொல்லைகள், 


◀மனோரீதியான தாக்கங்கள், 


◀குடும்பத்தில் பிரச்சனை, 


◀இளம்வயதில் ஏற்படும் கோளாறுகளும், 


மன அழுத்தம் மற்றும் நோய் ஏற்பட காரணங்களாகின்றன. சிலருக்கு ஒரேயொருமுறை ஏற்படும் பெரிய அதிர்ச்சியாலும் மன அழுத்தம் ஏற்படக்கூடும். 


இதற்கெதிரான மனவலிமை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகிறது.

குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் நமக்கு உதவியாக அமைகிறது. 


உதாரணமாக, ஒரு செயலை செய்யும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன், முழுதிருப்தியுடன் அந்த வேலையை செய்கிறோம்.


🉐 மன அழுத்தத்தை கண்டறிய

உதவும்  முக்கிய அறிகுறிகள்❓


◀தூக்க தொந்தரவுகள் 


◀பசியின்மை  


◀குறைவான கவனம், 


◀ஞாபகமறதி 


◀குணத்திற்கு மாறான தவறுகள், 


◀தாமதங்கள் 


◀கோபம் 


◀வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் 

மனவியல்ரீதியான வெளிப்பாடுகள் 


◀மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு படபடப்பான நடவடிக்கைகள்.


👉 எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப் பட்டுள்ளன……⬇


▶படபடப்பு, 


▶அதிகரிக்கும் இதய துடிப்பு அதிகரிக்கும், 


▶மேலோட்டமான மூச்சு வாங்குதல்  


▶நடுக்கம் குளிர் அல்லது வேர்த்து வழிதல் 


▶இறுக்கமான தசைகள், 


▶வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், 


▶முறுக்கிய கைகள், 


▶பற்களை கடித்தல் 


▶வயிற்று உபாதைகள் 


▶அடிக்கடி சிறுநீர் கழித்தல் 


▶முடி கொட்டுதல்  


▶கவனம் செலுத்துவதில் சிரமம் 


▶முடிவெடுப்பதில் சிரமம் 


▶தன்னம்பிக்கை இழத்தல்  


▶அடக்கமுடியாத ஆசைகள் 


▶தேவையற்ற கவலைகள், படபடப்பு 


▶அதீத பயம் 


▶குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள் 


🔴 மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்❓


➡வயிற்று நோய்கள்


➡போதைக்கு அடிமையாதல்


➡ஆஸ்த்துமா


➡களைப்பு


➡படபடப்பு,


➡தலைவலி


➡இரத்த அழுத்தம்


➡தூக்கமின்மை


➡வயிற்று, ஜீரண கோளாறுகள்


➡இருதய நோய்கள்


➡மனநிலை பாதிப்பு


➡உடலுறவில் செயல்பட இயலாமை


➡சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்


🈺▶ #பெரியவர்களுக்கான………

மன அழுத்தம் பொது அறிகுறிகள்❓


➡தெளிவற்ற சிந்தனை


➡நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்


➡மாறிவரும் அதிக சந்தோஷம் / அதிக கவலை


➡மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்


➡தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது


➡உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது


➡அளவுக்கு அதிகமான கோபம்/ குற்றவுணர்வு


➡இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல்


➡தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்


➡தற்கொலை எண்ணங்கள்


➡பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல் கொண்ட குடல் நோய் / Irritable  Bowel Syndrome)


➡அளவுக்கு அதிகமான, கட்டுப்படுத்த முடியாத மது / போதைப் பழக்கம்


➡எதிலும் நாட்டமின்மை


➡திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது  (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது)


➡காரணமில்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது


➡எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது


➡தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல்


➡அதீதமாக சுத்தம் பார்ப்பது


➡தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ/ ஆசையோ இல்லாமல் இருத்தல்


➡பாலுறவில் வெறுப்பு / துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது


➡விரைவாக விந்து வெளியேறுதல் / உச்சகட்டம் அடையாதிருத்தல் / அடைவதில் தாமதம்


➡வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ,  தன்னைத் தானோ துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு  கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.)


🈹▶ #டீன்_ஏஜ்_பருவத்தினருக்கான………

மன அழுத்தம் பொது அறிகுறிகள்❓


➡பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்


➡தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது


➡உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்


➡உடல் ரீதியான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுதல்


➡பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்


➡உடல் எடை குறித்த மிகுந்த பயம் / பதற்றம்


➡பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை


➡அடிக்கடி கோபப்படுதல்


➡கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம்


➡பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது


➡குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்


➡திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும்  செயல்பாடுகள்.


🈁👉 #சிறு_குழந்தைகளுக்கான………

மன அழுத்தம் பொது அறிகுறிகள்❓


➡பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்


➡முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்


➡அதிகமான கவலை / பதற்றம் / பயம்


➡ஒரிடத்தில் உட்கார முடியாமல் நிலைகொள்ளாமல் இருத்தல் (Hyperactive)


➡தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்


➡தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்


➡அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums)


➡கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / Poor concentration)


➡வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது


➡ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை (not able to follow directions)


➡அம்மாவின் கண்ணை பார்க்காமலிருத்தல், சிரித்தால் பதிலுக்கு சிரிக்காமல் இருத்தல்


➡கற்றல் குறைபாடுகளான எழுதுவது, படிப்பது கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள் (Learning Disabilities)


➡பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல்.


🔴 மனசு பாதித்தால் மனஅழுத்தம் வரும்❗மனஅழுத்தம் வந்தால் மனநோய் வருமம்❗மனநோய் வந்தால் பைத்தியம் பிடிக்கும்❗


🔯#சித்த_மருத்துவம்_என்ன_சொல்கிறது❓


❓ பைத்தியம் ஏன் ஏற்படுகிறது❓

 


▶ உன்மத்தம் (அ) உன்மாதம் என்கிற பைத்தியமானது வாயு,பித்த,சிலேத்தும சரீர தோஷத்தாலும்…


▶ ராஜோ,தமோ குணமாகிய………

மனோதோஷத்தாலும் 


▶ புத்தி,உணர்வு,நினைவு,பக்தி, ஒழுக்கம்,செயல்……


என்கிற ஆறும் சிதைவுற்று உண்டாவதாக நம் சித்த நூல்கள்  கூறுகின்றன. 


👉#மேலும்…… 


➡ வாயு, பித்த, சிலேத்துமத்தால் மூன்று வித பைத்திய நிலைகளும், 


➡ வாத,பித்த,கபம் பின்னிக் கொள்ளுவதால் ஓர் வகைப் பைத்தியமும், 


➡ மன நோயால் ஒன்றும், 


➡ விஷத்தால் ஒன்றும் 


ஆக அறு வகையாக, குணங்குறிகளைக் கொண்டு பிரிக்கப்பட்டள்ளது.


👉 #அதன்_அறிகுறிகள்❓


🈯 #வாதபைத்தியம் 🈯


உடல் இளைத்துக் கொண்டு வரும்


அதிமாகத் அங்கும் இங்கும் திரியும்


முட்டுச் செய்கைகள் காணும்.


மிக அசிங்கமான பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்து கொள்ளும்


உணவு கொள்ள விருப்பம் தெரிவித்து , பின் அது கிடைத்தவுடன் அவற்றை கவமதிப்பர்.


மேல் நோக்கிய கண்களுடன் பேசுவர், சிரிப்பர்.


🈹 #பித்தைபைத்தியம் 🈹


கோபம் அதிகமிருக்கும்.


காண்போரை விரட்டி அடிக்க ஒடுவர்.


குளிர்ச்சியை விரும்புவர்.


ஆடைகளை விரும்ப மாட்டார்கள்.


🈶 #சிலேத்தும_கப_பைத்தியம் 🈺


தனித் தே இருக்க விரும்பும்.


வெளியில் திரியும்.


சுத்தம் பிடிக்காது.


அருவருப்பாய் இருப்பர்.


⭕ மனநோயால் உண்டான பைத்தியம்


மனநோயல் உண்டான பைத்தியம் நிலையானது ஏதேனும் ஒர் இழப்பை பொறுக்க முடியாமல் வந்ததாக இருக்கும். உதாரணமாக மனதுக்குப் பிடித்த நபர், பொருள், சொத்துக்கள் இவற்றின் இழப்பால் தாக்குதல் அடைத்து பரிதாபத் தோற்றமளிப்பார். தூங்க மாட்டார்.


#மேலும்_சில……


⭐ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாயக்குரல்கள் காதில் பேசுவது போன்ற கேட்பது.


⭐ பிறர் கண்களுக்குத் தெரியாத உருவங்கள் தங்களுக்குத் தெரிவதாகச் சொல்வது.


⭐ தானாகப் பேசிக்கொள்வது மற்றும் சிரித்துக்கொள்வது மற்றும் சம்பந்தமில்லாத பேச்சுகள்.


⭐ சந்தேக எண்ணங்களால் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது.


⭐ எதிலும் நாட்டமில்லாமல் இருப்பது, சுத்தம் பேணுவதில்கூட மந்தமாக இருப்பது.


⭐ தூக்கமின்மை, சாப்பிடுவதில் வித்தியாசம்.


⭐ ஒரே இடத்தில், ஒரே நிலையில் மணிக்கணக்கில் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது.


⭐ தற்கொலை எண்ணங்கள், யாரோ தன்னைச் சாகத் தூண்டுவதாகச் சொல்வது.


⭐ தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத தன்மை, எதிலும் நாட்டம் இல்லாமல் சோம்பலாக இருப்பது.


⭐ பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்.


💊 சிகிச்சை என்ன❓


நோயாளிகளைக் குறை கூறிக்கொண்டே இருப்பது, அவர்களைத் திட்டுவது, அடிப்பதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆறுதல் அளித்து, அவர்கள் சிகிச்சைபெற துணையாக இருக்க வேண்டும். சமூகம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கேலி செய்வது, அவர்களிடம் பழகாமல் ஒதுங்குவது, வேலை கொடுக்காமல் தவிர்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது" 


விதி, தலையெழுத்து, பில்லி, சூனியம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், ராசிக்கல், பெயர் மாற்றம் போன்றவை 

மனப்பிரச்னைக்கு கண்டிப்பாக தீர்வு கிடையாது. 


அந்த நேரத்தில் ஒரு திருப்தியும், அமைதியும் கிடைக்குமே ஒழிய, நிரந்தரத் தீர்வு கிடைக்காது.


அதே போல, இன்று பிரபலமாகி வரும் யோகா, தியானமும் மட்டுமே தீர்வு கிடையாது. முறையான அணுகுமுறையும், அறிவியல்பூர்வமான சிகிச்சையும்தான் தீர்வாகும்.


🇨🇭 #சில_வீட்டு_வைத்தியம் 🇨🇭


⭕ பைத்தியம் சித்தம் பிரமை 


💊 அஸ்வகந்தா மாத்திரை உணவுக்கு முன் தினசரி காலை , இரவு  1/2 டீஸ்பூன் சாப்பிட்டுவரவும். மனம் அமைதி பெறும்.


அஸ்வகந்தா பொடி, ஜாதிக்காய் பொடி,

சடமாஞ்சில் பொடி,கசகசா பொடி

ஆகிய நான்கும் சமஅளவு சேர்த்தது கலந்து வைத்து கொண்டு இரவு உணவுக்கு பின் சூடாண பாலில் கலந்து குடித்து வந்தால் தூக்கம் நன்றாக வரும்.

மனது அமைதிபெரும். நரம்பு தளர்ச்சி நீங்கும்.


💊அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.


💊👉தேவையான பொருட்கள்❓


வல்லாரை இலைச்சாறு - 50 மி.லி., 

நாட்டு சர்க்கரை தேவையான அளவு, பால் 250 Ml. 


ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து,  பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை, புத்தி மந்தம்,தடுமாற்றம்,பேதலித்தல்,மூளை நரம்பு தளர்ச்சி மாறி அற்புதமான நினைவாற்றலை  தருகிறது.


💊ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலைதலைக்குத் தேய்த்துக் குளிக்கவைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.


💊 பருத்தி விதை, ஏலக்காய், திப்பிலி, நெல்பொரி சேர்த்து இடித்து பொடியாக்கி சர்க்கரை சேர்த்து 2 கிராம் அளவு 3 வேளை சாப்பிட்டு வந்தால் பைத்தியம் குணமாகும்.


🇨🇭திரிபலா சூரணம்.🇨🇭


கடுக்காய் 100 கி

நெல்லிக்காய் 100 கி 

தான்றிக்காய் 100 கி 


எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.


👉 எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்❓


உணவுக்கு பின் 


❓காலை 1000 மி கி


❓இரவு 1000 மி கி 


சூடான வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.


⭐பயன்கள்❓


வாதம்,பித்தம்,கபம் இவைகளை சமநிலைபடுத்தும்.


🇨🇭 இங்கே மன அழுத்தம் குறைக்கும் உணவுகள் சில...❓


* மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 


* மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.


* உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 


* பதற்றமும் கற்பனைகளும் நிறைந்த இரவுத் தூக்கத்தில் உழல்பவர்கள், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். நல்ல பலன் கிடைக்கும். 


* மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 


* தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. 


* எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும்; செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 


* உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் குழந்தைகளுக்கு கவனச் சிதைவு நோயை ஏற்படுத்தக் கூடியவை. நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். 


⭕ சரியான முறையில் சிகிச்சை பெறாத போது மன அழுத்தம் பலவிதங்களில் வெளிப்படுகின்றன. 


தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும். பைத்தியம் பிடிக்கும் உயிரை மாய்க்கும்…❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி