குண்டலீனி என்ற மகாசக்தி

 நம்முடைய ஜீவன் தன்னுடைய அனைத்து ஆற்றலையும் நமக்கு தரும்போது அது தன்னை காக்க என்பதை உணர்தலே சனாதனம்.


இறைவன் ஏன் உடலை எடுக்கிறான்?


உணர்வினால் இறைவனை உணர்ந்து நம்முடைய ஜீவகாந்த ஆற்றலை நாம் நம்முள்ளே சேமிக்கும் போது பரிணாமத்தின் அடுத்த நிலையான ஒளி நிலையை நம்முடைய அனைத்து செல்களும் அடையும்.


அவ்வாறு அடையும் போது இந்த ஜீவன் அழியா நிலையை எய்தும்.


அழியா நிலையில் ஜீவன் சிவனாக மாறும்.


சிவம் உணர்வுடன் தன் பணியை செவ்வனே இந்த ஜகத்தில் தொடரும்.


ஆக சனாதன தர்மம் என்பது ஜீவனை சிவமாக மாற்றி, தானாய் தன்மயமாய் ஆகும் மார்க்கமாகும்.


ஆக இந்த நிலையை எய்த உதவும் சக்தி என்ற ஜீவகாந்த ஆற்றலே விதையாகும். அந்த விதையாய் விந்தைபுரியும் ஆற்றலே "குண்டலீனி" ஆகும்.


"குண்டம் + இல்+ன்+இ"


இதில் குண்டம் என்ற சிரசு ஜீவனின் இல்லமாகும்.


ஸ்ரீநிவாஸ் 


ஸ்ரீ =திருவாகிய இறைவன்


வாஸ் = வாசம் செய்தல்.


எது வாசம் செய்கிறது " இ' காரமாகிய ஆற்றல், சக்தி


எனவே தன்னுடைய சிரசில் மேகம் போன்று சேரும் ஆற்றல் " குண்டலீனி".


இதை வாசியோகத்தால் குளிர்வித்தால் மழை பொழியும். ஆம் அமிர்தமாகிய மழை பொழியும்.


"துப்பார்க்குத் துப்பாய  துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூவும்  மழை"


என உடல் என்ற கடலில் சேர்ந்த இரத்தம் என்ற சக்தியை சூடாக்கி அதை ஆவியாக்கி மழை மேகமாக பிட்யூட்டரி என்ற பெண்ணின் அமைப்பில் சேமித்து அந்த பெண்ணை தவத்தில் மூலம் பத்தினியாக்கி ( பற்று+ நீ), அந்த பெண் மழை பொழியட்டும் என்று ஆணையிட அமிர்த கலசமாகிய பீனியலில் இருந்து அண்ணாக்கின் வழியாக மழை பொழியும். இதுவே குண்டலீனி.


தர்மம்= தரு+அம்

உடலின் இயக்கத்திற்கு காரணமான சக்தி , அஉம் என "அ"கார என்ற அட்சரம், " உ"காரம் என்ற அட்சர இயக்கம், "ம" காரம் என்ற ஒழிவில் ஒடுக்கம் என்ற "ஓம்"காரம்" ("அம்").


ஆக ஜீவனாகிய சிவன் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் தரும் இயக்க ஆற்றல் அம் இதுவே தருமம்.


Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி