மூலம் தீர

 *அனைத்து விதமான மூலம் நோய் குணமாக*


 29 வகையான *இயற்கை மூலிகை* மருத்துவ குறிப்புகள்


*1.முளைக்கீரை, துத்திக்கீரை* இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், சுடினால் ஏற்படும் கட்டி, இரத்த  மூலம் போன்றவை எளிதில் சரியாகும்.


*2.பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறுபருப்பு* சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை தீரும்.


*3.வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம்* மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம், பௌத்திரக் கட்டி போன்றவை  குணமாகும். முடக்கத்தான் கீரையுடன் 2 கடுக்காயைத் தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும்.


*4.அகத்திக்கீரை* யை சாறாக எடுத்து  சாற்றில் 5 கடுக்காய்களை உடைத்துப்போட்டு கஷாயம் தயாரித்து, அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார்  அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்தால், மூலக்கிருமிகள், மூல எரிச்சல், மூலச்சூடு, இரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.


*5.கானாம்வாழைக் கீரையையும் துத்தி இலையையும்* சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் எளிதில் குணமாகும். துத்திக் கீரையுடன் சிறிது  மஞ்சள் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டினால், மூல நோயில் உண்டாகும் பௌத்திரக் கட்டி குணமாகும்.


*6.புளியாரைக் கீரைச் சாறில் துத்தி இலையை* சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும். சுக்காங் கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற  வைத்து அரைத்துச் சாப்பிட்டால் மூல நோய்கள், குடற்புண்கள் குணமாகும்.


*7.சுக்காங் கீரை, துத்திக் கீரை* இரண்டையும் சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே தீரும். பண்ணைக் கீரைச் சாறில்  நாவல் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் உடனே குணமாகும்.

டொ

*8.பாற்சொரிக் கீரைச், துத்திக்கீரை* இரண்டையும் அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் மூல நோய்கள் குணமாகும். பாற்சொரிக் கீரைச் சாறில்  வெந்தயத்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குணமாகும்.


*9.பத்து துத்தி இலைகள் ஐந்து சின்ன வெங்காயம்* சேர்த்து வாயில் இட்டு வெற்றிலை பாக்கு மெல்வது போல மென்று தின்று விழுங்கி வர மூல நோய் குணமாகும்.


*10.அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை* உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.


*11.அம்மான் பச்சரிசிக் கீரையை* அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும். 


*12.அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய்* சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 


*13.ஆகாயத் தாமரை இலை* யை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும். 


*14.ஆடையொட்டி இலை,வில்வஇலை* இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும். 


*15.ஆமணக்கு விதைப்பருப்பை* தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும். 


*16.அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம்* சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.


*17.மலச்சிக்கல் பிரச்னை* உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம்.


*18.ஆலம் பழத்தை* உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். 


*19.இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை* கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம். 


*20.இஞ்சியை* துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். 


*21.இலந்தை இலையை* அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.


*22.ஆவாரம்பூ* (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க…. ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா… மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும். 


*23.இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம்* போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா… மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா…. 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும். 


*24.வெள்ளை வெங்காயம்* ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா… பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும். 


*25.சோத்துக்கத்தாழை* மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது. 


*26.குப்பைமேனி.* இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க.சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.


*27.அருகம்புல்*       20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா… மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்.


*28.துத்தி இலையை விளக்கெண்ணெய்* விட்டு வெண்மை பெறும் வகையில் வதக்கி, *இளஞ்சூட்டோடு ஒத்தடம்* கொடுத்துவிட்டு அதன் மேலே கட்டி வைத்தால் ஆசன வாயில் அமைந்து துன்பம் தரும் மூலம், கட்டிகள், புண்கள் ஆகியன குணமாகும்.


*29.துத்தி இலையை நெய், பருப்பு* சேர்த்து காரத்துக்கு சிறிதளவு மிளகு சேர்த்து (மிளகாய் சேர்க்காமல்)  சமைத்து சுடுசாதத்தில் இட்டுப் பிசைந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூலங்களும் விரைவில் குணமாகும்.


*ஸ்ரீ உமையாள் இயற்கை மருத்துவமனை*

53/26, பொன்மேனி நாராயணன் தெரு, S.S.காலனி வடக்கு வாசல், மதுரை.

*9677778486*

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி