சீரான இரத்த ஓட்டம்

 🔯 #உச்சி_முதல்_பாதம்_வரை…❗


#தடையில்லா_இரத்த_ஓட்டம்…❗❓


👉 சீராக நடை பெற்றாலே உடம்பில் நோய்களே இல்லாமல் சீரான வளர்ச்சியையும் ,முழு செயல் திறனையும் காணமுடியும் இதற்கு, நாம் ,இதயத்தையும், இரத்த குழாய்களையும் பாதுகாத்தல் அவசியம் .


இரத்தம் மாபெரும் வேலையை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.


நமது உடலில் சுற்றோட்ட அமைப்பு சிறிது நேரம் கூட ஓய்வு எடுப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஏதோ ஒரு அடிபடும் பொழுதோ ரத்தம் வெளியேறும் பொழுதோ, ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை வரும் பொழுதோ மட்டுமே அதற்கு அக்கறை காட்டப்படுகின்றது. 5-6 லி ரத்தம் நம் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டே இருக்கும். 


🇨🇭 #இந்தரத்த_ஓட்டம்_தான்……


⭐ ஆக்ஸிஜனை செல்களுக்கும், சதைகளுக்கும் அளிக்கின்றது.


⭐ செல்களுக்கு அமினோ அமிலம், க்ளூகோஸ் மற்றும் பல சத்துகளை அளிக்கின்றது.


⭐ கழிவு, கார்பன்டை ஆக்ஸைடு, லக்டிக் ஆசிட், யூரியா இவற்றினை நீக்குகின்றது.


⭐ உடலினை நோயிலிருந்து காக்கின்றது.


⭐ ஹார்மோன்களை எடுத்துச் செல்கின்றது.


⭐ அமிலத்தன்மையினையும், உடல் உஷ்ணத்தினையும் சீராய் காக்கின்றது.


⭐ ப்ளேட்லெட்ஸ்-ரத்தம் இறுக உதவும்.


⭐சிகப்பு அணுக்கள்-ஆக்ஸிஜன் எடுத்து கார்பன்டை ஆக்ஸைடு நீக்குகின்றது. ஹைட்ரஜன் மூலம் றிபி அளவினை சீராய் வைக்கின்றது.


⭐வெள்ளை அணுக்கள்-கிருமிகளுடன் போராடுகின்றது.


⭐ப்ளாஸ்மா-ரத்தத்தின் 50 சதவீதம் இது. கார்பன்டை ஆக்ஸைட், க்ளூகோஸ், ஹார்மோன்கள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகளை சுமந்து செல்வதே இதுதான்.


இப்படி ஒரு மாபெரும் வேலை நம் உடலினுள் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.


⭕ #மோசமான_இரத்த_ஓட்டத்திற்கான #காரணங்கள்❓


▶சிகரெட் பிடிப்பது, 


▶மது அருந்துவது, 


▶காப்ஃபைன் பானங்களை அதிகம் பருகுவது, 


▶மோசமான உணவுப் பழக்கம், 


▶உடலுழைப்பு இல்லாமை மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசராமல் அமர்ந்திருப்பது.


▶கர்ப்பம், 


▶பதற்றம், 


▶சர்க்கரை நோய், 


▶தைராய்டு பிரச்சனைகள், 


▶உயர் கொலஸ்ட்ரால், 


▶உடல் பருமன், 


▶உயர் இரத்த அழுத்தம், 


▶இதய கோளாறுகள், 


▶இரத்த நாள கோளாறுகள், 


▶நரம்பு கோளாறுகள், 


▶இரத்த சோகை, 


▶ஆஸ்துமா, 


▶மூச்சுக்குழாய் அழற்சி, 


▶நிமோனியா, 


▶பெருந்தமனி தடிப்பு 


போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும். 


🔯 #மருத்துவக்_காரணங்கள்❓


➡ மருத்துவ ரீதியாக என்று பார்த்தல…… 


◀ஃபுட் அலர்ஜி, 


◀அனீமியா, 


◀நரம்புக் கோளாறுகள்,


◀உயர் ரத்த அழுத்தம், 


◀ஒபீசிட்டி, 


◀தைராய்டு, 


◀கொலஸ்ட்ரால், 


◀சர்க்கரை நோய் 


🔴 இந்த ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் ஏற்படும் அறிகுறிகள்❓


உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதென்றால் அதன் அறிகுறியாக முதலில் நம் உடல் வெப்ப நிலையில் மாற்றம் தெரியும்,அதன் பிறகு கால்களில் தான் அதிகப்படியான அறிகுறி தெரிந்திடும்.


கால் மறத்துப் போகுதல்,கால் வலி ஆகியவை உண்டாகும். இதனால் கால்கள் வலுவிழக்கும். இது அதிகமாகும் பட்சத்தில் உங்கள் எடையை தாங்கும் சக்தியை உங்கள் கால் இழந்திடும்.


முறையான இரத்த ஓட்டம் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்கும். ஆனால் இரத்த ஓட்டம் ஒருவருக்கு மோசமாக இருந்தால் கை மற்றும் கால்கள் அதீத குளிர்ச்சியை சந்திக்கும்.அதே நேரத்தில் குளிர்காய்ச்சல் கூட ஏற்படும். சிலருக்கு கை,கால்களில் வீக்கம் ஏற்பட்டு சரியாக இயக்க முடியாது.


◀பலவீனமான நகங்கள் மற்றும் முடி உதிர்வது


◀சரும நிற மாற்றம்


◀பசியின்மை


◀பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி


◀மோசமான மூளை செயல்பாடு


◀செரிமான பிரச்சனைகள்


◀விறைப்புத்தன்மை குறைபாடு


◀கைகள் மற்றும் பாதங்களில் வீக்கம்


◀களைப்பு


◀குளிர்ச்சியான கைகள் மற்றும் பாதங்கள்


🔯 மூளை செயல் திறன் குறையும்❗


15-20 சதவீத ரத்த ஓட்டம் மூளைக்கே தேவைப்படும். இது குறைந்தால் மறதி, ஓருங்கிணைப்பில் சிரமம் போன்றவை ஏற்படும். பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.


🔯 கை கால்கள் சில்லிப்பு❗


உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் கை, கால்களில் சில்லிப்பு, மரத்து போதல் ஏற்படும். காயங்கள் ஆற கூடுதல் காலம் ஆகும். எளிதில் உடையும் நகம், நிறம் மாறிய சருமம் இவை அறிகுறிகளாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வாறு குறைந்த ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம்.


🔯 சோர்வு


நாம் எப்படி சாப்பிடாவிட்டால் சோர்ந்து விடுவோமோ, உடலில் மிக நுண்ணிய அளவில் செல்களுக்கு தேவையான அளவு சத்தும், ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை என்றால் அவைகளால் செயல்பட இயலாது. சோர்ந்த தசைகள், மூச்சு வாங்குதல், அதிக சோர்வு இவை அதன் அறிகுறிகளாகத் தெரியும்.


🔯 பசியின்மை


ரத்த ஓட்டம் சீராய் இல்லை என்றால் சீரண மண்டலம் பாதிக்கப்படும். கல்லீரல் ரத்தத்தினை சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள சக்தியினையும் எடுத்துக் கொள்ளும். எடை குறைதல், பசியின்மை இவை சீரான ரத்த ஓட்டமின்மையின் பாதிப்பாக இருக்கலாம்.


🔯 நரம்பு வீக்க நோய்


இந்த பாதிப்பு சரியில்லாத இரத்த ஓட்டத்தின் அறிகுறி. இந்த ரத்த குழாய்களில் இருக்கும் வால்வுகள் வலுவிழக்கின்றன. இதனால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படலாம். 


#இரத்தஓட்டம்_சீராக_நடை_பழகு…


🇨🇭 நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்❓❗


🚶 நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். 


🚶 நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.


🚶 சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.


🚶 இரத்த ஓட்டம் சீரடையும்.


🚶 நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.


🚶 நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.


🚶 அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.


🚶 நரம்புகளை உறுதியாக்குகிறது.


🚶 எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.


🚶 எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.


🚶 உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.


🚶 கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.


🚶 மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.


🚶 உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.


🚶 நன்கு தூங்கிட உதவுகிறது.


🚶 கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.

ஆரோக்கியமான டயட்


🇨🇭 மெதுவாக நடப்பது 💊


🚶 எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.


🚶 இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும். 


🚶 உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். 


🚶 உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.


🇨🇭 பவர் வாக்கிங் 💊


🚶 கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது. 


🚶 இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும். 


🚶 தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.


🚶 இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.


🇨🇭 ஜாகிங் 💊


🚶 நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும். 


🚶 அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது. 


🚶 அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும். 


🚶 தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம். 


🚶 இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.


🇨🇭 ஆரோக்கியமான டயட் 


நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான டயட்டில் பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உணவுகள், நல்ல கொழுப்புக்கள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும். அதிலும் நைட்ரேட் நிறைந்த காய்கறிகள் உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். சில உணவுகள் இரத்த ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புக்களைத் தடுக்க உதவும். 

மீன், பசலைக் கீரை, க்ரீன் டீ, ஓட்ஸ், பெர்ரிப் பழங்கள், பூண்டு போன்றவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும்.


🇨🇭சரியான உடைகளை அணியவும்


உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சரியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டியது அவசியம். ஒருசில உடைகள் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும். அதில் உடலை இறுக்கும்படியான உடைகள் இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். எனவே மிகவும் இறுக்கமான உடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். டைட்ஸ், இறுக்கமான ஜீன்ஸ் போன்றவை மறைமுகமாக இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எப்போதும் சற்று தளர்வான உடைகளை அணியுங்கள்.


🇨🇭போதுமான உடற்பயிற்சி


உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கான சிறப்பான ஓர் வழி தான் உடற்பயிற்சி. அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. 10 நிமிடம் வாக்கிங் பயிற்சி செய்தாலே, இரத்த ஓட்டம் உடலில் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எளிய உடற்பயிற்சிகளின் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் ரன்னிங், நீச்சல், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். ஸ்கிப்பிங் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும் அற்புத பயிற்சியாகும். எனவே உங்களுக்கு பிடித்ததை தினமும் தவறாமல் செய்து வாருங்கள்.


🇨🇭மசாஜ்


நல்ல உடல் மசாஜ் கூட இரத்த ஓட்டத்தைத் தூண்டும். அதிலும் தோள்பட்டை பகுதிகளில் மசாஜ் கொடுக்கப்படும் போது, அதனால் உடலின் முக்கிய உறுப்புகளில் இரத்த ஓட்டம் மேம்படும். மசாஜ் செய்யும் போது, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மசாஜ் செய்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். முக்கியமாக வாரத்திற்கு 2-3 முறை ஒருவர் உடல் மசாஜ் எடுத்துக் கொள்வதால், உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.


🇨🇭ஹைட்ரோ தெரபி


தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். உடலுறுப்புக்களின் முறையான செயல்பாட்டிற்கு உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் அதிகளவு நீரைக் குடிக்க வேண்டும். தண்ணீர் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். எனவே தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் ஒரு சிறப்பான வழி சுடுநீரில் குடிப்பது. சுடுநீரில் குடிப்பதாலும், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.


🇨🇭மன அழுத்தத்தைக் குறையுங்கள்


மன அழுத்தம் உடலை பெரிதும் மோசமாக பாதிக்கும். அதில் ஒன்று மோசமான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுப்பது. ஒருவர் மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். அளவுக்கு அதிகமான மன அழுத்தம் இதயத்தின் செயல்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். முக்கியமாக மன அழுத்தம் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, இரத்த ஓட்டத்தைக் குறைக்கும். ஒருவரது மன அழுத்தத்தைக் குறைக்க ஏராளமான வழிகள் உள்ளன. அந்த வழிகளை முயற்சித்து இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.


🇨🇭உப்பு அளவை குறையுங்கள்


அளவுக்கு அதிகமான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகளவிலான உப்பு தமனிகளை தடிமனாக்கும். குறிப்பிட்ட சில உணவுகளில் சோடியம் ஏராளமான அளவில் உள்ளது. அதில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உறைய வைக்கப்பட்ட பிட்சா, கேன் சூப் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த உணவுகள் உட்கொள்வதை ஒருவர் தவிர்த்தால், மோசமான இரத்த ஓட்டத்தைத் தவிர்ப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.


💊பாதாம்


பாதாம் கொட்டைக்கு எப்பொழுதும் மிக உயர்ந்த இடம் உண்டு. இதில் உள்ள அபரிமித வைட்டமின் ஈ, கால்ஷியம், மக்னீசியம், நார்சத்து, ரிபோப்ளேவின், இரும்பு சத்து இவை எண்ணற்ற நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. இந்த கொட்டை சர்க்கரை நோயினால் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கின்றது.


💊பிஸ்தா


இது உடலுக்கு நல்ல கொழுப்பினைத் தருகின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய நோய் ஏற்படும் வாய்ப்பினை வெகுவாய் குறைக்கின்றது.


இதில் மக்னீசியம், காப்பர், வைட்டமின் பி6 இவை இருக்கின்றன. ரத்தத்தில் திடீர் என உணவுக்குப்பின் சர்க்கரை அதிகம் உயர்வதனை இது தடுக்கின்றது.


💊வால்நட் 


வாதுமை கொட்டை என தமிழில் கூறப்படுகின்றது. இதில் ஓமேகா 3, ஏ.எல்.ஏ. போன்றவை கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது. உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. இருதய பாதிப்பினை குறைக்கின்றது. உடலில் வீக்கத்தினை குறைக்கின்றது. மூளை செயல் திறன் கூடுகின்றது.


💊முந்திரி


முந்திரி கொட்டையில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், இரும்பு, காப்பர், மக்னீசிய சத்து இருக்கின்றது. சிறு அளவில் எடுத்துக் கொள்வது பல நோய்களை தவிர்ப்பதாக இருக்கும். 


💊காரட் சாறு குடித்தால் இதயத்திற்கு நல்லது .இதில் பெருமளவு கரோட்டீன் உள்ளது 


💊தினமும் காலையில் 6சின்ன வெங்காயம் ,1பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் வீட்டு வதக்கி சாப்பிடலாம் 


💊தேனில் ஊறிய பேரீச்சம் பழம் இதயம் வலிமை பெற உதவும் 


💊இதய தமணியை அடைப்புகள் இன்றி காத்திட காரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது 


💊முருங்கை கீரை சாற்றைசூப்பாக செய்து வாரம் 1முறைஅருந்துதல் நல்லது 


💊100மி .லி பாலில் 25கிராம் பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்தலாம் 


💊 செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை பூவிதழ்ழுடன்   நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனை வெல்லம் 

சேர்த்து அருந்தலாம். வலிமையான இதயம் இருந்தால் வளமான வாழ்வு பெறலாம்.


💊மாங்கொட்டையை காய வைத்து அதனுள் உள்ள பருப்பை எடுத்து நெய்யில் வறுத்து  பொடியாக்கி வைத்து கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை உடல் சோர்வு குணமாகும் ..


இதயத்தில் இரத்த ஓட்டம் சீராகி இதயத்தை பலப்படுத்தும்.சர்க்கரை பாதிப்பையும் தடுக்கிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி