தொண்டைப்புண் குணமாக
தொண்டை புண் விரைவில் குணமாக எளிய வீட்டு வைத்தியம்
ஒரு வேளை தயாரிக்க தேவையான மூல பொருட்கள்
1.மிளகு - 6 எண்ணிக்கை
2.மஞ்சள் தூள் - சிறிதளவு
3.பனங்கற்கண்டு - 5 கிராம்
4.தண்ணீர் - 100 மி.லி
செய்முறை
👉முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
👉பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
👉பிறகு மிளகு நன்கு இடித்து கொள்ளவும்.
👉மேலும் நீருடன் இடித்த மிளகு,மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
👉மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
👉தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த நீரை குடித்து வந்தால் தொண்டை புண்ணை எளிதாக ஆற்ற முடியும்.
👉மேலும் இந்த மருந்து சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாக பயன்படுகிறது.
Comments
Post a Comment