சீரக தண்ணீர்

 சித்தர்களின் பார்வையில் 

சீரக தண்ணீர்


  வாதத்தால் ஏற்படுகின்ற முடக்கு நோய் பித்தத்தால் ஏற்படுகின்ற உஷ்ண நோய்      சிலேத்துமத்தால் ஏற்படுகின்ற கபநோய்


  இந்த மூன்று விதமான காரணங்களால் வருகின்ற நோய்களை முற்றிலும் நீக்குவதற்காக சித்தர்கள் சொன்ன எளிதான ஒரு மருந்து 


அது தான்  சீரகத்தண்ணீர் 


  பொதுவாக உடலில் தோன்றும் உஷ்ணத்தை தணித்து சிலேத்தும குற்றத்தை நீக்கி வாதத்தை சமநிலைப்படுத்தி வாதம் பித்தம் சிலேத்துமம் எனும் முக்குணங்களில் மாறுபாடு ஏற்படாதவண்ணம் உடலை வளர்க்கும் ஒரு உயிர் சக்தி சீரகத்திற்கு இருக்கின்றது 


சீரக தண்ணீர் 

செய்முறை விளக்கம்


   பத்து கிராம் சீரகத்தை ஒரு பாத்திரத்திலிட்டு லேசான தீயில் கருகாமல்  வறுத்து இதில் வாசனை வருகின்ற பொழுது இதிலே ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி இந்த தண்ணீர் 800 மில்லியாக குறையும் வரை சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும்


  அதாவது சீரகத்தோடு சேர்த்து கொதிக்கின்ற தண்ணீரை ஐந்தில் ஒரு பங்கு சுண்டும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும் இதுதான் சீரகத்தண்ணீரின் செய்முறையாகும் இந்த முறையில் தயாரிக்கும் தண்ணீருக்குத் தான் மருத்துவ குணம் உண்டாகும்


  கிணற்றுத் தண்ணீர் அல்லது ஆழ்குழாய் தண்ணீரை கொண்டு சீரகத்தண்ணீரை தயாரிக்கவேண்டும்


பயன்படுத்தும் முறை


  உணவு சாப்பிட்டு முப்பது நிமிடம் வேறெந்த குளிர்ந்த  நீரையும் பருகாமல் அதன் பின்னால் சீரகத் தண்ணீரை இளஞ் சூடாக இருக்கின்ற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துகுடித்து வர வேண்டும் 


  ஒரு முறை குடிக்கின்ற பொழுது கால் லிட்டர் சீரக தண்ணீர் குடித்தால் அதுவே போதுமானது


     நாளொன்றுக்கு உணவை சாப்பிட்டு முடித்த பின்னால் மூன்று வேலையும் சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற அனைத்து உறுப்புகளின் இயக்கங்களும் முறையாக இயங்க சீரகத் தண்ணீர் உதவும்


  இதனால் 

கிடைக்கின்ற பயன்கள்


  முறையாக தயாரித்த சீரகத் தண்ணீரை குடித்து வந்தால் வாத குணத்தின் தன்மைகள் நமது உடலில் சமமான நிலையில் இருக்கும்


  உடலில் வாதத்தின் குணம் சமநிலையாய் இருப்பதால் 


   வாத குணத்தின் மாறுபாட்டால் வருகின்ற நரம்புவலி நரம்பு பிடிப்பு காக்காய் வலிப்பு பக்கவாதம் வாயு கோளாறால் வருகின்ற தொல்லை நோய்கள் ரத்த அழுத்தம் இதய நோய் போன்ற கடுமையான நோய்கள் எதுவும் உடலில் தோன்றாது


  மேலும் சீரகத் தண்ணீரை 

தினந்தோறும் குடித்து வருவதால் 


   பித்தத்தின் தன்மைகளும் நமது உடலில் மாறுபாடு ஏற்படாமல் சமமான நிலையில் இருக்கும் 


  பித்த குணம் நமது உடலில் சமநிலையாய் இருப்பதால்


  பித்த்தின் மாறுபாட்டால் உடலில் ஏற்படுகின்ற செரிமானபிரச்சனை வயிற்றுவலி வயிற்றுப்புண் மஞ்சள்காமாலை ரத்த சோகை இரத்த வாந்தி கல்லீரல் கோளாறு மேலும் கல்லீரல் கோளாறு காரணமாக வருகின்ற சர்க்கரை வியாதி  போன்ற கடுமையான நோய்கள் எதுவும் உடலில் தோன்றாது


அடுத்து 


  சீரகத் தண்ணீரை பருகி வந்தால் 

சிலேத்தும குணத்தின் தன்மைகளில் மாறுபடு எப்பொழுதும் ஏற்படாது


  சிலேத்துமத்தின் குணம் உடலில் சமநிலையாய்  இருப்பதால் 


    சிலேத்தும குணத்தின் மாறுபாட்டால் வருகின்ற மூக்கில் நீர் வடிதல் மற்றும் மூக்கடைப்பு சைனஸ்  இருமல் ஆஸ்துமா போன்ற கடுமையான சுவாச சம்பந்தமாக வருகின்ற நோய்கள் எதுவும் உடலிலே தோன்றாது


  நோய்கள் உடலில் தோன்றுவதற்கு சீரண குறைபாடு மூலகாரணமாக இருக்கின்றது அந்த குறைபாட்டை சீரகதண்ணீர் முழுமையாக நீக்குகின்றது


  சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் உண்ட உணவுகள் எளிதில் ஜீரணமாகி

நோய் வராமல் உடல் நலம் காக்கப்படுகிறது 


  சீரகத் தண்ணீர் குடித்தால்

உணவு மட்டுமல்ல உடலில் தோன்றும் நோய்களும் சீரகத்தண்ணீரால் ஜீரணம் செய்யப்படுகின்றன


சீரகம்  என்பதற்கான விளக்கம் இது


                  சீர்+அகம்=சீரகம்


         சீர் என்றால் முறையான 

           அகம் என்றால் உள்ளே 


  இதுதான் சீரகத்தின் குனத்திற்கு சித்தர்கள் சொல்லும் விளக்கமாகும்


அதாவது உள்ளே இருக்கின்ற உறுப்புகள் அனைத்தையும் சீராக இயங்க வைக்க சீரகம் உதவும் என்பதே இதற்குப் உண்மையான உட்பொருளாகும்


                             நோயின்றி

         வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 

                       சித்தர்களின்சீடன்

                    பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி