கர்பப்பை இறக்கம் தீர

 #கர்ப்பப்பை_இறக்கம்_ஏன் 

#ஏற்படுகிறது…❓❓


#அறிகுறி_என்ன❓


#தீர்வு_என்ன❓


பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப்பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம்.


👉இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்❗


குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள். 


‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது, 

5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும்.


கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.


பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது, மலச்சிக்கல், இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நரம்புகள் பலவீனமாக இருப்பது போன்ற பிற காரணங்களாலும், ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை இறக்கம் வரலாம். கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும். கர்ப்பப்பை உரசி, புண் உண்டாகும்.


கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப்படலாம். 


▶ இறங்கிய……… #கர்ப்பப்பையைத்தற்காலிகமாக

(#ஆங்கில_மருத்துவ_முறைபடி) மேலே தூக்கி வைக்க, #லூப் என்ற பிளாஸ்டிக் வளையம் உண்டு. ‘#ஸ்லிங்_ஆபரேஷன்’ மூலம் வயிற்றின் வழியே, கர்ப்பப்பையை மேலே தூக்கிப் பொருத்தலாம்.


குழந்தை பெற்று அதிக வயதான பெண்களுக்கு மட்டுமே இப்பிரச்னையின் போது, கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும். பிரசவத்துக்குப் பிறகு 

இடுப்பெலும்புத் தசைகள் உறுதிபெற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.


பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது, அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நலம். பருமன் இந்தப் பிரச்னைக்கான மிக முக்கிய காரணம் என்பதால், எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.


தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.

இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. 


💢💢 #காரணங்கள்❓


▶அதிக உடல் எடை இதனால் ஏற்படும் வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு, அது தரும் அழுத்தம்  முக்கியமான காரணமாகும்.


▶ ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம்.


▶ பிரசவத்தின் போது  குழந்தையின் எடை அதிகமாகி, அதிகம் முக்கி, குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பதும் கர்ப்பப்பை இறக்கத்துக்குக் காரணமாகலாம்.


▶ பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்பே, அடுத்த கர்ப்பம் தரிப்பது அதாவது இடைவெளி இல்லாமல் பிரசவம்.


▶ மலச்சிக்கல் பிரச்சனையால் வரலாம்.


▶ இயற்கையாக கர்ப்பப் பையைச் சுற்றியுள்ள தசை நார்கள் பலவீனமாக இருப்பதால் கூட கர்ப்பப்பை இறக்கம் வரலாம்.


▶ நிறைய குழந்தைகள் பெற்ற பெண்கள் ( அந்த காலத்தில்).


▶ பிரசவத்தின் போது, ஆயுதம் போட்டுக் குழந்தையை எடுப்பது.


▶ அதிக சிரமப்பட்டுக் குழந்தையை வெளியே தள்ள முயற்சிப்பது.


🔴  #அறிகுறிகள் ❓


▶ கர்ப்பப்பை இறக்கத்தால் நடப்பது சிரமமாகும்.


▶கர்ப்பப்பை தொடைகளுக்கிடையே உரசி, புண் உண்டாகும்.


▶கர்ப்பப்பை இறங்கும் போது, முன் பாகத்திலுள்ள சிறுநீர் பையும், பின் பக்கத்திலுள்ள மலக்குடலும் சேர்ந்து இழுக்கப் படலாம். அதனால் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.


▶இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.


▶ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.


▶எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.


▶பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை.


▶அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்.


▶சிலருக்கு இருமினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு.


▶அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்.


▶சிறுநீரை அடக்க முடியாத நிலை.


▶சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை.


▶மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.


★இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளை

மேற்கொள்வது நல்லது.


#வீட்டு_வைத்தியம்❓❓❗❗❗


💚💚  கர்ப்பை இறக்கத்தை

குணமாக்க....❓


⏩ தேவையானவை❔


சாதிக்காயை  ---- 1


பசுவெண்ணெய்

தேவையான அளவு


▶செய்முறை◀


சாதிக்காயை எடுத்துக்கொள்ளவும்.

அதை பசுவெண்ணெயால் மூடவும்.

அதை  நீளமான கோணி ஊசியில் செருகிப் பிடித்துக்கொண்டு, 

நெருப்புச்சுடரில் காட்டி எரிக்கவும்.


சிறிது நேரத்தில்,


வெண்ணெயை உள்வாங்கி சாதிக்காய் எரிய ஆரம்பிக்கும்.

சாதிக்காய் முழுமையாக எரிந்து கருகும் வரை,


▶▶மேலும்……மேலும்……


பசு வெண்ணெயை  கொஞ்சம், கொஞ்சமாக அதன்மேல் வைத்துக் கொண்டே இருக்கவும்.

இப்படி, சாதிக்காயை முழுமையாக கருக்கவும்.  இறுதியாக  மிஞ்சும் அந்த சாதிக்காயின் கரியை,

நன்கு தூளாக்கி பத்திரப்படுத்தவும்.


▶இந்த சூரணத்தில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து,


▶காலை, மாலை இரு வேளையும்,


▶தேனில்  உண்டுவர, நாற்பத்தெட்டு நாட்களில்,


▶இறங்கிய கர்ப்பப்பை மேலேறும்.


வருடக்கணக்கில் அவதிப்படுவோருக்கு,

(90)தொண்ணூறு நாட்களில் குணம் தெரியும்.


💚 செம்பருத்தி பூ நீர் 


காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து

இறக்கி வைத்து அதில் அடுக்கு

செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து

போட்டுப் பத்து நிமிடம் பாலை

மூடி வைத்து பின் 

வடிகட்டி விடவும். பால் சிவப்பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி

காலையிலும், மாலையிலும்

குடிக்கவும். இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. 

குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.


💚 உழுத்தங்களி


அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7 லிருந்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும்.


பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.


⭕ கமலாப்பழம் சர்பத் ⭕


கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.


⭕ பூசணிக்காய் சர்பத்⭕


வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.


⭕ முருங்கைக்காய் சூப்⭕


⏩ தேவையான பொருட்கள்


முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.


▶செய்முறை


முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.


வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)


⭕ பாலக் கீரை சூப்⭕


இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.


ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.


⭕ ஆலம் விழுது பால் கசாயம்⭕


▶செய்முறை


ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை 100 மி.லியாக சுண்டும்வரை காய்ச்சி, பின் வடிகட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக காலை மாலை இரு வேளையும் அருந்தலாம் (காபி, டீக்குப் பதிலாக).


பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் (proanthocyanidin சத்துக்காக) சாப்பிடவும்.


⭕ சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் பொடி, பனைவெல்லம் கசாயம் ⭕


⏩ தேவையான பொருட்கள்


பாத்திரத்தில்………


அரை ஸ்பூன் கருஞ்சீரகம், 


அரை ஸ்பூன் சதக்குப்பை, 


கால் ஸ்பூன் மரமஞ்சள் பொடி, 


ஒரு ஸ்பூன் வெல்லம் 


மற்றும் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும். இவை கலந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர கருப்பை நீர் கட்டிகள் கரைந்து வெளியேறும். மேலும் இது ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு மற்றும் மாதவிடாய் கோளாறால் உடலில் தேங்கும் சிதைந்த கருமுட்டை உள்ளிட்ட அழுக்குகளை வெளித்தள்ளுகிறது. மேற்கண்ட பானத்தை வழக்கமான மாதவிடாய் காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன் எடுத்து வருவதால் வலியற்ற, முறையான மாதவிடாய் ஏற்படும்.


⭕ கெட்ட கொழுப்புகளை அகற்றும் கொள்ளு கஞ்சி⭕


⏩தேவையான பொருட்கள்


கொள்ளு-50 கிராம், பார்லி அரிசி-50 கிராம் , மிளகு- 10 கிராம், உப்பு.


பார்லி அரிசி, கொள்ளு, மிளகு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடித்து கொள்ளவும்.


பாத்திரத்தில் 2 ஸ்பூன் பொடித்த கலவையுடன், உப்பு மற்றும் நீர் சேர்த்து கரைத்து கொதிக்கவிடவும்.


சிலருக்கு கரு முட்டை உருவாகின்ற கருப்பை சுவரிலே கட்டிகள் காணப்படுகின்றன. இதனால் பலருக்கு கருமுட்டை சிதைவு ஏற்படும். இதன் முக்கிய காரணம் உடலில் அதிக இன்சுலின் சுரப்பது, ஆன்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோன் அதிகம் சுரப்பது, உயர் மன அழுத்தம், அதிக கொழுப்பு உடலில் சேர்வதாகும். இரும்பு சத்து மிகுந்து காணப்படும் தானியம் கொள்ளு. இதனை கஞ்சியாக மூன்று மாதம் குடித்து வர சீரான மாதவிடாய் ஏற்படும். உடல் பருமன் குறைந்து அழகாக தோற்றமளிக்கும்.


⭕ கருப்பை வீக்கத்தை குறைக்கும் இலந்தை இலை ⭕


⏩தேவையான பொருட்கள்


இலந்தை இலை, பூண்டு, மிளகு.இலந்தை இலையை கையளவு எடுத்து பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன் சிதைத்த பூண்டு, மிளகு சேர்த்து கொதிக்கவிடவும்.


இலந்தை இலையில் மாவு சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு சுவை கொண்டுள்ள இலந்தை இலையில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது. இந்த இலை உடலின் ஜீரணசக்தியை அதிகரித்து பசியை தூண்ட செய்யும் தன்மையுடையது. முதுகுவலி, இருதய நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். குறிப்பாக பெண்களின் பிரச்னையான கருப்பை வீக்கத்தை சரிசெய்கிறது. இந்த பானத்தை ஓரிரு வேளை அன்றாடம் குடித்து வரும்போது, வீக்கம் குறைவதோடு, கருப்பை பலம் பெறும்.இலந்தை வேர்பட்டை-40 கிராம், மாதுளம் பட்டை-40 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் நன்கு கொதிக்கவிடவும். இந்த நீர் 125 மி.லிட்டராக குறையும் போது இறக்கி வடிகட்டி கொள்ளவும். இதனை தினமும் 4 வேலை அருந்துவதால் பெரும்பாடு விரைவில் குணமடையும்.


⭕ கருப்பை பலப்பட ⭕


⏩ தேவையான பொருட்கள்


அருகம்புல்.


செவ்வாழைப்பழம்.


மாதுளம்பழம்.


▶சாப்பிடும் முறை செய்முறை


அருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.


செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். 


மாதுளம்பழச் சாறு  இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.


⭕ தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.❗❗


⏩தேவையான பொருட்கள்


தண்ணீர் விட்டான் கிழங்கு, பனங்கற்கண்டு, பால்.அரை ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சவும்.


வடிகட்டியபின் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை பெண்கள் குடித்துவர கர்ப்பப்பை, சினைப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும். தண்ணீர் விட்டான் கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


⭕ பாதாம் பருப்பை பயன்படுத்தி ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.❓


⏩தேவையான பொருட்கள்


பாதாம், பூசணி விதை, நாட்டு சர்க்கரை, பால். பாதாம் பருப்பு மற்றும் பூசணி விதைகளை வறுத்து பொடி செய்து எடுக்கவும்.


இந்த கலவை ஒரு ஸ்பூன், சிறிது நாட்டு சர்க்கரை, காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இதை குடித்துவர கர்ப்பப்பை, சினப்பை பலப்படும். ஹார்மோன் குறைபாடு சரியாகும்.


⭕ அமுக்கரா கிழங்கை பயன்படுத்தி ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.❓


தேவையான பொருட்கள்


அமுக்கரா கிழங்கு, பனங்கற்கண்டு, பால். ஒரு ஸ்பூன் அமுக்கரா கிழங்கு பொடியுடன் சிறிது பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து இரவு தூங்க போகும் முன்பு எடுத்து கொண்டால் ஹார்மோன் குறைபாடு, மலட்டு தன்மை சரியாகும். அமுக்கரா கிழங்கு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.....


💢 ஆட்டு ஈரல் சூப்


ஆட்டு ஈரல் கால் கிலோ எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் 10 உரித்து வெட்டிக் கொள்ளவும் தனியா மிளகு சீரகம் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.


பெரிய வெங்காயம் - பாதி தக்காளி 1 கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு. தனியா சீரகம் மிளகு ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.


அரிசி களைந்த தண்ணீரை குக்கரில் ஊற்றி அதில் ஈரல் துண்டுகள் அரைத்த பொடி வெங்காயத்தை தனியாக வதக்கி அரைத்து இத்துடன் சேர்க்கவும். மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியில் மிளகுத்தூள் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். இதில் போதுமான அளவு இரும்புச் சத்து உள்ளது. பெண்கள் வாரம் ஒரு முறை இதை அருந்தலாம்.


💢 பனீர் கேரட் குருமா


பனீர் அரை கப் கேரட் கால் கிலோ வெங்காயம் 4 தக்காளி 4 சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை பச்சை மிளகாய் கரம் மசாலா அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.


வாணலியில் எண் ணெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு உள்ளிட்டவற்றை வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். சின்ன வெங்காயம் தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.


வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நீள வாக்கில் கேரட்டை வெட்டி போடவும். தேவையான உப்பு சேர்த்து வேக விடவும். மஞ்சள் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தக்காளி வெங்காயம் அரைத்த பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும்.


இறுதியில் பனீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.


💢 நூடுல்ஸ் கட்லட்


தேவையான அளவு நூடுல்சை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கேரட் பீன்ஸ் பச்சைப் பட்டாணியை அரை வேக்காடாக எடுத்துக் கொள்ளவும்.


உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த நூடுல்ஸ் வேகவைத்த காய்கறிகள் உருளைக் கிழங்கு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.


வெண்ணெயைத் துருவி இதில் சேர்த்து பிசைந்து கொள்ளவும். மைதா பிரட் தூள் ஆகிவற்றை எடுத்துக் கொள்ள வும். பிசைந்த கலவையை பிடித்த வடிவத்தில் தட்டி முதலில் மைதா வில் பிரட்டி பின்னர் ரொட்டித் தூளில் பிரட்டி பின்னர் தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க வேக வைத்து எடுத்து பரிமாறவும்.


👌கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை…❓


* உடல், உழைப்பு, வசிப்பிடம், காலத்துக்கேற்ற உணவை விருப்பத்துடன் உண்ணுங்கள், சமச்சீரான உணவை நேசியுங்கள்.


* குறைந்தது 45 நிமிட நடைப்பயிற்சி அல்லது திறந்த வெளி விளையாட்டு உடலுக்கும் மனதுக்கும் சுகமளிக்கும்


* எளிய யோகாப் பயிற்சிகள்.


* மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும். ஹார்மோன் செயல்பாடுகளை மன உளைச்சல் பாதிக்கும்.


கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.


பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.


காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும


பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.


முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.


சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)


உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.


ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.


ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சோதித்து கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது அவசியம்.


அதே போல் உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்தல் தினமும் வாக்கிங் சத்தான உணவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் தான் கருப்பையை காப்பாற்றிக் கொள்ள முடியும்.


நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து உணவுகள் அவசியம். உப்பை கண்டிப்பாக குறைக்கவும். குளிர்பானங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இனிப்பு வகைகள் ஐஸ் கிரீம் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.


அரிசி உணவுகளையும் குறைக்க வேண்டும். உணவில் ஒரு கப் சாதத்துடன் இரண்டு கப் காய்கறி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


கட்டாயம் ஒரு கீரை இருக்கட்டும். முளைக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை வாரம் இரண்டு முறையாவது சேர்க்க வேண்டும்.


மேலும் சாதத்துக்கு பதிலாக பழங்கள் கீரைகள் அதிகம் சாப்பிடுவது அவசியம். இத்துடன் பிறப்புறுப்பு கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடை பிடிக்க வேண்டியதும் அவசியம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி