பேக்கரி பண்டங்கள் -விழிப்புணர்வு

 #பேக்கரி_பண்டங்களில் #ஒளிந்திருப்பது_என்ன?


பேக்கரிகளில் பார்ப்பதற்கு அழகான கலரில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தின்பண்டங்களான ரொட்டி, பன், கேக், பிரெட், பப்ஸ், சூஸ்பெரி பிஸ்கெட், பிளாக் பாரஸ்ட் கேக் போன்றவற்றைப் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இந்தப் பண்டங்களை ஆங்கிலேயர்கள் இங்கே கொண்டு வந்திருந்தாலும் ஊறுகாய் போலத்தான் தொட்டுக்கொண்டனர். ஆனால், சாப்பாட்டுக்கு இணையாகவும், கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பிடிப்பதாகவும் இன்றைக்கு அது மாறிவிட்டது.


ஆரோக்கியமான உணவுபொருட்களின் தன்மையே அதிகபட்சம் இரண்டொரு நாளில் காயத் தொடங்கிவிடும் என்பதுதான். ஆனால் இன்றைய பேக்கரிகள் ஒரு வாரம் கெட்டுபோகாமல் இருப்பதற்கான வேதிப் பொருட்களை கேக், பன் வகைகளில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.


2000-த்துக்கு முன்பு பன் செய்வதற்கு ஏற்ப மாவு புளிப்பதற்காக சூரிய வெளிச்சத்தில் வைப்பார்கள். அதன் காரணமாக ஈஸ்ட் சேர்க்காமல் இருந்தார்கள். இந்த பன் மூன்று நாட்களுக்குக் கெட்டுபோகாது. ஆனால், தற்போது புளிக்க வைப்பதற்கு இந்த முறை பின்பற்றப்படுவதில்லை. அதேபோல் பொ.ஆ. 2000-க்குப் பிறகுதான் சங்கிலி தொடர் வியாபாரம் வந்தது. மாநகரத்தில் ஒரே பெயரில் பல கடைகள் இருக்கும். இத்தனை கடைகளுக்கும் ஒரே இடத்தில்தான் பேக்கரி பண்டங்களைத் தயாரிக்கிறார்கள்.


பேக்கரி பண்டங்களில் குறிப்பட்ட அளவு ஈஸ்ட் கலப்பது பெரிய கெடுதல் இல்லை. பொதுவாக இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு பேக்கரி பண்டங்கள் காயத் தொடங்கும், பூசனம் வரும். இதற்கு பதிலாக அதிக நாட்கள் கெட்டுபோகாமல் இருப்பதற்காக வேதி முறையில் பதப்படுத்துகிறார்கள். அத்துடன் மென்மையைத் தக்கவைப்பதற்காக 'பிரெட் இம்புருவர்' சேர்க்கப்படுகிறது.


#கேக்_வேதிப்பொருட்கள்


கேக் தயாரிப்பதற்கு டால்டா, முட்டையின் வெள்ளைக்கருவை மைதா மாவுடன் சேர்க்கி றார்கள். முன்பு கேக்கில் ஜெல் சேர்க் காமல் இருந்தார்கள். அதனால் கேக்கை கடித்தே சாப்பிட முடிந்தது. சாப்பிடும்போது சாக்லேட்போல் பல்லில் ஒட்டும். ஆனால், தற்போது கேக்கின் மென்மைக்காக 'ஜெல்' சேர்க்கப்படுகிறது.


பொதுவாகக் கேக் மூன்று நாட்களுக்கு மேல் கெட்டுபோகத் தொடங்கும். ஆனால், இன்றைக்கு் கேக்கை ஒருவாரம் வரை வைத்திருக்கிறார்கள். இதற்காகத்தான் 'சி.பி. பவுடர்' (கால்சியம் புரோபியோனேட்) சேர்க்கிறார்கள். இந்த வேதிப்பொருள் 7 நாட்கள்வரை கேக்கை கெட்டுபோகாமல் பாதுகாக்கிறது.


கேக் மேல் தடவும் கிரீம் தயாரிப்பதற்கு சீனியை திரித்து டால்டாவோடு சேர்த்து பிசைந்து செய்கிறார்கள். அதில் நிறைய வேதி வண்ணங்களும் சேர்க்கப்படுகின்றன. ஜங்கிரியில் சேர்க்கும் கலரைவிட ஐந்து மடங்கு அதிகமாக கேக் கிரீமில் சேர்க்கப்படுகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 2 கிராம், ஆனால் 20 கிராம்வரை சேர்க்கப்படுகிறது. பார்ப்பதற்கு தூண்டும் விதத்தில் இருப்பதற்காகத்தான் இப்படிச் செய்யப்படுகிறது.


#உடனடி_பொருட்கள்


சூஸ்பெரி பிஸ்கெட் செய்வதற்கு மைதா, டால்டா, எசன்ஸ், நட்ஸ், முந்திரி போன்றவற்றைச் சேர்ப்பார்கள். ஒவனில் வேகவைத்து சூட்டோடு சாப்பிட்டால் நல்ல மொறுமொறுப்புத் தன்மையுடன் இருக்கும். கொஞ்சநேரம் வெளியில் வைத்துவிட்டால், இந்த மொறுமொறுப்பு தன்மை போய்விடும். சாப்பிடும்போது பல்லில் ஒட்டும் தன்மையைக் குறைப்பதற்காகவும் மொறுமொறுப்புத் தன்மையை அதிக நாட்கள் நீட்டிப்பதற்கும் அம்மோனியம் நைட்ரேட் சேர்க்கிறார்கள். இது சுவையைக் கூட்டி காட்டும்.


கிறிஸ்துமஸ் நேரத்தில் பிரபலமாக உள்ள கிறிஸ்துமஸ் கேக் எனப்படும் பிளம் கேக் இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்து பக்குவப்படுத்தி வைப்பது வழக்கம். செர்ரி, திராட்சைப் பழரசம், பட்டை, கிராம்பு போன்றவற்றைச் சேர்த்து ஒரு வாரம் புளிக்கவைப்பார்கள். புளித்து வருவதையே கேக் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். தற்போது இப்படிச் செய்வதில்லையாம். கேராமல் என்ற எஸென்ஸை ஊற்றி உடனே தயாரித்துவிடுகிறார்கள்.


#மாற்று_என்ன?


“ஒரு கிலோவில் பிஸ்கட் செய்கிறோம் என்றால் கால் கிலோ கம்பு மாவு, கால் கிலோ கோதுமை மாவு, கால் கிலோ நாட்டுச் சர்க்கரை, கால் கிலோ வெண்ணைய் சேர்த்து பிஸ்கட் தயாரிக்கலாம். இதில் மைதா சேர்ப்பதில்லை கோதுமையுடன் கம்பு, வரகு, கேழ்வரகு போன்ற ஒரு சிறுதானிய மாவைக் கலந்தும் பிஸ்கெட் தயாரிக்கலாம். சோடா உப்பு சேர்க்காததால் பிஸ்கட் உப்பி வராது. வெண்ணைய் சேர்ப்பதால் இயற்கையான மொறுமொறுப்புத் தன்மை இருக்கும். மணத்துக்கு ஏலக்காய், இனிப்புக்கு சுத்திகரிக்கப்படாத சீனி சேர்க்கலாம். இந்த பிஸ்கெட் 5-ல் இருந்து 7 நாட்கள் நமத்துபோகாமல் இருக்கும்.


கேக்கில் நாட்டுக்கோழி முட்டையைப் பயன்படுத்துகிறோம். பேக்கிங் பவுடர், சோடா உப்பு உள்ளிட்டவற்றை சேர்ப்பதில்லை. நாட்டுகோழி முட்டையில் ஒருவித மணம் வரும். ஏலக்காய் அல்லது வெண்ணெய் சேர்த்தால், அந்த முட்டை மணம் தெரியாது. சுத்திகரிக்கப்படாத பாலை பயன்படுத்தலாம். கேக் உப்பிப் பெரிதாக வராது. கேக்கின் மேல் கிரீமும் இருக்காது. அதேநேரம் 6 நாட்கள் வைத்து சாப்பிடலாம், பூசனம் வராது.


பிரெஸ் கிரீம் கேக்கின் மென்மைத் தன்மைக்காக வெண்ணெய், பிரவுன் சுகர், வணிலா பீன்ஸ் சேர்க்கிறார்கள். கிறிஸ்மஸ் கேக் செய்வதற்கு முட்டை, பிரவுன் சுகர், ஒயின் தேவை. கிறிஸ்மஸ் கேக் நீண்ட நாட்கள் கழித்துச் சாப்பிட்டால்தான், அதன் சுவை கூடும். ஆனால், அது இயற்கை முறையில் தயாரித்ததாக இருக்க வேண்டும். இதில் சுகரும் ஒயினும் பதப்படுத்தும் வேலையைச் செய்கின்றன” 


அதேநேரம் மென்மையான கேக்குக்கும் உப்பிய ரொட்டிக்கும் நுகர்வோர் பழக்கப்பட்டுவிட்டார்கள். பேக்கரி பண்டங்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நுகர்வோருக்கு முன்பு குறைவாக இருந்தது. ஆனால், இப்போது நுகர்வோர் விழித்துக் கொண்டுவிட்டனர். எல்லோரும் இந்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம்.


#மருத்துவர்_என்ன_சொல்கிறார்?


ஈஸ்ட் என்பது ஒரு வகை பாக்டீரியா. ஆனால் பிரெட், பன் வகைகளுக்கு அதிக அளவில் சேர்க்கக் கூடாது. ஈஸ்ட் அதிமாக சேர்த்த பன்னைச் சாப்பிட்டால் உடல் பருமன் ஆவதற்கு சாத்தியம் உண்டு.


சீனியோட சுவையை கருப்பட்டி கொடுக்காது. எந்த பொருள் அதிக சுவையைக் கொடுக்கிறதோ, அந்த பண்டம் கேடுதான். குழந்தைகள் இரண்டொரு பிஸ்கட் சாப்பிடுவதில் தவறில்லை. உணவுபோல் ஒரு பாக்கெட் சாப்பிட்டால் 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே நீரழிவு நோய் வந்துவிடும்.


அதனால் குழந்தைகள் அதிக இனிப்பு சார்ந்த பண்டங்களை சாப்பிடக் கூடாது. செயற்கை முறையில் பதப்படுத்திய எந்த இனிப்பு வகைகளையும் குழந்தைகளோ பெரியவர்களோ தொடர்ந்து சாப்பிட்டால் ஆபத்துதான்.


பதப்படுத்துதலே கேடுதான். அதுபோன்ற உணவுப் பொருட்களை கூடுமானவரை தவிர்ப்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி