முந்திரி
முந்திரி பருப்பின் நன்மைகள்:
🍐முந்திரி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
🍐முந்திரி பருப்பை உட்கொள்வது மனச்சோர்வை போக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? முந்திரியில் வைட்டமின் பி 12 நிறைந்திருக்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் முந்திரி பருப்பில் காணப்படும் மெக்னீசியம் உடலில் செரோடோனின் ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவுகிறது.
🍐மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செரோடோனின் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர முந்திரி பருப்பில் இருக்கும் புரதம், தாமிரம் போன்றவை நொதிகளின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி, மூளையின் செயல்பாடு போன்றவற்றிலும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
🍐முந்திரி பருப்பில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பும் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
🍐முந்திரியை அரைத்து சருமத்தில் தடவினால் முகம் அழகாகவும் மென்மையாகவும் இருக்கும். முடி உதிர்தல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் முந்திரி பருப்பை சாப்பிட்டு வரலாம்.
🍐 மேலும் முந்திரியில் பொட்டாசியம், வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்றவையும் உள்ளன. அவை உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், புற்றுநோயைத் தடுப்பதிலும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
🍐குழந்தை பருவத்தில் மனச்சோர்வு அடைபவர்கள் உடல் பருமன், சுறுசுறுப்பின்மை, செயலற்ற தன்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இளமை பருவத்தில் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும் என்பது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் நடத் திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
🍐முதுமை ஒரு நபரின் மனத்திறன், ஆளுமை மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது. மனச்சோர்வு உள்ளவர்களுக்கு முதுமையில் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி இரு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
🍐ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் சராசரி மனிதரை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வுடன் வாழ்பவர்களுக்கு காது கேளாமை பிரச்சினை உண்டாகுவதற்கான வாய்ப்பும் அதிகம்.
🍐ஆண்களை விட பெண் கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment