நோயெர்ப்பாற்றலை அதிகரிக்க

 #இரண்டாவது_கொரோனா…


#நோய்_எதிர்ப்பு_சக்தியை #பலப்படுத்தினால்……


#வைரசஸுக்கு_எதிராக

#போராடலம்…❗❗


👉""" வருமுன் காக்க வந்தபின்

எதிர்த்து போராட """👈


🔴 நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன❓


    நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான சக்தியை வழங்கி, நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்ட சக்திதான் நோய் எதிர்ப்பு சக்தி எனப்படுகிறது. இது நம் உடலோடு கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம் தான். இது நம் உடலின் உள்ளே இருந்து நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகள் மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதே நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவமாக இருக்கிறது.


நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதே இதன் பிரதான செயலாகும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்றவைகளால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுவது தான் இதன் முக்கியமான பணி. குறிப்பாக எந்த பொருளால் நம் உடலுக்கு ஆபத்து நேர்கிறது என கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியை செய்கிறது இந்த நோய் எதிர்ப்பு சக்தி. தீங்கு தரும் இதுபோன்ற பொருட்களை அழித்து உடலை அவ்வப்போது புத்துணர்வாக மாற்றும் தன்மை கொண்டது.


சளி, இருமல், காய்சல் போன்ற தொற்றுநோய்களிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கும் அரண் போல இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலில் உள்ளே மறைந்து இருந்து திறம்பட பங்காற்றுகிறது


💢 வைரஸ்களில் இருந்து பாதுகாக்க

என்ன தான் வழி…❓


பொதுவாக வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய்களுக்கு மருந்துகள் இல்லை, நமது நோயெதிர்ப்பு தொகுதியே அந்த வைரஸ் கிருமிகளுக்கு எதிராக போராடி நமக்கு குணமளிக்கின்றன. 


நமது நோயெதிர்ப்பு திறன் வைரஸை எதிர்க்க முடியாமல் பலவீனமடையும் போதே நமக்கு வைரஸ் நோய்கள் ஏற்படுகின்றன……❗


முதலில் நாம் செய்ய வேண்டியது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதேயாகும். அதுதான் நம் உடலைப் பாதுகாக்கும் கவசமாக, அரணாக உள்ளது. அது ஒரே வழி 

அடுத்தபடி தான்… உணவும், மருந்தும். 


உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தாலே பலவித நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆகவே தான் உணவே மருந்து என்று சொல்லி இருக்கிறார்கள்.


நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களைப் போல, நம்மை நோய் நொடியிலிருந்து பாதுகாப்பது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்தான். இந்த வெள்ளை அணுக்கள் தாம், உடலில் நோய் தாக்கும்போது, அதற்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் மிக்கது. 


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பிலும் தனியாகத் தோன்றுவதில்லை. 


*👉#நம்முடைய……*


➡மூளை, 


➡ரத்தம், 


➡கல்லீரல், 


➡மண்ணீரல், 


➡எலும்பு, 


➡நிணநீர், 


➡ரத்தக் குழாய்கள், 


➡நாளமில்லா சுரப்பிகள் 


அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்படும் போது தான் நோய் எதிர்ப்பு நம் உடலில் வளருகிறது. இதில் ஏதாவது குறைபாடு ஏற்படும் போது தான் நோய் உண்டாகிறது.


👉 நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது உடலில் சாதாரண…… 


➡காய்ச்சல் முதல்……


➡தொற்றுநோய், 


➡புற்றுநோய், 


➡சளித்தொந்தரவு, 


➡ஆஸ்துமா 


என்றெல்லாம் ஏற்படுகிறது. 

வைரஸ்கள் என்றழைக்கப்படும் நுண்ணுயிர்கள் உயிரினங்களுக்குப் பல்வேறு நோய்கள், பாதிப்புகள்வரக் காரணமாக இருப்பவை. 


ஒரு செல் உயிரினங்களான பாக்டீரியாக்களும் கூட இவற்றினால் பாதிக்கப்படுவது உண்டு. 


வைரஸ்களை எலெக்ட்ரான் மைக்ராகோப் போன்ற பெருக்கிக் கருவிகளின் (magnifiers) மூலமாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு சிறியவை. 


👉 பாக்டீரியாக்களை விடச் சிறியவை. (பாக்டீரியாவின் அளவு ஒரு மில்லிமீட்டரில் 1000-த்தில் ஒரு பகுதி இருக்கும்.


👉 வைரசின் அளவோ 10000-த்தில் ஒரு பகுதி என்பதிலிருந்து 100000-த்தில் ஒரு பகுதி வரையே இருக்கும்).


🔴 ஏன் வைரஸ்ஸை அழிக்க

முடியாது……❓❗


அனைத்து உயிரினங்களும் செல்களினால் ஆனவை. 


உயிரினத்தின் மிகச் சிறிய பாகமே ‘செல்’ எனப் புரிந்து கொள்ளலாம். 


வைரஸ் ஒரு செல்லிற்குள் நுழைந்து வளரக் கூடியது அது மட்டுமல்ல, எண்ணிக்கையிலும் பெருகக் கூடியது. 


நம் உடம்பில் ஏற்கனேவே இருக்கும் நல்ல செல்கள் போல வைரஸ்கள் தன்னை உருமாற்றி கொண்டு உள்ளே இருக்கு அதனால் நமது நோய் எதிப்பு சக்தியானது அந்த குறிப்பிட்ட வைரஸ்ஸை கண்டுப்பிடிக்க முடியாது. அதனால் புதிதாக வைரஸ்கள் வந்தால் உயிர் பலி அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக வைரஸை ஒரு நுண்ணுயிர் எனக் கருதலாம். 

அதே சமயம், செல்லை விட்டு வைரஸ்கள் வெளியே வந்து விட்டால் அவை வளர்வதில்லை.


 

👉1888-இல் மேயர் என்பவர் வைரஸ்களைக் கண்டுபிடித்தார். வைரஸ்களுக்கு இதுதான் வடிவம் என்று ஒன்றைக் குறிப்பிட முடியாது. அவை பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. 


மனிதர்கள், மிருகங்கள், தாவரங்கள், மரங்கள் என எல்லா உயிரினங்களிலும் தாவரங்களிலும் அவை நோயைப் பரப்புகின்றன. 


▶பெரியம்மை, 


▶சின்னம்மை, 


▶போலியோ, 


▶மம்ப்ஸ், 


▶எய்ட்ஸ், 


▶ரேபீஸ், 


▶சென்னைக் கண் (மெட்ராஸ் ஐ), 


▶பக்கவாதம், 


▶சில வகைப் புற்று நோய்கள் 


போன்ற பல்வேறு கேடுகளை வைரஸ்கள் நமக்குத் தருகின்றன. 

[ இதற்கு இப்போது தடுப்பு ஊசி இருக்கு ஆனால் மருந்து கிடையது]

அவை தமக்குள் வேலைப் பிரிவினை வேறு செய்து கொள்கின்றன. 


உதாரணமாக, அம்மை நோயைத் தரும் வைரஸ் இன்ஃபுளூயன்சா நோயைத் தராது. “அது வேற டிபார்ட்மெண்ட். அதில் நான் தலையிடுவதில்லை” என்று கூறிவிடும். 


வேறு வகை வைரஸ்கள் தக்காளி, வாழைப்பழம், கரும்பு போன்ற பயிர்களையும் தாக்குகின்றன. இதிலும் மிருகங்களைத் தாக்கும் வைரஸ்கள் தாவரங்களைத் தாக்குவதில்லை.


பாக்டீரியாக்களில் கூட நமக்கு நன்மை தரக் கூடிய சில ரகம் உண்டு. ஆனால் வைரஸ்களில் அந்தப் பேச்சே இடம்  கிடையாது. அனைத்துமே நமக்குக் கேடு விளைவிப்பவை. 


மனிதகுலத்தின் மிகப் பெரிய எதிரியாக இவை வலம் வருகின்றன. வைரஸ் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள மருத்துவ உலகில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பல தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் வைரஸ் நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் நோயினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்தவும் நமது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கவுமே கொடுக்கப்படுகின்றன, எனினும் ஒரு சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன, இவை வைரஸ்களின் இனப்பெருக்கம் போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தி நாம் விரைவில் குணம்பெற உதவுகின்றன.


எய்ட்ஸ் கூட ஒருவகை வைரஸ் நோய்தான், இதற்கு எதிராக நமது நோயெதிர்ப்பு தொகுதி சிறப்பாக செயல்படாததுக்கு காரணம் இந்த வகை வைரஸ்கள் தமது இயல்பை அடிக்கடி மாற்றிக்கொள்வதுதான், இதனால் இதற்கு எதிரான பிறபொருள் எதிரிகளை எமது நோயெதிர்ப்பு தொகுதி உருவாக்குவதில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது.


💉  #தடுப்பூசிகள் 💉


❌வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுப்பிடிக்க முடியாது❗


💉 ஆனால் வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்க முடியும்❗


💊 அது ஆங்கில மருந்தால் மட்டுமே முடியும்…❗❓


💉 வைரஸுக்கு எதிரான சிறந்த சிகிச்சை தடுப்பூசிகளாகும். 


அதாவது குறித்த வகை வைரஸின் சில மூலக்கூறுகளை நமது உடலினுள் செயற்கையாக உட்செலுத்துவதன் மூலம் அந்த நோய் முழுமையாக ஏற்படாமலே அந்த வைரஸுக்கு எதிரான எமது நோயெதிர்ப்புத் திறனை செயற்கையாக நாம் பெற்றுக்கொள்ள முடியும்…


வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு, உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை 

[ தடுப்பு ஊசி மூலம்] உடலில் செலுத்தி-- உடலின் நோயெதிர்ப்பு சக்தி--அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை, ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப்பெற வைப்பார்கள்.


எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும். இந்த நோயெதிர்ப்பு திறனானது நிரந்தமானதாகவோ அல்லது குறித்த 

காலத்திற்கானதாகவோ இருக்கலாம்.


🔯 #மாஸ்க்_என்ற_முகமூடியும்

#பாதுகாப்பும் ❗


முகமூடியில் உள்ள ஓட்டைகளை விட வைரஸ் 1000 மடங்கு சிறியது ஆதலால்

முகமூடி வைரஸ்ஸை தடுக்காது.


மாஸ்க்கை நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள் படுத்தவேண்டும்.


நோய்யே இல்லாதவன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை


👉மாஸ்க் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டும். 


⭐ நீங்கள் அதை நீண்ட நேரம் அணிந்தால்……


▶ இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைகிறது.


▶ மூளையில் ஆக்ஸிஜன் குறைகிறது.


▶ நீங்கள் பலவீனமாக உணர ஆரம்பிக்கிறீர்கள்.


▶ மரணத்திற்கு வழிவகுக்கும்.


*⭕ ஆலோசனை…❓*


⏩A => நீங்கள் தனியாக இருக்கும் போது அதை அணிய வேண்டாம். 


⏩முகமூடி அணிந்த ஏ.சி.யுடன் என் காரில் நிறைய பேரை நாம் இன்னும் பார்க்கிறோம். அறியாமை அல்லது கல்வியறிவின்மை❓


⏩ இதை வீட்டில் பயன்படுத்த வேண்டாம்.❗❓


⏩ நெரிசலான இடத்தில் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது மட்டுமே இதைப் பயன்படுத்தவும்.


⏩ அதன் பயன்பாட்டைக் குறைக்கவும், பெரும்பாலும் உங்களை கூட்டத்திலிருந்து பிரிப்பதன் மூலம்.


⏩ எப்போதும் இரண்டு முகமூடிகளை வைத்திருங்கள். ஒவ்வொரு 4-5 மணி நேரத்திலும் மாற்றங்களைச் செய்யுங்கள்.


⏩ முகமூடிகளை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம்.


🇨🇭 #வீட்டு_வைத்தியம்❓❓


👈நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் மற்றும் உணவுகள்❓


  👉நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போது, நோயிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதற்கு ஆதாரமானது நல்ல, சமச்சீரான, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவாகும்.


வைரஸ் கிருமிகளுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நாம் சமச்சீரான உணவுகளை உண்டு, போதியளவு தூங்கி உடல்பயிற்சி செய்து எமது நோயெதிர்ப்பு திறனை வளமாக வைத்துக் கொள்வதுதான்.


⭕ வைரஸ் காய்ச்சல் சளி,உடல் வலி. சாதாரண காய்ச்சல்களுக்கு துணைமருந்தாக……


ஆங்கில மருந்துடன் சேர்த்து கீழே உள்ளவைகளை எடுத்து கொள்ளலாம்…


🇨🇭 💊 மருந்து 01 💊


 தேவையான பொருள்கள்❓


⭕ வேப்பிலை, 


வில்வம், 


துளசி, 


அறுகம்புல், 


அத்தி இலை, 


மாவிலை 


அரசனிலை, 


ஆலயிலை 


கரிசலாங்கண்ணி, 


தூதுவளை, 


கண்டங்கத்திரி, 


நெல்லி, 


தும்பைப்பூ, 


குப்பைமேனி, 


கீழாநெல்லி, 


ஜாதிக்காய், 


தான்றிக்காய், 


அதிமதுரம் 


ஆகியவை. சம அளவு  இவற்றை சிறிது, சிறிதாக பொடித்து வெயிலில் காயவைத்து,உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கலந்து அருந்த சகல நோய் குணமாகும்.


இந்த மூலிகைகளில் வைட்டமின் A மற்றும் C உள்ளது. மேலும் புற்றுநோய் எதிர்ப்பு பாக்டீரியாக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடெ ண்டுகள், ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஃபங்கஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவன.


சமச்சீரான, சத்துள்ள வைட்டமின்கள், தாது உப்புகள், கொழுப்பு, இரும்புச் சத்து, புரதம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற உடல்நல ஊக்கிகள் கொண்ட உணவு வகைகள் நோயைக் குணப்படுத்தும். இவற்றை வகை அறிந்து உண்பதால் பலன் கிடைக்கும்.


🇨🇭 💊 மருந்து 02 💊


☕  கப சுர குடிநீர் கீழ் கண்ட மூலிகைகளை உள்ளடக்கியது ..


சுக்கு


திப்பிலி


இலவங்கம்


சிறுகாஞ்சொறி வேர்


அக்கிரகார வேர்


முள்ளி வேர்


கடுக்காய் தோல்


ஆடாதொடை இலை


கோஷ்டம்


சீந்தில் தண்டு


சிறு தேக்கு


நிலவேம்பு சமூலம்


வட்ட திருப்பி வேர்


கோரை கிழங்கு ,


👉செய்முறை❓


சம அளவு  உலர்த்தி காய வைத்த மூலிகையாக எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.


💢 உபயோகிக்கும் முறை❓


 இந்த மூலிகையை காய்ச்சலின் போது 5 கிராம் அளவு எடுத்து 200 மி.லி நீர் விட்டு 50 மி.லி ஆக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை 

ஆகாரத்திற்கு முன் தொடர்ந்து பத்து நாட்கள் பருகி வர வேண்டும்.


⭐தீரும் நோய்கள்


வைரஸ்  காய்ச்சல் குணமாகும் ..

தொடர்ந்து ஐந்து நாட்கள் பருகி வர வைரஸ் காய்ச்சல் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திட முடியும்.


ச‌ளி சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குறையும். அதிக சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் அனைத்து விதமான வைரஸ் காய்ச்சலுக்கும் இந்த மூலிகை மிகச்சிறந்த மருந்தாகும்.


நோய் எதிர்ப்பு சக்தி பெருக  -இந்த மருந்து பெரிதும் உதவும் .


🇨🇭 💊அமுக்கரா கிழங்கு சூரணம்💊


அமுக்கராங் கிழங்கு 640 கிராம்


சுக்கு 320 கிராம்


திப்பிலி 160 கிராம்


மிளகு 80 கிராம்


தனியா 70 கிராம்


சீரகம் 60 கிராம்


இலவங்க பத்திரி 50 கிராம்


இலவங்க பட்டை 50 கிராம்


ஏலம் 30 கிராம்


சிறுநாகப் பூ 20 கிராம்


கிராம்பு 10 கிராம்


👉செய்முறை❓


மேற்கண்ட மூலிகைகளை வாங்கி முறையாக சுத்தி செய்து வெய்யிலில் காயவைத்து தனிதனியாக இடித்து மெல்லிய துணியால் சலித்து மென்மையான தூளாக எடுத்துக் கொண்டு எல்லா வற்றையும் ஒன்றாக கலந்து மொத்த எடை அளவிற்க்கு சம எடை பனங் கற்கண்டு பொடியாக்கி கலந்து கண்ணாடி பாட்டிலில் காற்று பூக்காத படி இறுக மூடி பத்திர படுத்தி கொள்ளலவும்.


👉சாப்பிடும் முறை


காலை, மாலை உணவிற்கு பிறகு பால் அல்லது நெய்யிலோ 3 கிராம் அளவு கலந்து ஒரு மண்டலம் ( 48 நாட்கள் )சாப்பிட்டு வந்தால் கீழ் குறிப்பிட்ட பெரும் வியாதிகள் தீரும். அத்துடன் உடல் பலம் பொறும்.


⭐ஒடிந்த எலும்பு விரைவில் கூடும்


🌟மூச்சு தினறல்


🌟தேய்ந்த மூட்டுகளை மீண்டும் வலுப்படுத்தும்


🌟மிகச்சிறந்த உடல் தேற்றி


🌟ஆண்கள் இழந்த சக்தியை மீட்டு, கெட்டிபடுத்தும்


🌟உடல் பலம் கூடும்


🌟உடல் எடை அதிகபடுத்தும்


🌟நரம்பு தளர்ச்சியை குணமாக்கும்


🌟சுறுசுறுப்பை தரும்


🇨🇭 💊 ஏலாதி சூரணம் 💊


தேவையான பொருட்கள்


ஏலம் - 320 கிராம் 


சுக்கு - 160 கிராம் 


கூகை நீர் - 80 கிராம் 


தாளிசபத்திரி - 40 கிராம் 


சிறுநாகப்பூ - 20 கிராம் 


மிளகு - 10 கிராம் 


இலவங்கம் - 5 கிராம் 


சீனா கற்கண்டு - 640 கிராம்


செய்முறை


மேலே உள்ள பொருட்களை பொடித்து சலித்து பின்னர் கற்கண்டை பொடித்து கலந்து பத்திரப் படுத்தவும்.


அளவு : 1 கிராம் முதல் 2 கிராம் வரை


அனுபானம் : தேன், நெய், வெந்நீர், பால் முதலியவை ...


⭐ பயன்கள்


நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கும்

தொண்டை ஏற்படும் அழர்சி, 

தொண்டை கமரல் மற்றும் நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.


🇨🇭 💊 தாளிசாதி சூரணம் 💊


ஏலரிசி – 35 கிராம்


லவங்கப்பட்டை – 35 கிராம்


தாளிசப்பத்தரி – 70 கிராம்


மிளகு – 140 கிராம்


அரிசி திப்பிலி – 270 கிராம்


சுக்கு – 210 கிராம்


மூங்கில் உப்பு – 350 கிராம்


சீனா கற்கண்டு – 2240 கிராம்


     கற்கண்டு தவிர பிற சரக்குகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே நன்கு வெயிலில் உலர்த்தி அனைத்தையும் ஒன்றுசேர்த்து தூள்ளாக்கி பத்திரப்படுத்தவும். இதனை காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். 

நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கும் சளி இருமல் குணமாகும்.

நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.


🇨🇭 💊 மஸ்து மாவு 💊


1 வயது முதல் தினசரி எடுத்து கொள்ளும் 100% இயற்கை கைக்குத்தல் சத்து மாவு


❓தேவையான மூல பொருட்கள்❓


கேழ்வரகு – 50கி


கம்பு – 50கி


நாட்டு சோளம் – 50கி


சம்பா கோதுமை – 50கி


பார்லி – 50கி


சோயா பீன்ஸ் – 50கி


மக்காச்சோளம் – 50கி


வறுத்த வேர்க்கடலை – 100கி


பொட்டுக்கடலை – 50கி


முந்திரி – 100 கி


பாதாம் – 100 கி


பிஸ்தா -- 100 கி


அக்ரூட் -- 100 கி


சாரபருப்பு -- 100கி


ஏலக்காய் – 50


கருப்பு எள்ளு -- 50கி


பூனைகாலி விதை -- 100 கி


அஸ்வகந்தா பொடி -- 100 கி


ஜாதிக்காய் --  50 கி


முருங்கை விதை -- 50 கி


நாட்டு சக்கரை - 1500 கி


👉செய்முறை❓


மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும்.


காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.


👉சாப்பிடும் முறை


200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்,குந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம் கர்ப்பிணிகள்,குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க நல்லது


🇨🇭பலன்கள்


⭐ரத்த ஓட்டம் சீராகும் 


⭐ரத்த அணுக்கள் அதிகரிக்கும்


⭐நரம்புகள் பலம் பெறும்


⭐விந்து அணுக்கள் அதிகமாகும்.


⭐உடல் எடை அதிகரிக்கும் 


⭐சதை கூடும்


⭐நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்


⭐மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்.


⭐குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது.


⭐தோல் சுருக்கம் மறையும்.


⭐உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.


🇨🇭 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்❓


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து விட சில உணவு முறைகளை எடுத்து கொண்டால் போதும் இதிலிருந்து எளிதில் குணமடைய முடியும்.


அந்தவகையில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.……🆗…❓❗❗


பசும்பால் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத பால் எடுத்துக் கொள்ளலாம்.


பெரிய நெல்லிக்காய், 


கொய்யாப்பழம்


கேரட்


பூண்டு


இஞ்சி


மஞ்சள் தூள்


கருஞ்சீரகம் 


தயிர்


பார்லி, 


ஓட்ஸ்


கிரீன் டீ


டீ, காபி ( பால் இல்லாமல் )


சர்க்கரைவள்ளி கிழங்கு


காளான்


ப்ரொக்கோலி


கிவி பழம்


பழங்கள்


பெர்ரி பழங்கள்


எலுமிச்சை


கீரைகள், காய்கறிகள்


சுருள்பாசி (ஸ்பைருலினா)


மஞ்சள் பட்டாணி, 


கொண்டைக்கடலை, 


நிலக்கடலை, 


பாதாம்,பிஸ்தா பருப்பு, 


துவரம் பருப்பு, 


பாசிப்பருப்பு 


சூரிய காந்தி விதை 


மீன், நண்டு, இறால்


சிக்கன், 


முட்டை, 


பால் 


மாம்பழம், 


பப்பாளி, 


வெண்பூசணி, 


தர்பூசணி,  


வெள்ளரிப்பிஞ்சு,  


சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள 

ஆரஞ்சு, சாத்துக்குடி 


பீன்ஸ், 


வெண்டைக்காய், 


பாகற்காய்


பச்சை நிறக் காய்கறிகள் அனைத்தும்.


⭐ தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு தவிர்க்காமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக 

2 வருடங்கள்வரை கொடுக்கலாம்.


⭐ வைட்டமின் டி


அதிக சூரிய வெளிச்சத்தில் (வெயிலில்) அலைவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உண்மை தான். ஆனால், அதிகாலையில் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தில் இருந்து நமது உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின் டி சத்து  கிடைக்கிறது. நீரிழிவு மற்றும் இதய பாதிப்புகள் உள்ளவர்கள் காலையில் சூரிய ஒளிப்படும்படி நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது என்று  கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி