அடுப்பில்லா வெண்பொங்கல்

 *ஆத்ம வணக்கம்*🌿🙏👏


*உணவே நல்மருந்து*

தலைப்பில் இன்று நாம்

ரசித்து சுவைத்து ருசிக்க இருப்பது....


 🔥அடுப்பில்லாமல்

💧ஆயில் இல்லாமல்...

🌞உங்கள் ஆயுளை நூறாக மாற்றும் *அடுப்பில்லாசமையல்* 


*அடுப்பில்லா வெண் பொங்கல் செய்முறை*



ஊற வைத்த வெள்ளை அவல்( கொஞ்சம் நன்கு ஊற வைத்தது) தேங்காய் பாலில் ஊற வைத்தால் சிறப்பு🌿🙏😊


ஊற வைத்த பாசி பருப்பு


விழுது அரைக்க சிறிது தேங்காய் ஓரு சிட்டிகை சீரகம், இஞ்சி,  மிளகு  , சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும் மிகவும் நைசாக அரைக்க வேண்டாம்....தேவைகேற்ப முந்திரி...சிறிது பசுமையான கருவேப்பிலை சிறிது....

தேங்காய் பால் தேவைக்கு

    


*செய்முறை*🌿🙏👍


நன்கு ஊற வைத்த  நீர் இல்லாமல் பிழிந்த அவலில் , ஊற வைத்த பாசி பருப்பு , அரைத்த விழுது, மற்றும் கருவேப்பிலை, முந்திரி, தேங்காய் பால் தேவை எனில் நெய் சேர்த்துக்கொள்ளலாம்...... 


அனைத்தையும் நன்கு ஓன்றொரு ஓன்றாக கலந்து விடவும்...

இப்பொழுது அடுப்பில்லா வெண்பொங்கல் தயார்.....


நன்றி.......


*ஶ்ரீபதஞ்சலி ஈஸ்வரன்*

ருதம்பரா யோகா கோவை

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி