மரம் நட இடைவெளி

 மரங்களை நடும் பொழுது கவனிக்கவேண்டிய முக்கிய இடைவெளிகளின் அடி  அளவீடுகள்.


👉வேப்பமரம். 15' × 15'

👉பனைமரம். 10' × 10'

👉தேக்கு மரம். 10' × 10'

👉மலைவேம்பு மரம்.  10' × 10'

👉சந்தன மரம். 15' × 15'

👉வாழை மரம். 8' × 8'

👉தென்னை மரம்.  24' × 24'

👉பப்பாளி மரம்.  7' × 7'

👉மாமரம் உயர் ரகம். 30' × 30'

👉மாமரம் சிறிய ரகம். 15' × 15'

👉பலா மரம்.  22' × 22'

👉கொய்யா மரம்‌.  14' × 14'

👉மாதுளை மரம்.  9' × 9'

👉சப்போட்டா மரம். 24' × 24'

👉முந்திரிகை மரம். 14' × 14'

👉முருங்கை மரம்.  12' × 12'

👉நாவல் மரம்.  30' × 30'


இவ்வகையான இடைவெளிகள் பண்டைய காலம் முதல் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்து இருக்கிறார்கள் என்பதை பல நூல்களும் நமக்கு கூறுகிறது. 


தென்னைக்கு தேரோட..

வாழைக்கு வண்டியோட...

கரும்புக்கு ஏரோட....

நெல்லுக்கு நண்டோட.....!


என்று அனைவருக்கும் புரியும் வகையில் சுருக்கமாக கூரி பின் பற்றி வந்து இருக்கிறார்கள்.


#இடைவெளி_அமைப்பதின்_பயன்கள்!


இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது.


இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும். இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்.

மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.


இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.


Copied

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி