வாழ பழம்

 #வாழைப்பழ❗❗❗


#வகைகள்_பலவகைகள்_உள்ளது…❓❓


▶பேயன் வாழைப்பழம், 


▶ரஸ்தாளி வாழைப்பழம், 


▶பச்சை வாழைப்பழம், 


▶நாட்டு வாழைப்பழம், 


▶மலை வாழைப்பழம், 


▶நவரை வாழைப்பழம், 


▶சர்க்கரை வாழைப்பழம், 


▶செவ்வாழைப்பழம், 


▶பூவன் வாழைப்பழம், 


▶கற்பூர வாழைப்பழம், 


▶மொந்தன் வாழைப்பழம்,

 

▶நேந்திர வாழைப்பழம், 


▶கரு வாழைப்பழம், 


▶அடுக்கு வாழைப்பழம் 


▶வெள்ளை வாழைப்பழம், 


▶ஏலரிசி வாழைப்பழம், 


▶மோரீஸ் வாழைப்பழம்

 

👉என பலவகைகள் உள்ளன.❗❗


#பேயன்


தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம் அதிக உஷ்ணமான தேகத்தை பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

மலச்சிக்கலை நீக்கும்.தேகத்தில் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.


#ரஸ்தாளி


உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள். இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.

அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.

வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


#பச்சை 


பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.

நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுக்த் தொடங்கிவிடும்.)இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது.குறைந்த அளவே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.

அதிக உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.

பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.

மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.


#மலை


சற்று விலை அதிகமான பழம்.

வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.

நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.

இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.

நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

அஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும்.இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவதுநல்லது. பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.


#பூவன் 


இப்பழம் நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.

மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள், குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.அஜீரணக் கோளாறால் சிரமப்படுபவர்கள் தினமும் அதிகப்படியாக உணவு உண்பதை தவிர்த்து விட்டு தினமும் ஒரு வேளை மட்டுமே இப்பழத்தை இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


#கற்பூரவள்ளி


சிறிய அளவில் இருக்கும்

இனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது தலைபாரம் நீங்கப் பயன்படும்.


#மொந்தன்


இப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார். சமையலுக்கு உபயோகப்படுத்தும் வாழைக்காயைப் பழுக்க வைத்த பின் எடுக்கும் பழத்தைத்தான் மொந்தன் பழம் என்ற கூறுவார்கள். கனிந்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும். மிதமாக அளவாகத்தான் இப்பழத்தை சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று உள்ளே தள்ளினால் பசியை மந்தப்படுத்தும். அளவாக தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும். வாந்தியை நிறுத்தும்.காமாலை வியாதியை சுகப்படுத்தும் குணம் உண்டு.


#நேந்திரன்


கேரளத்தில் அபரிமிதமாக விளையும் பழம் இது. கோவையிலும் விளைவிக்கிறார்கள். நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.


மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம். நல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும். உடம்புக்கு குளிர்ச்சியை தருவது. இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும் வற்றல், சிப்ஸ், ஜாம் செய்து விற்கிறார்கள். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பை மூட்டி இட்லி பானையை வைத்து இட்லி தட்டில். இட்லிவேக வைப்பதுபோல அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து. 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் சாண்டோ வாக திகழ்வார்கள்.

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். இதனால் தான் கேரளியர் படிப்பில் சிறந்து விளங்குகிறார்களோ?

சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும்.


#நவரை  


மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது

அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவாதது.

சொறி, சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாகு இதைச் சாப்பிட்டால் புண் அதிகமாகும். வாத நோய்க்காரர்களுக்க ஆகவே ஆகாது. பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கம். அதாவது மந்தமாகவே இருக்கும்.


#அடுக்குவாழை


நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.

இந்தப்பழத்திற்குள்ள நல்ல குணம், எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதியம் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடபமல் இருப்பது நல்லது.


#கருவாழை 


அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்

மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம்

வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது

உடலுக்கு ஊட்டத்தைத் தருதம் நல்ல பழம் இது. குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள். வெள்ளை தொகு

இப்பழம் மிகுந்த சுவையுள்ளதாக இருக்கும்


#ஏலரிசிவாழைப்பழம் 


ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.


#சிங்கன்  


இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.


#செவ்வாழை 


வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்

சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது

கேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.

சற்று விலை அதிகமானது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம். செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.


.*பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.


இருதயம் பலப்படும் பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது. பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி