கை கால் முடக்கம் தீர

 வாழ் நாளில் கை கால் முடக்கம் என்றும் வராமல் இருப்பதற்கும்

இருக்கின்ற கை கால் முடக்கம் எளிதாக குணம் அடைவதற்கும் ஒரே வைத்தியம்


   அனைத்து உயிர்களின் முறையான உடல் இயக்கத்திற்கு சுவாசத்தின் இயக்கமும் இரத்த ஓட்டமும் சீராக நடைபெற வேண்டும்


   இவைகளின் இயக்கங்கள் சீராக நடைபெற்றால் நுரையீரல் பாதிக்கப்படுவதில்லை ரத்த ஓட்டத்தில் தடைகள் மற்றும் ரத்தக்குழாய் அடைப்புகள் ஏற்படுவதில்லை


   இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் வாத நோய்கள் வந்துவிட்டால் அதை மருந்து மாத்திரை இல்லாமல் சித்தர்கள் அருளிய மூலிகை நீராவி குளியல் மூலமாகவும் மூலிகை ஒத்தடம்  மூலமாகவும்  இதை சரி செய்து கொள்ளலாம்


   வாத நோய்களைத் தீர்க்கும் மூலிகை நீராவியில் வேது பிடிக்கும் வைத்தியமுறை


                 தழுதாழை ஒரு கைப்பிடி 

         நொச்சி இலை ஒரு கைப்பிடி

             பழுத்த எருக்கிலை  மூன்று 


    இவைகளை ஒரு பாத்திரத்திலிட்டு மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி  பாத்திரத்தை மூடி இதை வேகவைத்து

இந்த மூலிகை சுடு நீரில் ஐந்து நிமிடம் உடல் முழுவதும் இந்த மூலிகையின் நீராவி உடலில் படுமாறு கண்களை மூடிக்கொண்டு வேது பிடிக்க வேண்டும்


  மருத்துவ பயன்கள்


 உடலில் இருக்கின்ற வாதநீர் முழுவதும் வியர்வையின் மூலமாக வெளியேறி விடுகின்றது


  மூலிகை நீராவியில் வேக பிடிப்பதின் மூலம் மூலிகையின் உயிர்சத்துக்கள் சுவாசத்தின் மூலமாக உடலுக்கு எளிதாக கிடைக்கின்றது 


  இதனால் நுரையீரலில் இருக்கின்ற சளிகள் முழுமையாக நீங்கிவிடுகின்றன


   தொண்டைக்கட்டு கபம் நுரையீரலில் இருக்கின்ற சளி   இவைகள் நீக்குவதன் மூலமாக காற்றோட்டமும் ரத்த ஓட்டமும் முறையாக நடைபெறுவதால் இதன் காரணமாக வாத நோய்கள் எதுவும் வாழ்நாள் முழுவதும் நமக்கு வருவதில்லை


  நீராவிக் குளியலுக்கு பயன்படுத்திய தண்ணீரை உடல் முழுவதும் ஒரு துணியில் நனைத்து மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுத்து வர வேண்டும்

இதனால் அனைத்து விதமான உடல் வலிகளும் வாத நோய்களும் எளிதாக நீங்கிவிடும்


நீராவி குளியல் செயல்முறை


   இலைகளை போட்டு கொதிக்க வைத்த பாத்திரத்தை  பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பாத்திரத்தையும் நம்மையும் ஒரு போர்வையால் மூடிக்கொண்டு நீராவி வெளியேறாமல் நமது உடலின் மேல் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் இதுவே வேது பிடிக்கும் முறையாகும்


    வாத நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்களும் இந்த வைத்திய முறையை பயன்படுத்தலாம் நிவாரணம் கிடைக்கும்


வாத நோய்களை தீர்க்கும் மூலிகை ஒத்தட வைத்திய முறை


      தழுதாழை இலை ஒரு கைப்பிடி 

                  எருக்கிலை  ஒரு கைப்பிடி 

            நொச்சி இலை ஒரு கைப்பிடி

             திரிகடுகு சூரணம் 10 கிராம்

        ஒரு மூடி துருவிய தேங்காய்ப்பூ


  இவைகளை ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு இதனுடன் சிறிது  விளக்கெண்ணெய் சேர்த்து தீயிலிட்டு  வதக்கி இதை ஒரு துணியில் வைத்து முடிந்து கொண்டு வாத நோயால் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தினந்தோறும் இதை ஒத்தடமாக காலை மாலை இரண்டு வேளையிலும் தவறாமல்15 நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தால் வாத நோய்களின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும் வலிகள் இருக்காது வாத நோயால் வருகின்ற கை கால் மரத்துப்போதல் உணர்வில்லாத நிலை  போன்ற பாதிப்புகளும் நீங்கிவிடும்

   

    குறிப்பாக முக்குணங்களில்  வாத குணம் மிகுதியால் ஏற்படுகின்ற தோள் பட்டை வலி முதுகு வலி மூட்டு வலி இடுப்பு வலி தசைகளில் ஏற்படுகின்ற வலிகள்  மேலும் உடல் முழுதும் ஏற்படுகின்ற அனைத்து வலிகளுக்கும் சரவாங்கி நோயால் பாதிக்கப்பட்ட மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலிகளுக்கும் நிவாரணம் தருகின்ற நல்ல வைத்திய முறை இதுவாகும்


   மருந்து 1


   அமுக்கரா சூரணம் 100  கிராம் சிற்றரத்தை சூரணம் 100 கிராம் 


   இவைகளை ஒன்றாக கலந்து தேனில் சாப்பிட்டு வந்தால் உடல் சார்ந்த அனைத்துவிதமான வலி நோய்களும் குணமாகும் 


மருந்து 2


  வாத நோயால் பாதிக்கப்பட்டு  ஆரம்பநிலையில் இருக்கின்ற  வாத நோயாளிகளுக்கு ஒரு எளிய வைத்தியம்


சித்திர மூல வேர் பொடி 

மிளகரணை வேர் பொடி 

நொச்சி வேர் பொடி 


இவைகளை சம அளவாக எடுத்து ஒன்றாகக் கலந்து கொண்டு காலை மாலை என இரண்டு வேளையும் குளிர்ந்த நீரில் தொடர்ந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் சகல விதமான கைகால் முடக்கு வாத நோய்களும் விலகிவிடும்  


                                    நன்றி


                       சித்தர்களின் சீடன் 

                  பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி