மார்பகங்கள் பராமரிப்பு

 🇨🇭#பெண்களின்_மார்பகங்கள் #தாய்மையின்_சின்னங்கள்.❗❗❓


🇨🇭#பெண்களின்_மார்பகம்

#தெளிவுகளும்_தீர்வும் ❗❗


உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. 


பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம்.


பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். 


ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில் இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும். மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம். தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல் முரண்பாடுகளில் ஒன்று.


அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர். அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய ஆரம்பித்தோம்.


இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர். இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.


இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய்(Breast cancer) தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள். இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.


மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும். இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும். 


பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் 

என்றால், ‘சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொ ங்கி காணப்படுகிறது’ என்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.


மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அள வும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.


டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதா கவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியா சம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.


பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.


ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.


இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.


இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன்றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். 


⭕👉மாடலிங் தொழில் செய்யும் 

பெண்கள் ……👇


பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வேண்டும் என்பதுதான்❗


‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்புகள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படியில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத்து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார்பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கியமாய் பராமரிக்கத் தகுந்தவை.


.

⭕ #பெண்களின்_மார்பகம் #ஆரோக்கியமாக_இருக்க…


💊#உணவுகள்_என்னவென்று

#பார்ப்போமா……❓❓❓


⭐தானியங்களில் பார்லி, ப்ரௌன் அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால், மார்பகத்தின் அளவு அதிகரிக்கும்.


⭐பால் பொருட்களான பால் மற்றும் தயிரில் அதிகமான அளவில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது.


எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மார்பகம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


⭐பீன்ஸ், பட்டாணி, சுண்டல், பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் நிறைந்துள்ளது.


ஆகவே இதனை சாப்பிட்டால், உடலும் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். சிக்கனில் ஈஸ்ட்ரொஜெனின் அளவு அதிகமாக உள்ளது.


ஆகவே இதனை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால், மார்பகத்தின் ஆரோக்கியம் இயற்கையாக அதிகரிக்கும். காய்கறிகளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது.


இதனை சாப்பிடுவதால், மார்பகத்தில் உள்ள திசுக்கள் நன்கு வளர்ச்சி அடைந்து, மார்பகத்தின் ஆரோக்கியம்  அதிகரிக்கும்.


⭐பீட்ரூட், கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். 


⭐புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டவேண்டும்.


⭐அதிலும் முட்டை, மீன், இறைச்சி மற்றும் பால் போன்றவற்றில், இந்தச் சத்து பெருமளவில் உள்ளது.


⭐பெர்ரிப் பழங்களான செர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்களில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜென் அடங்கியுள்ளது.


இதனை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மார்பகத்தின் ஆரோக்கியம்   அதிகரிக்கும்.


👇கீழே உள்ள படம் மார்பகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம்.👇


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


   ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி