கொய்யா இலை

 #கொய்யாஇலையின்_நன்மைகள்.


* கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.


* கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் Quercetin போன்றவை உள்ளன.


* குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலை இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. இதில் Carotenoids மற்றும் Flavonoids அதிகம் உள்ளன.


* கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.


* செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும். உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.


* கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.


100 - கிராம் கொய்யா இலையில் புரதம் - 2.55 கிராம், வைட்டமின் B6 - 0.11 மி.கி, கோலைன் - 7.6 மி.கி வைட்டமின் சி - 228.3 மி.கி, கால்சியம் - 18 மி.கி, இரும்பு - 0.26 மி.கி, மெக்னீசியம் - 22 மி.கி, மாங்கனீசு - 0.15 மி.கி, பாஸ்பரஸ் - 40 மி.கி, பொட்டாசியம் - 417 மி.கி, சோடியம் - 2 மி.கி, துத்தநாகம் - 0.23 மி.கி ஆகியன அடங்கியுள்ளது..


#கொய்யாஇலை_தேநீர்.


‘‘ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு நீரினை நன்றாக கொதிக்க வைத்து அதில் 5 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது கொதிக்கும்போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி, டீத்தூள், ஏலக்காய், சீரகம் போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து, தேவையான அளவு நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் கொய்யா இலை டீ ரெடி. நன்றாக வடிகட்டி காலை, மாலை இருவேளையும் அருந்தலாம்.’’


#கொய்யாஇலை_தேநீரின்_நன்மைகள்...


 கொய்யா இலையை தேநீராக உட்கொள்ளலாம். அவ்வாறாக உட்கொள்ளும்போது உடல் எடை குறைகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது.


 உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.


 கொய்யா இலை சாறில் அமிலேஸ்(Amylase) நொதியை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இருக்கிறது, பல் வலி ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது.


 ப்ரோஸ்டேட் புற்றுநோயை வராமல் தடுக்கிறது. ஆண்மைக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் கொய்யா இலை தேநீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.


 விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இருமல் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.


 கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைபடும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.


 கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் தயாரிக்கலாம்.


 பச்சையாக கொதிக்க வைத்து அருந்துவது சிறந்தது. அதன் மருத்துவப்பயனும் முழுமையாக கிடைக்கும். கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்னைகள் நீங்கும்.


 வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. சுவாச கோளாறுகளுக்கும் மூக்கு அழற்சிக்கும் கொய்யா இலை தேநீர் உதவுகிறது.


 செரிமான பிரச்னை உள்ளவர்கள், கொய்யா இலையின் தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறுவதற்கு உதவுகிறது.


 கல்லீரலை சுத்தம் செய்கிறது. கொய்யா இலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் கட்டி வளர்ச்சிகளை தடுக்கிறது.


 பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறுமற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. குறிப்பாக இதுபோன்ற மழைக்காலங்களில் கொய்யா இலை தேநீர் அருந்துவது நல்லது.


 நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் காய்ச்சல்கள் வராமலும் பிற நோய்த்தொற்று வராமலும் தடுக்கலாம். கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மெல்வதும் கூட நன்மை தரும்!’’

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி