RR

 Bach Flower - Rescue Remedy (RR)

    செயல்படும் சூட்சமம் 

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️


🌷 மலர்மருத்துவத்தில் Rescue Remedy  என்ற ஒர் ஆபத்பாந்தவன் உண்டு.


🌷 மலர்மருத்துவத்தில் உள்ள 38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை தான் இந்த Rescue Remedy.


🌷 அனைத்துவித அவசரகாலங்களிலும் இந்த மருந்து அற்புதமாக செயல்படும்.


🌷 திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி போன்றவற்றால் நம் மனம் பாதிக்கப்படும் போது ஏற்படும் மோசமான விளைவுகளுக்கு இது உடனடி தீர்வாக அமையும்.


🌷 அவசரகாலங்களில் ஒரு மனிதனின் மனம் எப்படிபட்ட எதிர்மறை எண்ணங்களாக மாறும் என்பதை ஆராய்ந்த Dr.Edward Bach அவர்கள் , அதை உடனடியாக சரி செய்யும் ஐந்து மலர்களை தேர்ந்தெடுத்து ஒரு கலவையாக உருவாக்கியதுதான் இந்த Rescue Remedy.


Star of Bethlehem -அதிர்ச்சி

Rock Rose – பயம்,பீதி

Impatiens – பதட்டம்

Cherry Plum – வலி பொறுக்கமுடியாமை

Clematis – சுயநினைவு இழத்தல்


🌷 இந்த Rescue Remedy பஞ்சபூதம்,பஞ்சலோகம், பஞ்சகவ்வியம் போன்று இதுவும் பஞ்சபுஷ்ப கலவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


🌷 மனிதன் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு முதலில் நமது உடல் இயக்கம் பற்றி தெளிவான புரிதல் வேண்டும்.


🌷 நமது உடலின் சுகமான இயக்கத்திற்கு இந்த ஐந்து மூலங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.


1. ஸ்தூல உடல்

2. சூட்சம உடல்

3. அறிவு

4. புத்தி

5. மனம்


🌷 இந்த ஐந்து மூலங்களும் எப்படி வேலை செய்கிறது, அவைகளுக்குள்ளே எப்படி தகவல் பரிமாற்றம் நடக்கிறது,  இந்த 5 மூலங்களும் Rescue Remedy ல் உள்ள ஐந்து மலர்களோடு எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளேன்.


🌷 இந்த நுணுக்கத்தை தெரிந்து கொண்டு , ஒருவரின் பிரச்சனையை ஆராய்ந்து எந்த மூலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து, Rescue Remedy யில் உள்ள மலர்களில் இரண்டு மலர்களை மட்டும் தேர்தெடுத்து கொடுத்தால்,  அவரின் வாழ்க்கையில் உள்ள பல நீண்டகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.


🌷 ஐந்து மலர்களின் கலவையான Rescue Remedy, அவசர காலங்களில் உடனடி தீர்வாக பயன்படுகிறது 


🌷 என்மூலம் மலர்மருத்துவம் பயின்றவர்களுக்கு இந்த சூட்சமங்கள் மற்றும் வாழ்வியல் ரகசியங்களோடு இணைந்து பயிற்சி அளிக்கபட்டு உள்ளதால், வாய்ப்பு இருந்தால் அவர்களை தொடர்புகொண்டு ஆலோசனை பெறவும்.


🌷 மலர்மருத்துவம் என்பது உடலை மட்டும் சரிசெய்யும் மருந்து அல்ல, மனித இனத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் சரிசெய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் அற்புத ஆற்றல் கொண்டது.


🌷 இயற்கை அனுமதித்தால் நீங்களும் மலர்மருத்துவத்தை ஆழமாகவும், மிக நுணுக்காமாகவும் கற்று பயன்பெற முடியும்.


நன்றி


ர.ஞானகுமரன்

மலர்மருத்துவம் & வாழ்வியல் பயிற்சியாளர் 

மதுராந்தகம்


www.greatenergy.in


எங்கள் Telegram குழுவில் இணைய


👇👇👇👇


https://t.me/+5d0qzmBsle04MTA9

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி