விந்து நஷ்டம் சரியாக

 விந்து நஷ்டம் ஏற்படுவதற்கான காரணங்களும்

நிவர்த்தி செய்வதற்கான மருந்துகளும்


இதயத்தின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்


       இதற்கு கொத்தமல்லி கீரையை அரைத்து சாறு பிழிந்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தொடர்ந்து இதை குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்


       இதனால் இதயத்தின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


மூளையின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்


      இதற்கு வில்வ இலையை சிறிது தண்ணீர் சேர்த்து  அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சீரகமும் பனங்கற்கண்டும் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும்


      இதனால் மூளையின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


ஈரலின் பலம் குறைந்தால் விந்து 

நஷ்டம் ஏற்படும்


      இதற்கு ஓரிதழ் தாமரை கீழாநெல்லி விஷ்ணுகிரந்தி மூன்றையும் சம அளவாக சூரணம் செய்து வைத்துக்கொண்டு இதை பசும்பால் அல்லது தேனில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈரல் பலம் பெறும்


     இதனால் ஈரலின் பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


சிறுநீரகத்தின் பலம் குறைந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்


      இதற்கு அமுக்கிரா கிழங்கு பூனைக்காலி விதை பனங்கற்கண்டு மூன்றையும் சம அளவாக சூரணம் செய்து வைத்துக் கொண்டு சாப்பிட்டு வருவதாலும்


      அமுக்கறா கிழங்கு சூரணம் சீந்தில் தண்டு சூரணம் இரண்டையும் ஒன்றாக கலந்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரகம் பலம் பெறும்

    

       இதனால் சிறுநீரக பலவீனத்தால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


உடலில் சூடு ஏற்பட்டு வறட்சி அதிகரித்து இருந்தால் விந்து நஷ்டம் ஏற்படும்


      இதற்கு சந்தனம் தேற்றான்கொட்டை பூமிசர்க்கரைகிழங்கு பூனைக்காலி வித்து முருங்கை வேர் முருங்கை பட்டை இவை அனைத்தையும் சரிசமமாக சூரணம் செய்து வைத்துக்கொண்டு தேங்காய்ப்பால் அல்லது பசும் பாலில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்பட்ட சூடு குறையும்


       இதனால் உடலின் வறட்சியால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


உடலில் அதிக குளிர்ச்சி அதிகமானால் விந்து நஷ்டம் ஏற்படும்


இதற்கு அமுக்கிராக் கிழங்கு நூறு கிராம் கருவேலம் பிசின் ஐம்பதுகிராம் என்ற அளவில் சூரணம் செய்து வைத்துக் கொண்டு இதைத் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர்ச்சியை சமநிலைப்படும்


     இதனால் உடலின் குளிர்ச்சியால் ஏற்பட்ட விந்து நஷ்டம் சரியாகும்


விந்து நஷ்டம் எந்த காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் அதற்கான பொதுவான மருந்து


      இதற்கு நிலப்பனங்கிழங்கு தண்ணீர்விட்டான் கிழங்கு நெரிஞ்சில் வேர் மூன்றையும் சம பாகமாக சூரணம் செய்து வைத்துக்கொண்டு இந்த சூரணத்தை 5 கிராம் அளவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் அனைத்து விதமான விந்து நஷ்டங்களும் குணமாகும்


நன்றி


ஆத்ம நமஸ்காரம்

ஓம் பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி