கர்ப்பிணிகளுக்கான காபி

 🇨🇭#கர்ப்பிணிகளுக்கும்...

#ஆரோக்கியமான_முறையில்…


🇨🇭#ஹெர்பல்_காபி_டீ_பால்

#கொடுக்க_வேண்டுமா…❓❓❓


💚 கர்ப்பிணிகள், தாய்மார்கள், 

1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல் 

காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா…❗


காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும்.❗


அசத்தலான, புதுமையான சுவையில் ஆரோக்கிய டீ, காபி, பால் வகைகளை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.


⭕ 9 வகை ஆரோக்கிய 

       காபி, டீ மற்றும் பால்……❗❗❗


💊 #இஞ்சி_டீ💊


★தேவையானவை


இஞ்சி – 2 துண்டு


ஏலக்காய் – 1


பால் – கால் கப்


பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.


❓செய்முறை❓


இஞ்சி தோலை நீக்கவும்.


ஏலக்காயைத் தட்டி, இஞ்சியைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிடவும்.


பாதியாக சுண்டியதும், வடிகட்ட வேண்டும்.


பால், பனஞ்சர்க்கரை கலந்து குடிக்கலாம்


👇பலன்கள்❓


செரிமானத்தை மேம்படுத்தும்.


வாயுவைப் போக்கும்.


💊  #சோம்பு_தனியா_டீ 💊


👉 தேவையானவை


தனியா, சோம்பு – தலா 50 கிராம்


ஏலக்காய் – 1


கருப்பட்டி – 2 டீஸ்பூன்


புதினா – 1 கைப்பிடி


❓ செய்முறை❓


தனியா, சோம்பை ஒன்றும் பாதியுமாக மிக்ஸியில் அரைக்கவும். இந்தப் பொடிதான் இந்த டீக்கு அடிப்படை.

2 டம்ளர் தண்ணீரில் அரைத்து வைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்க்கவும்.

கருப்பட்டி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஒரு டம்ளராக மாறியதும் வடிகட்டி குடிக்கலாம்.


👇 பலன்கள்


மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே நிறைந்துள்ளன.


சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.


தாய்ப்பால் சுரக்க உதவும்.


பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.


💊  #சின்னமன்_டீ 💊


👉 தேவையானவை


கிரீன் டீ பவுடர் – 2 டீஸ்பூன்


பட்டைப்பொடி – கால் டீஸ்பூன்


பிரவுன் சுகர் – ஒரு டீஸ்பூன்


❓ செய்முறை


கொதிக்கும் நீரில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு. பின், வடிகட்டி பிரவுன் சுகர் சேர்த்துக் குடிக்கலாம்.


👇 பலன்கள்


ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.


உடல் எடையைக் குறைக்கும்.


பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஏற்றது.


💊  #ஆரஞ்சுதோல்_டீ 💊


👉தேவையானவை


ஆரஞ்சுத் தோல் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்


புதினா – 1 கைப்பிடி


பிரவுன் சுகர் – 2 டீஸ்பூன்.


❓செய்முறை❓


ஆரஞ்சுத் தோலை பொடியாக நறுக்க வேண்டும்.


இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, புதினா சேர்க்கவும்.


சுண்டியதும் எடுத்து, வடிகட்டி பிரவுன் சுகர் சேர்த்துப் பருகலாம்.


👇 பலன்கள்


விட்டமின் சி கிடைக்கும்.


சருமம் பளபளப்பாகும்.


கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க ஏற்றது.


💊 #ஆவாரம்பூ_காபி 💊


❓தேவையானவை


ஆவாரம் பூ பொடி – 2 டீஸ்பூன்


பட்டை – 1 துண்டு


கருப்பட்டி – ஒரு டீஸ்பூன்


பால் – 1/2 கப்


❓ செய்முறை❓


இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி போட்டு கொதிக்கவிடவும்.


பாதியாக சுண்டியதும் வடிகட்டி, பால், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.


👇 பலன்கள்


செரிமானத்தை சீராக்கும்.


கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தீரும்.


கர்ப்பக்கால சர்க்கரை நோயை விரட்டும்.


குறிப்பு: ஃப்ரெஷ்ஷான பூ கிடைத்தாலும் பயன்படுத்தலாம்.


💊 #செம்பருத்திப்பூ_காபி💊


👉தேவையானவை


செம்பருத்திப் பூ – 2


ஏலக்காய், கிராம்பு – 

தலா 1


மிளகு – 3


பால் – 1/2 கப்


பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.


❓செய்முறை❓


செம்பருத்திப் பூவை ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிட வேண்டும்.


இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்து சேர்க்கவும்.


கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.


👇 பலன்கள்


ரத்தத்தை சுத்திகரிக்கும்.


கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.


சருமத்தைப் பாதுகாக்கும்.


💊 #தாமரைப்பூ_காபி💊


👉தேவையானவை


வெண்தாமரை (அ) 

செந்தாமரை – 1


மிளகு – 2


கிராம்பு, ஏலக்காய் – 

தலா 1


பால் – ½ கப்


பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.


 ❓செய்முறை❓


இரண்டு டம்ளர் தண்ணீரில் தாமரைப் பூவை மட்டும் போட்டுக் கொதிக்கவிடவும்.


கொதி வரும்போது மிளகு, ஏலக்காய், கிராம்புப் பொடி சேர்க்கவும்.


முக்கால் டம்ளர் அளவு சுண்டியதும், வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.


👇 பலன்கள்


மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும்.


கர்ப்பப்பையை வலுவாக்கும்.


பெண்களுக்கு மிகவும் ஏற்றது.


பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.


💊 #பேரீச்சம்_சிரப்_பால்💊


❓தேவையானவை


பேரீச்சம் சிரப் – 2 டீஸ்பூன்


பால் – ஒரு டம்ளர்


** செய்முறை


காய்ச்சிய பாலில் பேரீச்சம் சிரப் கலந்து குடிக்கவும்.


👇 பலன்கள்


ரத்தசோகையைப் போக்கும்.


சருமத்தைப் பாதுகாக்கும்.


நினைவாற்றாலை மேம்படுத்தும்.


குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு ஏற்றது.


 💊 #சுக்கு_காபி💊


👉தேவையானவை


சுக்கு – 1 துண்டு


ஏலக்காய் – 1


மிளகு – 3


பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன்


பால் – 1/2 கப்.


❓ செய்முறை❓


சுக்கு, ஏலக்காய், மிளகு சேர்த்துப் பொடிக்கவும்.


இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்க

விடவும்.


பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.


👇 பலன்கள்


செரிமானப் பிரச்னைகள் நீங்கும்.


சளி, கபம் நீங்கும்.


நோய் எதிர்ப்பு சக்தி தரும்.


ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி