சுக்கு பால்

 உடல் நோய்கள் முழுவதும் நீங்க 

     சுக்கை சாப்பிட்டால் போதுங்க


நோயின்றி வாழ 

சுக்கு பால் தயாரிக்கும் முறை


சுக்கின் மேல் தோலை நீக்கி விட்டு பொடியாக செய்து இதை கால் லிட்டர் தண்ணீருடன் சேர்த்து பாதியாக சுண்ட காய்ச்சி 


   இந்த சுக்கு நீருடன்  பால் பாதி தண்ணீர் பாதியாக கலந்து காய்ச்சிய பசும்பாலில் நூறு மில்லி எடுத்து இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இதை காலை மாலை இருவேளையும் பருகி வர 


  வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கி கப நோய்களை சமநிலைப்படுத்தி உடலை நோயின்றி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்


சுக்கை ஏதாவது ஒரு வகையில் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் இதன் மூலம் தலைநோய் சீதள நோய்கள் வாதகுடைச்சல் உடல் வலி 

விலா எலும்பை பற்றிய வலிகள் வயிற்றுப்போக்கு மூக்கடைப்பு மூக்கில் நீர் ஒழுகுதல் அதாவது நீர் பீனிசம் நீர்க்கோவை உடலில் நீர் ஏற்றம் இது  போன்ற நோய்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் வாய்வு பிடிப்பு கீல் மூட்டு வலிகள் வாத வலிகள் இவைகளை முழுவதும் நீக்கி மலச்சிக்கல் காதுவலி பல்வலி சுவாச கோளாறுகள் இவை அனைத்தையும் வெகு எளிதாக நீக்கும் ஒரு ஆற்றல் சுக்குக்கு அதிகமாக உண்டு என்பதே சித்தர்களின் கருத்தாக இருக்கிறது


சுக்கு பால் 

(இன்னொரு முறை)


சுக்குப் பொடியை இரண்டு கிராம் எடுத்து கால் லிட்டர் பசும்பாலில் கலந்து காய வைத்து 


பால் காய்ந்த பின்

பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து


இதே பாலில் மீண்டும் இரண்டு கிராம் சுக்குப் பொடியை சேர்த்து இதை ஆற வைத்து இளம் சூடாக இருக்கும் பொழுது பருகி வர வாய்வு தொல்லைகள் நீங்கும் உடல் அசதி விலகும் மூட்டு வலிகளை குணப்படுத்தும் முக்கியமாக அஜீரண நோய்கள் அனைத்தையும் நீக்கி உடலுக்கு வலிமையை தரும் உடல் உறுப்புகள் அனைத்தும் பலம் பெறும்


   தினந்தோறும் மதிய உணவு சாப்பிட்டு முப்பது நிமிடங்கள் கழித்து மூன்று கிராம் சுக்குப் பொடியை கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் குடித்துவர 


இதன்மூலம் வாய்வு தொடர்பான நோய்கள் அனைத்தும் நீங்கும் மலச்சிக்கலை வேரறுத்து குடல்  

சார்ந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்

 பித்தத்தை சமநிலைப்படுத்தும் அஜீரணத்தை குணப்படுத்தும் 


உடல் வலிகளை நீக்கும் 

மலச்சிக்கலை குணப்படுத்தி மலச்சிக்கலால் வருகின்ற தீராத தலைவலியை குணப்படுத்தும் 


வாத நோய்களை உடலுக்கு வராத வண்ணம் பாதுகாக்கும்

 கெட்ட கொழுப்புகள் உடலில் ஏற்படாதபடி நம்மை வாழவைக்கும்


மலச்சிக்கலால் ஏற்படும் நாட்பட்ட தலைவலி குணமாக ஒரு எளிய வைத்தியம்


சுக்கு 100 கிராம் 

கடுக்காய் 100 கிராம் 

நிலாவிரை பொடி 50 கிராம் 

மிளகு 10 கிராம் உப்பு 10 கிராம்


இவைகளை அளவுகளின் படி எடுத்து நன்றாக பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு 


இந்த மூலிகை பொடியில் மூன்று கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பாதியாக சுண்ட காய்ச்சி காலை வேளையில் இதை பருகிவர நீண்டநாளாக இருக்கின்ற மலச்சிக்கல் நீங்கும் மலச்சிக்கல் மூலம் ஏற்பட்ட தலைவலி நிரந்தரமாக குணமாகும்


பல் வலிகளை குணப்படுத்தும் 

                                சுக்கு பல்பொடி


சுக்கு காசிக்கட்டி கடுக்காய்த் தோல் இந்துப்பு இவைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து கொண்டு இந்த பொடியில் பல் துலக்கிவர பல் ஆட்டம் பல் சொத்தை நீங்கி ஈறுகளில் ரத்தம் கசிவது குணமாகி பற்கள் வலிமை பெறும்


பல்வலி நீங்க


  தோல் நீக்காத சிறிய சுக்கு துண்டை வாயிலிட்டு மென்று வலியுள்ள இடத்தில் சிறிது நேரம் வைத்திருக்க பல்வலி குணமாகும்


எல்லா நோய்களும் நீங்க 

      ஒரு எளிய வைத்தியம்


சுக்கு 

மிளகு 

திப்பிலி 

சீரகம் 

பெருங்காயம் 

கறிவேப்பிலை


  இவைகள் அனைத்தையும் ஓர் அளவாக எடுத்து பொடி செய்து அந்த பொடியை ஒன்றாக கலந்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும் 


இந்த மூலிகை பொடியில்  ஐந்துகிராம் எடுத்து இதில் சிறிது இந்துப்பு சேர்த்து தினந்தோறும் காலையில் சாப்பிடும் முதல் அன்னத்தில் இதை கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர 


ஆயுள் முழுவதும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ இது வழிவகுக்கும்  உறுதி உண்மை


சித்தர்களின் சீடன் 

பிரம்மஸ்ரீ ராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி