Posts

Showing posts from May, 2022

சிறுநீரக பாதிப்பு

 🇨🇭#கால_தாமதமும்_முறையில்லாத #சிகிச்சையும்…… 🇨🇭#உயிருக்கே_ஆபத்தாக_முடியும்❓ 🚩 #CKD_என்ற_கிரோனிக் #கிட்னி_டீஸஸ்……❗ 👉நாள்பட்ட சிறுநீரக நோய்  காரணங்கள்❓ 👉நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன❓ 👉முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease) என்றால் என்ன.❓ 👉இந்நோய் எப்படி ஏற்படுகிறது❓ 💢 உலகெங்கிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  ▶நீரிழிவு நோய்,  ▶உயர் இரத்த அழுத்தம்,  ▶உடல் பருமன்,  ▶கொலஸ்ட்ரால்,  ▶புகைக்கும் பழக்கம்  ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, இந்நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ⭕ நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன❓ பல மாதங்களுக்கு,  தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத வகையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர். இரத்த பரிசோதனைகளின் பொழுது,  #கிரியேட்டினைனின் மதிப்பு உயர்ந்து வருவதும், சோனாகிராஃபி பரிசோதனைகளில் இரு சிறுநீரகங்களின் தோற்றமும் சிறியவையாக சுருங்கி காணப்படுவதும் இந்த நோயை சுட்டிக்காட்டுகிறது. ⭕ முடிவு நி...

கண்ணதாசன் சிறப்பு

 From ARS sir! கவிமொழி கவியரசர் கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள் சினிமாவில் பாட்டெழுதியிருக்கிறார்கள் ஆனால், கண்ணதாசனைத்தான் அவரவர் தன் மனதில் ஆசனம் போட்டு அமர வைத்து சீராட்டினார்கள். காரணம்...  சினிமாப் பாட்டுக்குள் வாழ்க்கையைத் தேன் கலந்து கொடுத்த சித்த மருத்துவக்காரன் கண்ணதாசன். ‘எங்க ஊர் ராஜா’ படத்தில், *யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க* என்று சிவாஜியின் கேரக்டருக்கு பாட்டெழுதியிருப்பார் கண்ணதாசன். ஆனால் அதை தனக்கான பாட்டு என கேட்டவர்கள் மொத்தபேரும் வரித்து கொண்டதுதான் , கண்ணதாசன் வரிகளின் செப்படிவித்தை. *‘காலமகள் கண் திறப்பாள் சின்னய்யா’* என்ற பாடலைக் கேட்டு ஆறுதலும் நம்பிக்கையும் அடைந்தார்கள். *நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே* என்ற பாட்டை கேட்டுவிட்டு,  தங்கை இல்லாதவர்கள் கூட அழுதார்கள். தங்கை இல்லையே என்றும் அழுதார்கள். *எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும்பகலும் நடக்கவா - இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா* என்று பிரிவுத்துயரத்துக்கு இந்த சிறகை இணைத்துக் கொண்டு ஆறுதலாகப் பறந்தார்கள். காதலின்...

மூலிகை மருத்துவ குறிப்புகள்

 சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும். செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும். கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும். வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.  நாட்டுமருந்து க...

இதய பாதுகாப்பு

 🇨🇭#சிறுநீரக_பாதிப்பு_உள்ளவர்கள் #தங்கள்_இதயத்தை………❗❗ 🇨🇭#பாதுகாத்துக்_கொள்ள…… 💊💊💊#சிறந்த_25_வழிகள்❓💊💊💊 . 💢👉சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு…… ▶மாரடைப்பு,  ▶இதய நோய்கள்,  ▶மூளை இரத்தக் குழாய் அடைப்பு  (வாத நோய்)  ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். . ❤ #இதயத்தைக்காக்க_சிறந்த  #வழிகள்_இதோ………… 💊1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள். 💊2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். 💊3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள். 💊4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 💊5...

தண்டுவட பாதிப்பு

 🇨🇭#சிரமத்தை_உருவாக்கும் #முதுகு_தண்டுவடவாதம்_பாதிப்பு 🇨🇭#எதனால்_ஏற்படுகிறது❓ 🔴 தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்)  Spondylosis  🙏#பொருமையாக_படிங்கள்_தெளிவாக #வைத்தியம்_பாருங்கள்🙏🙏 🔯 முதுகுதண்டுவடவாத  எலும்புப் பாதிப்பு என்றால் என்ன❓ ஸ்பாண்டிலோசிஸ்  என்பது முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் மற்றும் டிஸ்க்குகளில் (முதுகெலும்பு தட்டு) ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். நாளடைவில், ஸ்பாண்டிலோசிஸ் முதுகெலும்புகளுக்கு உதவியாக உள்ள முதுகெலும்புகளின் திசுக்களை (முதுகெலும்பு தட்டு- டிஸ்க்) முற்றிலும் பாதிப்படைய வழிவகுக்கிறது. ஸ்பாண்டிலோசிஸ் இறுதியில் முதுகெலும்பு விறைப்பு அல்லது கீல்வாதம் ஏற்பட வழிவகுக்கும். இது பொதுவாக கழுத்து மற்றும் பின்முதுகில் உள்ள அதாவது இடுப்பு பகுதி முதுகெலும்புகளைப் பாதிக்கிறது. 👉உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது.  தண்டுவட நரம்பு என்பது மூளையில் இருந்து கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகளின் தொகுப்பு. மேலும் உடலின் பாகங்களில் இருந்து தொடு உணர்ச்சியையும்...

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

 🇨🇭#கருச்சிதைவு_ஏற்படுவதற்கான  #காரணம்_என்ன ❓ 🇨🇭#யாருக்கு_கருச்சிதைவு_நடக்கலாம்❓  🇨🇭#கருச்சிதைவிற்கு_ஆண்களும் #காரணமா❓   ⭕ கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருந்து, கருச்சிதைவு ஏற்படாமல் தற்காத்து கொள்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.  👉20வது வாரம் முடிவதற்கு முன்னே சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடும்.  👉15% - 25% பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன.  👉கருச்சிதைவு ஏற்படும் பெண்களில் 80% பேருக்கு, முதல் மூன்று மாதத்துக்குள் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுவதாக சொல்லப்படுகின்றன. பலருக்கு கர்ப்பம் வெற்றிகரமாக அமைகிறது. சிலருக்கு, பாதியிலே கருச்சிதைவும் ஏற்பட்டு விடுகிறது. என்ன காரணம்❓ என்று தெரியாமல் திரும்பத் திரும்ப மனப்பதற்றத்தோடு குழந்தைக்கு முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்கள்.❗ ❓காரணங்களை தெரிந்துகொள்வது பிரச்னைகளை அறிந்துகொள்வதும் நல்லது.❓ 👉ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் கருச்சிதைவு நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.  💔 கருச்சிதைவு எப்போது ஏற்படலாம்❓ ▶ஒரு பெண் கர்ப்பம் அடைந்து 1-3 மாதத்திற்குள்(1...

நோயெதிர்ப்பாற்றல் பெற

 🇨🇭#நோய்_எதிர்ப்பு_சக்தி_பெற…… #என்ன_வகையான…… 🇨🇭#உணவுகளை_உட்கொள்ளலாம்❓ 💊 ஃபோலிக் ஆசிட்💊 கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது. பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது. 💊 இரும்புச் சத்து💊 ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும். மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம். 💊 கால்சியம்💊 உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். ப...

மூட்டுவலி

 🇨🇭#மூட்டுவலிகளில்_என்னென்ன #வகைகள்_இருக்கு…❓ 🇨🇭#அதன்_பாதிப்புகள்_என்ன❓❓❓ 👉 சில மூட்டுகளை மட்டும் பொதுவா பாதிக்கிற #Mono_arthritis   👉 பல மூட்டுகளை பாதிக்கிற வியாதியை #Poly_arthritis   என இரண்டு வகையான பிரிக்கலாம்.   ⭕ #மூட்டு_வியாதிகளில்_பல_வகை #உண்டு. 🔯  1.முதியவர்களை  அதிகமாக பாதிக்கும் ஆஸ்டியோ  ஆர்த்ரைடீஸ் எனப்படும் சந்திவாதம்.  ▶ மூட்டுகளில் உள்ள எண்ணெய் பசை குறைவினால் வரக்கூடியது. ⏩ முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் முழங்கால் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது.  ▶ முழங்கால் மூட்டும், எலும்பும் ஒன்றோடொன்று ஊராய்ந்து போகாமல், எளிதில் அசைவதற்கு ஜவ்வு அவசியம்.  ▶ ஒருவேளை இந்த ஜவ்வு தேய்ந்து போகும் போதுதான் வலி உண்டாகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக...

Uterus prolapse

 🇨🇭#கர்ப்பப்பை_இறக்கம்_ஏன் #ஏற்படுகிறது…❓❓❓ ❓❓❓#அறிகுறி_என்ன❓❓❓❓ 💊💊#தீர்வு_என்ன❓💊💊 பெண்மையின் வரப்பிரசாதமே கர்ப்பப்பைதான். பூப்பெய்துவதில் தொடங்கி, குழந்தை பெறுவது வரை பெண்மையின் அடையாளமாகவும் கவசமாகவும் இருப்பது அதுவே. அப்படிப்பட்ட கர்ப்பப்பை, அதன் இடத்தில் இருக்கும் வரைதான் ஆரோக்கியம். ⭕🔰இருப்பிடத்திலிருந்து இறங்கினாலோ ஆபத்துதான்……🔰 குழந்தை பெற்ற பெண்கள் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று கர்ப்பப்பை இறக்கம். அதற்கான காரணங்கள், தீர்வுகள், தவிர்க்கும் முறைகள்.  ‘சாதாரணமாக 2 செ.மீ. அளவுள்ள கர்ப்பப்பை, வயதுக்கு வரும் போது,  5 முதல் 6 செ.மீ. வரை வளர்கிறது. பிரசவத்தின் போது 5 கிலோ எடையுடன், 30 செ.மீ. நீளத்துக்கு விரிகிறது. குழந்தைப்பேற்றைத் தவிர, கர்ப்பப்பைக்கு வேறு வேலைகள் கிடையாது. பிரசவத்துக்குப் பிறகு அது சுருங்கி, மீண்டும் பழைய அளவுக்கு வரும். கர்ப்பப்பை இறங்க, அதிக பருமன், வயிற்றிலுள்ள கொழுப்பின் பளு போன்றவை முக்கியமான காரணங்களாக இருக்கும். ஆஸ்துமா, தொடர் இருமல் காரணமாக, உள் வயிற்றின் அழுத்தம் அதிகமாகி, கர்ப்பப்பை வெளியே தள்ளப்படலாம். பிரசவத்தின் போது எடை அதி...

Steroid

 🇨🇭#மக்களுக்கு_வேண்டியதெல்லாம்  #நோய்_உடனடியாக_குணமாக #வேண்டும்.❗ 🇨🇭#அப்படிக்_குணப்படுத்துகிற #டாக்டர்_அவர்களைப் #பொறுத்தவரை_கைராசிக்காரர்.❗ ❌ உடனடியாக குணமடைவது உடலுக்குக் கேடா❓ ⭐ ஸ்டீராய்டு இல்லாமல் ஆங்கில மருத்துவம் இல்லை❗ ❌  ஸ்டீராய்டு [ Steroid ] அளவுக்கு மீறினால் ஆபத்தே.❗ ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும் போதே நோய் குணமான உணர்வை உண்டாக்கும் மருத்துவர்கள் இன்று எக்கச்சக்கம். அதற்கு அவர்களது திறமையோ, அனுபவமோ காரணமில்லை. பின்னே..❓ அவர்கள் தரும் ஸ்டீராய்டு கலந்த மருந்துகள்❗ மக்களுக்கு வேண்டியதெல்லாம் நோய் உடனடியாக குணமாக வேண்டும். அப்படிக் குணப்படுத்துகிற டாக்டர் அவர்களைப் பொறுத்த வரை கைராசிக்காரர். #அதென்ன_ஸ்டீராய்டு❓ ஸ்டீராய்டு என்பது நோயைக் குணமாக்கும் மருந்தல்ல. மறைக்கும் மருந்து. ஆஸ்துமா அதிகமாகி, திணறத் திணற ஆஸ்பத்திரிக்கு போகும் ஒரு நபர், ஸ்டீராய்டு கலந்த மருந்துகள் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சராசரி நிலைக்குத் திரும்புவார். அந்த நேரத்துக்கு அவரது ஆஸ்துமா தீவிரம் மறைக்கப்பட்டதே தவிர, #குணமானதாக #அர்த்தமில்லை.  👉 ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து நீண...