தண்டுவட பாதிப்பு

 🇨🇭#சிரமத்தை_உருவாக்கும்

#முதுகு_தண்டுவடவாதம்_பாதிப்பு


🇨🇭#எதனால்_ஏற்படுகிறது❓


🔴 தண்டுவட எலும்புப் பாதிப்பு (ஸ்பாண்டிலோசிஸ்)  Spondylosis 


🙏#பொருமையாக_படிங்கள்_தெளிவாக #வைத்தியம்_பாருங்கள்🙏🙏


🔯 முதுகுதண்டுவடவாத 

எலும்புப் பாதிப்பு என்றால் என்ன❓


ஸ்பாண்டிலோசிஸ்  என்பது முதுகெலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் மற்றும் டிஸ்க்குகளில் (முதுகெலும்பு தட்டு) ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். நாளடைவில், ஸ்பாண்டிலோசிஸ் முதுகெலும்புகளுக்கு உதவியாக உள்ள முதுகெலும்புகளின் திசுக்களை (முதுகெலும்பு தட்டு- டிஸ்க்) முற்றிலும் பாதிப்படைய வழிவகுக்கிறது. ஸ்பாண்டிலோசிஸ் இறுதியில் முதுகெலும்பு விறைப்பு அல்லது கீல்வாதம் ஏற்பட வழிவகுக்கும். இது பொதுவாக கழுத்து மற்றும் பின்முதுகில் உள்ள அதாவது இடுப்பு பகுதி முதுகெலும்புகளைப் பாதிக்கிறது.


👉உள்உறுப்புகளின் பட்டியலில் தண்டுவடம் என்பது மிக முக்கியமானது. 


தண்டுவட நரம்பு என்பது மூளையில் இருந்து கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகளின் தொகுப்பு. மேலும் உடலின் பாகங்களில் இருந்து தொடு உணர்ச்சியையும் மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகளும் அடங்கும். 


🇸🇦 #சித்த_மருத்துவம்_என்ன #சொல்லுகிறது❓


நமது உடலை தாங்கி சரியான நிலையில் வைத்திருக்க வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்கள் உதவுகின்றன. கபம் உடல் பலத்தைத் தோற்றுவிக்கும், பித்தம் வலிமையைக் கிரகித்துக் கொள்ளும், வாதம், குளுமை, சூடு ஆகியவற்றை உடலில் பரவச் செய்யும். உடல் நிலை பெற்றிருக்க இவ்வாறு இம்மூன்று தோஷங்களும் நமக்கு உதவுகின்றன. ஆனால் இம்மூன்றும் சீற்றம் அடைந்து விட்டால் நோய்கள் உருவாகின்றன. உடலில் வலி வருவதற்கு வாதமும், எரிச்சலை தோற்றுவிப்பது பித்தமும், உடல் அரிப்பைத் தருவதில் கபமும் அவைகளின் சீற்றத்தில் முக்கிய குறிகளாக தென்படும்.


தண்டுவட வலி ஏற்படுவதில் வாத தோஷம் முக்கிய பங்கு வகிப்பதை அறிகிறோம். வாதம் எதனால் சீற்றம் கொள்கிறது. என்பதை தெரிந்து கொள்வதை நலம் பயக்கும்.


🚥தன் உடல் சக்திக்கு மீறிய செயல்களை செய்தல் (உதாரணம் - மிகுந்த சிரமத்துடன் படிக்கட்டுகளில் தண்ணீரை வாளியில் பிடித்து எடுத்துச் செல்லுதல்)


🚥அளவுக்கு மீறிய உடற்பயிற்சி.


🚥சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் கூடிய செயல்பாடு.


🚥மிகவும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழுதல்.


🚥ஓடுதல், உடலுறுப்புகளை மிகுதியாகத் துன்பறுத்துதல்.


🚥கீழே விழுந்து அடிபடுதல்


🚥பெருங்குழி முதலியவற்றைத் தாண்டுதல், குதித்துக் கொண்டே நடத்தல்


🚥அதிக தூரம் நீந்துதல், இரவு கண் விழித்தல், பளு சுமத்தல், நாற்காலியில் கால்மேல் காலைப் போட்டு அமர்தல்,


🚥இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் வெகுதூரம் பயணம் செய்தல், மிகுந்த தூரம் நடத்தல்.


🚥காரம், துவர்ப்பு, கசப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல்


🚥எண்ணெய்ப் பசையில்லாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய, குளுமையான வீரியம் கொண்ட பொருள்களை உணவாக சாப்பிடுதல்,


🚥உலர்ந்த காய்கறிகள், வரகு என்னும் அரிசி, காட்டுத்திணை, பயறு, சிறுபயறு, துவரம்பருப்பு, பட்டாணி, மொச்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுதல்.


🚥பட்டினி கிடத்தல், அதிகமாகவோ, அளவில் குறைந்தோ, குறிப்பிட்ட நேரத்திலல்லாமலோ உணவை உண்பது, உடலிலிருந்து வெளியேறும் காற்று, சிறுநீர், மலம், விந்து, வாந்தி, தும்மல், ஏப்பம் துக்கத்தால் தோன்றும் கண்ணீர் முதலியவற்றை வெளியேற்றாமல் அடக்குதல் 


முதலிய காரணங்களால் வாதம்

சீற்றமடைந்து தண்டு வடத்தை பாதிக்கலாம். மேலும் குளிர்காலம், வானத்தில் மேகமூட்டம் ஏற்படுதல், காற்று மிகுதியாக வீசுதல், அதிக மழைபெய்யும் நேரம் ஆகிய காலங்களில் வாதம் சீற்றம் பெறும். விடியற்காலை, பிற்பகல் நேரங்களிலும், உணவு செரிமானமடைந்த பின்னும் வாதத்தின் சீற்றத்தால் தண்டுவடத்தில் வலி அதிகமாவதைக் காணமுடியும்.


மேற்கூறிய பழக்கங்களை தவிர்த்தல், உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை சேர்த்தல், நெய்கலந்த சூடான புஷ்டி தரும் உணவு, சூடான வீர்யத்தினை உடைய உணவு வகைகள், சரியான நேரத்தில் அதாவத பசி ஏற்பட்டவுடன் அதிகம் பட்டினியில்லாமல் உணவை உண்பது, உஷ்ணப்பாங்கான விரிப்புகளில் படுத்தல் போன்ற செயல்களாலும், இயற்கை உபாதைகளை அடக்காமல் அவைகளின் உந்துதல் ஏற்பட்டவுடன் வெளியேற்றுதல் போன்றவை மூலம் வாதம் சீற்றமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


⭕ பொதுவாக தண்டுவடம் பாதிக்கப்படுவதால் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. அதனால் சிறு வேலைகளுக்கு கூட பிறர் உதவியை நாடும் நிலை வந்து விடும். இத்தகைய சிரமத்தை உருவாக்கும் தண்டுவட பாதிப்பு எதனால் ஏற்படுகிறது❓


ஒவ்வொரு தண்டுவட முதுகெலும்பின் பக்கவாட்டில் இருந்தும் இரண்டு நரம்புகள் வெளிவருகின்றன. இந்த நரம்புகள், உடலில் உள்ள வெவ்வேறு பகுதிகளுக்கு தேவையான ரத்தம், இயக்கம் (Movement) போன்றவை சென்றடைய காரணமாயிருக்கிறது. இந்த நரம்புகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது இவ்வகையான Nerve Entrapment ஏற்படுகிறது. இது முதுகில் மட்டுமில்லாமல் உடலின் எந்த பகுதியிலும் ஏற்படலாம். நரம்பு அழுத்தம் ஏற்படுவதால் உங்கள் தசைகள் வலுவிழந்து நீங்கள் உங்கள் இயக்கத்தை (Movement) இழக்க நேரிடும்.


உதாரணமாக, இவ்வகையான நரம்பு அழுத்தங்கள் உங்கள் கை அல்லது கால்களை செயலிழக்க செய்யும். சில நேரங்களில் உங்கள் Stiffness கால் அல்லது கைகளை உங்களால் தூக்க முடியாமல் போகும். இது நரம்பு அழுத்தம் (Nerve Entrapment) ஏற்படுவதால். இவ்வகையான நரம்பு அழுத்தங்கள் சில சமயங்களில் தானாக சரிவதுண்டு. ஆனால் இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம் தொந்தரவு தரக் கூடியது. நரம்பு அழுத்தம் ஏற்படுத்தும் விளைவுகளை (Consequnces) குணப்படுத்துதல் மிகவும் அவசியம். இப்போது நரம்பு அழுத்தம் ஏற்பட என்ன காரணங்கள் என்பதைப் பார்ப்போம்.


⭕👉நரம்பு அழுத்தம் ஏற்பட மூன்று மிக முக்கிய காரணங்கள் இரண்டு அவை……………


🔰 Disc Bulge தசைகள் கடினமாதல் (Muscular Stiffness)


🔰 Imbalance (ஏற்றத்தாழ்வு)


👉 Disc Bulg…………  இரண்டு முதுகெலும்புகளுக்கிடையில் 

உள்ள Disc-ன் மீது ஏற்படும் அழுத்தத்தினால் அது தன்னுடைய இடத்திலிருந்து வெளியே வந்து பக்கவாட்டில் உள்ள நரம்புகளை அழுத்துவதால் நரம்பு அழுத்தம் ஏற்படுகின்றது.


.


🔯 தசை கடினமாதல் 🔯

(Muscular Stiffness)


நரம்பு அழுத்தம் எனப்படும் Nerve Entrapment ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். ஏனெனில், இது ஏற்படுவது நமக்கே தெரியாது. இது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல. இவ்வகையான தசை கடினமாதல், சிறிது சிறிதாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து ஏற்படுவதால் தசைகளில் கடினம் (Stiffness) ஏற்படுகிறது. இந்த தசைக் கடினம் ஏற்பட, ஏற்பட தசைகளுக்கு கீழே உள்ள நரம்புகளை அழுத்தி நரம்பு அழுத்தம் ஏற்படக் காரணமாயிருக்கிறது. அதேபோல், இவ்வகையான தசை கடினம் (Muscular Stiffness) உடலின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகின்றது. 


👉🚥#உதாரணமாக………


Sciatica என்பதைக் கேள்விபட்டிருப்பீர்கள். Sciatic எனப்படும் நரம்பு நம் கீழ் முதுகில் ஆரம்பித்து கணுக்கள் வரை செல்கிறது, அது மட்டுமில்லாமல் இப்பகுதிகளை தேவையான ரத்தம், இயக்கம் போன்றவற்றை எடுத்துச் செல்கிறது. இந்த பகுதியில் உள்ள தசைகள் கடினமடைவதால் Sciatia ஏற்படுகின்றது. இதனால்……… 


⏩கால்களில் வலுவிழப்பு, 


⏩மறத்துப் போதல். 


⏩ஊசி குத்துதல் போன்ற வலி, 


போன்றவை ஏற்படும். Disc Bulge-ஐ விட தசை கடினம்தான் நரம்பு அழுத்தம்.ஏற்பட முக்கியக் கரணம்.


.


🔯 ஏற்றத்தாழ்வு (Imbalance) 🔯


நீங்கள் உட்காரும் போதோ, நிற்கும் போதோ ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் (Imbalance) அதிகரிப்பதால் நரம்பு அழுத்தம் ஏற்பட அது கூட காரணமாகிவிடும். உதாரணமாக, உங்கள் Wallet Purse-ஐ (பணப்பை) நீங்கள் உங்கள் பின் பாக்கெட்டில் வைத்து நீண்ட நேரம் உட்காருவதால் Sciatic நரம்பின் மீதான அழுத்தம் ஏற்படுகின்றது. இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் (Imbalance) நரம்பு அழுத்தங்கள் ஏற்பட 40% காரணமாயிருக்கின்றன.  எனவே இவ்வகையான ஏற்றத்தாழ்வுகளை (Imbalance) தவிர்க்க வேண்டும்.


.

🔯 தண்டுவட நரம்பு மண்டலம் 🔯


நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம். இது உடலின் இயக்கத்தை மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம், 


மிக வேகமாக வாகனத்தை ஓட்டுவதாலும், விபத்தினால் ஏற்படும் தண்டுவட எலும்பு முறிவு, 

அதன் ஜவ்வு பகுதி வீக்கம், எலும்பு நகர்வு, வயது முதிர்வு மற்றும் பிறவிக்குறைபாடு போன்ற காரணங்களாலும் பாதிக்கப்படுகிறது. இது தவிர காசநோய் கிருமி மற்றும் பிற நோய்க்கிருமி தாக்குதலாலும் தண்டுவட பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.


பொதுவாக விபத்தினால் தண்டுவட எலும்பு முறிந்தால், உடைந்த எலும்புகளுக்கு இடையில் அல்லது தசை நார்களுக்கு இடையில் நரம்புகள் அழுத்தப்படும் நிலை உருவாகும். அதனால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தடைபடும். மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கீழ் உள்ள உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டித்து போகும். அதனால் தசைகள் இயக்கமின்மை, மலம், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் ஏற்படும்.


👉அதேபோல் தண்டுவடத்தின் எலும்பு, கழுத்து பகுதியில் முறிந்தால்……… 


▶கை-கால் செயல் இழப்பு, 


▶மார்பு மற்றும் வயிறு, முதுகு பகுதி முழுவதும் உணர்ச்சி இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு. 


👉மேல் கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டால்……………


▶மூச்சு திணறல், 


▶உணவு விழுங்குதலில் பிரச்சினை ஏற்படும். 


👉கழுத்து எலும்புக்கு கீழ் என்றால்……… 


▶கால்கள், உடல், இடுப்பு தசைகள் பாதிக்கப்படும். இதனால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலை ஏற்படலாம். 


.

🔴#அடையாளங்களும்

#அறிகுறிகளும்_என்ன❓


🚥 தண்டுவடத்தின் பாதிப்பு நிலை

அறிகுறிகள்❓


🔰முதுகில் வலி, முன்பக்கம், பின்பக்கம் குனிந்து நிமிர முடியாத நிலை, 


🔰கால்களில் மதமதப்பு, 


🔰கால் தசைகளின் சக்தி குறைதல் 


⭕ லம்பர் இடுப்பு வலி வாதம் ஸ்பாண்டிலோசிஸ்.❓


🔰காலையில் முதுகெலும்பு விறைப்பாகவும் மற்றும் முதுகில் வலி ஏற்படுதல்.


🔰அதிக நேரம் உட்கார்ந்திருத்தல் பிறகு ஏற்படும் வலி.


🔰வளைதல் மற்றும் குனிதலின் போது உண்டாகும் வலி.


.

⭕ #கர்ப்பப்பை_வாய் #ஸ்பாண்டிலோசிஸ்.❓


🔰பின்புற தலைவலி.


🔰கால்கள் மற்றும் கைகளில்  பலவீனம் மற்றும் உணர்ச்சியின்மை.


🔰கழுத்தில் விறைப்புதன்மை.


🔰சமநிலையை இழத்தல்.


🔰கழுத்து வலி தோள்பட்டை கீழ்வரை பரவுதல்.


🔰கால்கள் அல்லது தோள்களில் அசாதாரண உணர்ச்சிகள்.


🔰சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில் சிரமம்.


.

⭕ #மார்பறைச்சிரை  #ஸ்போண்டிகோலிஸ்.❓


🔰பின்னோக்கி வளையும் போது நடுமுதுகில் வலி.


🔰முன்னும் பின்னும் நகரும் போது முதுகெலும்பில் வலி.


🔴#ஸ்பாண்டிலோசிஸின்_முக்கிய #காரணங்கள்❓


👉‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’ 

(Osteomyelitis), 


👉‘ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), 


👉காச நோய் போன்றவற்றின் 

பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும்


👉வாகன விபத்துகள் அல்லது 

விளையாடும்போது ஏற்படுகிற 

விபத்துகள் காரணமாக எலும்பு 

முறிந்து இந்த வலி ஏற்படலாம். 


👉சிலருக்குப் பிறவியிலேயே 

தண்டுவடம் செல்லும் பாதை 

குறுகலாக (Spinal canalstenosis) 

இருக்கும். இவர்களுக்குச் சிறு 

வயதிலேயே முதுகு வலி ஏற்படும். 


👉முதுகெலும்பில் கட்டி அல்லது 

புற்றுநோய் தாக்குவது 

காரணமாகவும் இந்த வலி வரும். 


👉கர்ப்பக் காலம், 


👉விபத்துக்காயங்கள், 


👉தசைப்பிடிப்பு, 


👉தசைநார் வலி, 


👉மன அழுத்தம், 


👉அதிக நீரிழப்பு 


👉வயதாதல்.


👉கடந்த காலத்தில் கழுத்தில் ஏற்ப்பட்ட காயம்,


👉மோட்டார் வாகன விபத்தினால் ஏற்ப்பட்ட   கடுமையான அதிர்வு.


👉கடுமையான கீல்வாதம்.


👉கடந்த காலத்தில்  ஏற்ப்பட்ட முதுகெலும்பு காயம்.


.

⭕ #முதுமைப்பிரச்சினை_முதுகுவலி…


🔰முள்ளெலும்புகளுக்கு இடையில் 

உள்ள வட்டில் ஏற்படும் முதுமைப் 

பிரச்சினை. இதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். புதிதாக வாங்கிய 

பந்தைக் கீழே எறிந்தால் நன்கு 

துள்ளியபடி மேலெழும்பும். நாளாக ஆக, அந்தப் பந்துக்கு மேலெழும்பும் தன்மை குறைந்துவிடும்.

அதுபோலவே வயதாக ஆக 

இடைவட்டில் நீர்ச்சத்து 

குறைந்துவிடுவதால் `குஷன்’ போல இயங்குகிற தன்மையும் 

குறைந்துவிடுகிறது. 

அதிர்ச்சியைக் கிரகித்துக்கொள்ளும் தன்மை குறைகிறது. இதனால் 

முதியவயதில் கீழ் முதுகில் வலி 

வருகிறது.


🔰எலும்பின் உறுதிக்கும் 

ஆரோக்கியத்துக்கும் கால்சியம் 

சத்தும் புரோட்டினும்  தேவை. 

வயது அதிகமாக அதிகமாகக் 

கால்சியத்தின் அளவு குறைந்து 

எலும்பு மெலிந்துவிடும். இதற்கு 

‘எலும்பு வலுவிழப்பு நோய்’ 

(ஆஸ்டியோபோரோசிஸ்) என்று 

பெயர். இது கீழ் முதுகில் வலியை 

ஏற்படுத்தும்.


.

💢 தண்டுவட பிரச்சினைகள் 

(Spinal Cord Disease) பல வகைப்படும். அதில்…………


👉Cervical Spondylosis 


👉lumbar Spondylosis 


என்பவை மிக முக்கியமான அதிகம் காணப்படும் பிரச்சினைகள். இந்த இரண்டு பிரச்சினைகளிலும் சவ்வு பாதிப்பும், அது தண்டுவட நரம்புகளை அழுத்துவதால் ஏற்படும் பல பிரச்சினைகளும் உண்டு.


கழுத்தில் இந்த சவ்வு மற்றும் எலும்பு பாதிப்பினை தண்டு வட நரம்பையும், தண்டு வடத்தில் இருந்து வரும் பக்க நரம்புகளும் அழுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உண்டாகலாம். இந்த        பிரச்சினைகள் பொதுவாக………… 


👉கழுத்து வலி, 


👉கழுத்து பிடிப்பு, 


👉சுளுக்கு 


என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும். சில நேரங்களில் பாதிப்பு மோசமாக இருக்கும்போது………


👉கழுத்தை சிறிதும் திருப்ப முடியாத நிலை, 


👉கழுத்தில் இருந்து கைகளுக்கு வலி மின்சாரம் பாய்ச்சுவது போல் பரவுதல் இருக்கலாம். 


👉இன்னும் மோசமானால் கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம். 


👉கைகளில் பலம் குறைந்து காணப்படலாம்.


⭕ இதில் இரண்டு வகை………


▶ரேடிக்குலோபதி (Radiculopathy) 


▶மைலோபதி (Myelopathy) 


⭕ இந்த பிரச்சினை ஏற்பட்டால்……… 

கைகள் மட்டும் அல்லாது கால்களிலும் பாதிப்பு ஏற்படும். 


💢 கைகள், மற்றும் கால்கள்……… 


விரைத்து போய் (Stiffness) விறகு கட்டை மாதிரி, பலம் குறைந்து, நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படுவது, கால்கள், கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம்.


⭕மேலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டால்…………


👉சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகலாம். 


👉இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல், கைகள் அசைவற்று, கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் போகலாம்.


இந்த பிரச்சினை முன்பெல்லாம் 

40 வயதிற்கு பின்னரே பாதிப்புகள் இருந்தது. வயதானவர்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கு இவை ஏற்படுகிறது.


🇨🇭#வைத்தியர்_முகம்மது_யாஸீன்🇨🇭


 ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎


💊#மேலப்பாளையம்_திருநெல்வேலி💊

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி