கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?

 🇨🇭#கருச்சிதைவு_ஏற்படுவதற்கான 

#காரணம்_என்ன ❓


🇨🇭#யாருக்கு_கருச்சிதைவு_நடக்கலாம்❓ 


🇨🇭#கருச்சிதைவிற்கு_ஆண்களும் #காரணமா❓


  ⭕ கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருந்து, கருச்சிதைவு ஏற்படாமல் தற்காத்து கொள்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 


👉20வது வாரம் முடிவதற்கு முன்னே சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். 


👉15% - 25% பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன. 


👉கருச்சிதைவு ஏற்படும் பெண்களில் 80% பேருக்கு, முதல் மூன்று மாதத்துக்குள் கருச்சிதைவு

ஏற்பட்டுவிடுவதாக சொல்லப்படுகின்றன.


பலருக்கு கர்ப்பம் வெற்றிகரமாக அமைகிறது. சிலருக்கு, பாதியிலே கருச்சிதைவும் ஏற்பட்டு விடுகிறது. என்ன காரணம்❓ என்று தெரியாமல் திரும்பத் திரும்ப மனப்பதற்றத்தோடு குழந்தைக்கு முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்கள்.❗


❓காரணங்களை தெரிந்துகொள்வது பிரச்னைகளை அறிந்துகொள்வதும் நல்லது.❓


👉ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் கருச்சிதைவு நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 


💔 கருச்சிதைவு எப்போது ஏற்படலாம்❓


▶ஒரு பெண் கர்ப்பம் அடைந்து 1-3 மாதத்திற்குள்(12வாரம்) கருச்சிதைவு ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.


▶அந்தவகையில் 12-18 வாரத்திற்குள் குறைப்பிரசவம் ஆகலாம்.


▶பொதுவாக 2 முறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.


▶சிலருக்கு கரு உருவாகும் ஆனால் இதய துடிப்பு இருக்காது.சிலருக்கு இதய துடிப்பு உருவாகி கரு இல்லாமல் போகும்.சிலருக்கு துடிப்பு உருவாகி கருச்சிதைவு ஏற்படும்.2-5% பேருக்கு அடுத்தடுத்தும், 90 சதவீதம் பேருக்கு 1 முதல் 4 மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்படுகிறது.


💔 கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்…❓


▶லேசான ரத்தபோக்கு முதல் அதிக ரத்தபோக்கு ஏற்படுதல் 


▶தீவிரமான வயிற்று பிடிப்பு ஏற்படுதல் 


▶அடிவயிறு வலி 


▶காய்ச்சல் 


▶பலவீனமாகுதல் 


▶முதுகு வலி


▶பொதுவான அறிகுறிகள் இல்லாமல் அதிக அளவில் அசௌகரியமான உணர்வைப் பெறுதல். 


▶காய்ச்சலுடன் அதிக ரத்தபோக்கு இருப்பது. 


▶காய்சலுடன் வலி, குளிர் 


போன்ற பிரச்னைகள் இருந்தால் 

மருத்துவரை உடனடியாக சந்திக்கவும். 


➡தொற்றால் கூட கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.


➡கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.


➡யோனியில் இருந்து வெள்ளைக் கசிவு ஏற்பட்டால், அது கருச்சிதைவு ஏற்படப் போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.


➡வெள்ளைப்படிதல் இரத்தக்கட்டிகளுடனும், துர்நாற்றத்துடனும் இருந்து, யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தினால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும்.


💔 கருச்சிதைவு ஏற்பட யாருக்கு அதிக வாய்ப்புகள்❓


35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சர்க்கரை நோய் அல்லது தைராய்டு உள்ள பெண்கள் 3-4 முறை ஏற்கெனவே கருச்சிதைவு நடந்திருக்கும் பெண்கள்


💔முதல் மும்மாதம்…. கருச்சிதைவு ஏற்பட்டால் என்ன காரணம்❓


▶கிரோமோசம் பிரச்னை இருத்தல் 


▶பிளாசென்டா பிரச்னை 


▶குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் செல்லாமல் இருத்தல் 


▶அதிக உடல் எடை 


▶புகை, 


▶மது 


▶அதிகமாக காபி, டீ குடிப்பது 


▶கெஃபைன் உணவுகள் சாப்பிடுவது


💔 2 வது மும்மாதத்தில் வரும் பிரச்னைகள் என்னென்ன❓


➡நாட்பட்ட நோய்களும் ஒரு காரணம் 


➡கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் 


➡அதிகமான ரத்தக்கொதிப்பு 


➡சிறுநீரக நோய் 


➡ஓவர் ஆக்டிவ் தைராய்டு சுரப்பு 


➡குறைவான ஆக்டிவ் தைராய்டு சுரப்பு 


➡ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம்


💔 கருச்சிதைவிற்கான காரணங்கள் யாவை❓


💔 கருச்சிதைவு ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன❓


▶தொற்று, 


▶சர்க்கரை நோய், 


▶தைராய்டு இருந்தால் கருச்சிதைவு ஏற்படலம். 


▶ஹார்மோன் பிரச்னைகள்


▶நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருத்தல் 


▶உடல்ரீதியான பிரச்னைகள் ஏதேனும் இருத்தல் 


▶யூட்டரின் பிரச்னை இதையும் 


▶கருவளராமல் போவதற்கு கருவில் குறை இருக்கலாம்.


▶கருவளர்ச்சியில் குறை இருக்கலாம், கருவளரும் போது ஏற்படும் பாதிப்புகளால் கருச்சிதைவு ஏற்படலாம், சிலருக்கு கர்ப்பபையின் உள்சுவர், இரட்டை கர்ப்பபை ஆகியவை குறைப்பிரசவத்திற்கான காரணமாகவும் இருக்கலாம்.


▶பெரும்பாலான கருச்சிதைவுகளுக்கு கருவின் மரபியல் கோளாறுகள் அல்லது குரோமோசோம் கோளாறுகளே காரணமாக உள்ளன.


▶வயது அதிகமுடைய பெண்கள் கர்ப்பமடையும்போது, தொடர் கருச்சிதைவுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குரோமோசோம் கோளாறுகளால், கரு முட்டையின் தரம் குறைவாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்புள்ளதாகக் கருதப்படுகிறது.


▶சில பெண்களுக்கு பிறப்பிலேயே கருப்பையின் வடிவம் ஒழுங்கற்றதாக இருக்கலாம் அல்லது பிற்காலத்தில் அவர்களின் கருப்பையில் கோளாறுகள் ஏற்படலாம். கருப்பைக்கு போதிய இரத்தம் செல்லாததாலும் கருப்பையில் அழற்சி ஏற்படுவதாலும் கருச்சிதைவு ஏற்படலாம்.


▶பெண்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சம்பந்தமான கோளாறுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், உதாரணம்: நீரிழிவுநோய், தைராய்டு நோய், சினைப்பை நீர்க்கட்டிகள் அல்லது புரோலாக்டின் அதிகமாக இருத்தல்.


▶ருபெல்லா, சைட்டோமேகலோவைரஸ், HIV, பிறப்புறுப்பில் பாக்டீரிய நோய்த்தொற்று, கிலாமிடியா, கொனோரியா, சிஃபிலிஸ் போன்ற கர்ப்பகால நோய்த்தொற்றுகளாலும் தொடர் கருச்சிதைவு ஏற்படலாம்.


▶தொற்றுகள்,பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று,எச்.ஐ.வி,மலேரியா,சிபிலிஸ் எனும் பிரச்னை,ஃபுட் பாய்சன் 


▶சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டு ஃபுட் பாஸ்சனாகி கருச்சிதைவு ஏற்படும் நிலை. காய்ச்சப்படாத பால், 

வேக வைக்காத முட்டை சாப்பிடுவதால் வரும் ஃபுட் பாய்சன். 


▶சமைக்கபடாத உணவுகளை சாப்பிடுதல் கெட்டுப்போன இறைச்சி அல்லது சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி சாப்பிடுதல்,பச்சை முட்டை குடிப்பது, ஹாஃப் பாயில் சாப்பிடுவது,


💔 கருச்சிதைவிற்கு ஆண்களும் காரணமா❓


➡ஆண்களின் உயிரணுக்களில் குறைபாடுகள் 


➡ஹார்மோன் பிரச்சனை, 


➡நோய் தொற்றுகள், 


➡உடல் பருமன், 


➡ரசாயன, பூச்சிக் கொல்லி தொழிற்சாலை, கதிரியக்க பிரிவுகளில் பணிபுரிதல், 


➡மன இறுக்கம் 


ஆகிய காரணங்களால் ஆண்களும் கருச்சிதைவிற்கு காரணமாகிறார்கள்.


⭕ கர்ப்பப்பை வாய் பிரச்னை❗


சில பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருக்கலாம். கருவைத் தாங்கி பிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். 2வது மும்மாதத்தில் இந்த மாதிரி பிரச்னை உள்ளவர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடலாம். இதை cervical insufficiency என்பார்கள்.


👉 பிசிஓஎஸ்❗


சிலர் பிசிஓஎஸ் பிரச்னையை அலட்சியப்படுத்துவார்கள். இயல்பான ஓவரியைவிட பெரிதளவில் காணப்படும். ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தும்.


👉வாழ்வியல் பிரச்னை❗


அதிகமாக மருந்துகளை உட்கொள்ளுதல், மது, புகைப்பழக்கம் ஆகியவை இருந்தால் கருச்சிதைவு ஏற்படும்.


👉உடல் தொடர்பான பிரச்னை❗


இது கொஞ்சம் அரிதுதான். இயல்பற்ற யூட்டரின், செப்டம் அல்லது பாலிப்ஸ், சர்விகல் பிரச்னை போன்றவை இருந்தால் 2 அல்லது 3வது மும்மாதத்தில்கூட கருச்சிதைவு நடக்கலாம்.


👉சில வகை மருந்துகள்❗


ரூமட்டாய்டு ஆர்த்தரிடிஸ் மருந்துகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படலாம். ஆக்னி, ஹார்மோனல் ஆக்னி, எக்ஸிமா தோல் நோய்க்கு மருந்து உட்கொண்டால் கருசிதைவு நடக்கலாம். சில வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு நடக்கலாம். 


⭕ கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் கர்ப்பம் உண்டாகுமா❓


ஆம்… 85% பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தாலும் மீண்டும் கர்ப்பமாக முடியும். நார்மல் டெலிவரி பெற்றுகொள்ள முடியும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் செய்யும். கருச்சிதைவு ஏற்பட்டால் இனி மீண்டும் நீங்கள் கர்ப்பமாக மாட்டீர்கள் என அர்த்தம் கிடையாது. இது குழந்தையின்மை பிரச்னை கிடையாது. 1 - 2 % பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் பிரச்னை இருக்கும். சில ஆய்வார்கள் இதை ஆட்டோ இம்யூன் நோய் எனச் சொல்கிறார்கள். இவர்கள் சரியான மருத்துவரை அணுகி, குழந்தைக்கு திட்டமிடும் முன்னரே ஆலோசனை பெறுவது நல்லது. இரண்டு முறை யாருக்காவது கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை தாங்களாகவே குழந்தைக்கு திட்டமிடாமல், ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு தீர்மானிக்க வேண்டியது அவசியம். 


⭕ கருச்சிதைவு நடந்த பெண்கள் மீண்டும் கருத்தரிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்❓


ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டாலே அடுத்த முறை அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் குழந்தைக்கு திட்டமிடுவது நல்லது. 


சில மருத்துவர்கள், #குறைந்தது_3_6 #மாதமாவது இடைவேளி விட்டு மீண்டும் கருத்தரிக்க திட்டமிடும்படி சொல்வார்கள். 


உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு பெண் இருக்க வேண்டியது முக்கியம். 


ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்குதானே காரணம் என நினைத்துவிட கூடாது. பல்வேறு மருத்துவரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என்பதால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.


⭕ கருச்சிதைவை தடுக்க முடியுமா❓


அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்க முடியாது. ஏனெனில், அது இயல்பான கருத்தரிப்பாக இருக்க முடியாது. ஆனால், கருத்தரிக்க திட்டமிடும் முன்னரே மருத்துவரை சந்தித்து விட்டால், நிச்சயம் அடுத்த கருத்தரிப்பு வெற்றிகரமானதாக அமைய வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு ஏதேனும் பிரச்னை உள்ளது எனத் தெரிந்தால் அதற்கான சிகிச்சைகளை மருத்துவரே தருவர். தாயின் உடல்நலத்தைத் தேற்றி, தக்க ஆலோசனை மருத்துவர் வழங்கி, அதை சரியாக பின்பற்றினால் வெற்றிகரமாக கருவை காப்பாற்றி, குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்புகளும் அதிகம். 


⭕ கருச்சிதைவிற்கு தீர்வு என்ன❓


முதலில் கருச்சிதைவிற்கான காரணங்களை கண்டுபிடித்து தீர்வுகாண வேண்டும். கருத்தரித்த 16-26 வாரங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு கர்ப்பபை வாய் இயல்புக்கு மாறாக திறந்து கொள்வதுதான் காரணமாகும்.


இதற்கு பிறவி குறைபாடுகள், கருச்சிதைவு, கருக்கலைப்பின் போது கர்ப்பபை பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் வாய்ப்பகுதி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம்.


கருத்தரித்த பிறகு ஏற்பட்ட விபத்துகளினால் கர்ப்பப்பை வாய் பலவீனம் அடைந்து திறந்து கொள்ளலாம்.


இந்த காரணங்களை கண்டறிந்து சரிசெய்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும்.


💊#விபரம்_மற்றும்_தெளிவுக்கு……💊


☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி