கருப்பு கவுனி

 ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்:

கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உள்ளன. இதனால் நீரிழிவு ,புற்றுநோய், இதய நோய் மற்றும் இன்னும் பல நோய்கள் வராமல் தடுப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால், உணவு சாப்பிட்ட பின் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல், சீராக வைப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.


 

நார்ச்சத்து:

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் அளவுக்கு நார்ச்சத்து உள்ளது. மற்ற அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.


இதயம்:

கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது. மேலும் ட்ரை க்ளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், இதயம் தொடர்பான கோளாறுகளில் இருந்து விடுபெற கருப்பு கவுனி அரிசியை சாப்பிடலாம்.


 

karuppu kavuni rice benefits in tamil

black rice in tamil

நீரிழிவு:

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது. நீரிழிவு நோய் இருப்பவர்கள் வெள்ளை அரிசியை சாப்பிடுவதற்கு மாற்றாக, கருப்பு கவுனி அரிசியை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், நீரிழிவை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.


 

நச்சுகளை நீக்கும்:

கருப்பு கவுனி அரிசி உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது. கருப்பு கவுனி அரிசியை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும், கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்ப்பது நல்லது.


உடல் எடை:

அடிக்கடி எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இவர்கள் கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்ப்பது நல்லது. கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து, சரியான அளவில் சாப்பிடுவதற்கு உதவுகிறது. இதனால் மறைமுகமாக உடல் எடை குறைவதற்கு உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி