சிறுநீரக பாதிப்பு

 🇨🇭#கால_தாமதமும்_முறையில்லாத #சிகிச்சையும்……


🇨🇭#உயிருக்கே_ஆபத்தாக_முடியும்❓


🚩 #CKD_என்ற_கிரோனிக்

#கிட்னி_டீஸஸ்……❗


👉நாள்பட்ட சிறுநீரக நோய்  காரணங்கள்❓


👉நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன❓


👉முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease) என்றால் என்ன.❓


👉இந்நோய் எப்படி ஏற்படுகிறது❓


💢 உலகெங்கிலும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


▶நீரிழிவு நோய், 


▶உயர் இரத்த அழுத்தம், 


▶உடல் பருமன், 


▶கொலஸ்ட்ரால், 


▶புகைக்கும் பழக்கம் 


ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, இந்நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.


⭕ நாள்பட்ட சிறுநீரக நோய் என்றால் என்ன❓


பல மாதங்களுக்கு,  தொடர்ந்து மோசமாகிக் கொண்டு, சாதாரண நிலைக்குத் திருப்ப முடியாத வகையில் சிறுநீரகங்கள் செயலிழப்பதற்கு நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு என்று பெயர். இரத்த பரிசோதனைகளின் பொழுது,  #கிரியேட்டினைனின் மதிப்பு உயர்ந்து வருவதும், சோனாகிராஃபி பரிசோதனைகளில் இரு சிறுநீரகங்களின் தோற்றமும் சிறியவையாக சுருங்கி காணப்படுவதும் இந்த நோயை சுட்டிக்காட்டுகிறது.


⭕ முடிவு நிலை சிறுநீரக நோய் (End stage kidney disease) என்றால் என்ன❓


முற்றிய மிக மோசமான நிலையை இந்த நோய் தொடும் பொழுது,  

“முடிவு நிலை சிறுநீரக நோய்……

 #End_stage_kidney_டிசீஸ்” என்றழைப்பர். 


சிறுநீரக செயல்பாடு 10 சதவீதமே இருக்கும். இதை வழக்கமான வழிமுறைகளில் குணப்படுத்த முடியாது. டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகங்களை பொருத்துதல் போன்றவற்றையே கையாள வேண்டும்.


⭕ இந்நோய் எப்படி ஏற்படுகிறது❓


இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இரு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். மொத்தமாக நோயாளிகளில் 2/3 பங்கு இவ்வகைக் காரணங்களால் தாக்கப்படுகிறார்கள்.


🚩#சில_முக்கிய

#காரணங்களாவன❓


😭 நீரிழிவு நோய் 


இது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணமாகும். சராசரியாக மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 – 40 சதவீதம் நோயாளிக்கு இந்நோயினாலேயே ஏற்பட்டு விடுகிறது.


😭 உயர் இரத்த அழுத்தம் : 


முறையாக இரத்த அழுத்தம் கவனிக்கப்படா விட்டால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். மொத்த நோயாளிகளில், 30 சதவீதம் இக்காரணத்தினால் தாக்கப் பட்டிருப்பது தெரிய வருகிறது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், உயர்இரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடுகளை மேலும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


😭 க்ளோமெருலோ நெஃப்ரிடிஸ் (glomerulonephritis) : 


சிறுநீரகத்தில் விக்கம் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் இந்நோய் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.


😭 பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் (Polycystic kidney disease) : 


இது இரு

சிறுநீரகங்களிலும் வேண்டாத சதைவளர்ச்சியை ஏற்படுத்தும் பொதுவான மற்றும் பாரம்பரிய தாக்கமாகும்.


💢 இதர காரணங்கள்.❓


▶சிறுநீரக வயது முதிர்தல், 


▶சிறுநீர் பாதையில் கற்கள், 


▶பிராஸ்டேட் சுரப்பி பெரிதாகி விடுதல், 


மருந்துகள் அல்லது விஷப் பொருட்களால் சிறுநீரகங்கள் பழுதடைந்து விடுதல் மற்றும் (குழந்தைகளுக்கு) அடிக்கடி ஏற்படும் தொற்று போன்றவற்றால் தாக்கப்படுவது.


💢 நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் யாவை❓


➡1, முதல் நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 90-100%)


➡2, இரண்டாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 60-89%)


➡3, மூன்றாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 30-59%)


➡4, நான்காவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15-29%)


➡5, ஐந்தாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15% க்கும் குறைவு)


🔴 நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் யாவை❓


நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். சிறுநீரக செயல்பாடு மற்றும் #GFR (Glomerular Filtration Rate) அளவை பொறுத்து நாள்பட்ட சிறுநீரக நோய் ஐந்து வகையாகப் பிரிக்கப் படுகிறது. இரத்த பரிசோதனையின் பொழுது இரத்தத்தில் இருக்கும் கிரியேட்டினைனின் மதிப்பை வைத்து GFR அளவை கணக்கிடலாம்.


🔴 முதல் நிலை 

(சிறுநீரகத்தின் செயல்பாடு 90-100%)


அறிகுறிகள் இல்லாமல் வரும் இந்த நோயின் ஆரம்ப காலங்களில் சிறுநீரகங்கள் பழுதடைவதில்லை. 

(சீரம் கிரியேட்டினைன் சாதாரண நிலையிலேயே இருப்பதாகக் காண்பிக்கும்) இந்த நிலையில் வழக்கமாக எடுக்கப்படும் பரிசோதனைகளின் மூலமே இதைக் கண்டு அறியப்படும். அல்லது பிற நோய்களுக்காக எடுக்கப்படும் சோதனைகளின் பொழுது தற்செயலாக இந்த பரிசோதனையையும் செய்து கண்டறியலாம். நோயின் இந்த நிலைக்கு ஒரு சிறு தகவலை எடுத்துச் சொல்லும் வகையில் இருக்கக் கூடியது, சிறு நீரில் புரோட்டீன் இல்லாமை ஆகும். எக்ஸ்ரே மூலம் பார்த்தால் சிறுநீரகம் பழுது பட்டிருப்பது தெரியும். அதை MRI அல்லது CT ஸ்கேனிலும் பார்க்கலாம்.


🔴 இரண்டாவது நிலை 

(சிறுநீரகத்தின் செயல்பாடு 60-89%)


மிதமான தாக்கமே உடைய நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சிலருக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உயர் இரத்த அழுத்தம், மற்றும்  சிறுநீரில் சீரம் கிரியேட்டினைனின் அளவு அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.


🔴 மூன்றாவது நிலை 

(சிறுநீரகத்தின் செயல்பாடு 30-59%)


நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாமலேயே இருக்கும் அல்லது சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அவற்றுடன் சிறுநீரில் சீரம் கிரியேட்டினைனின் அளவு அதிகரித்து  ஒரு சில அசாதாரண படிவங்களைக் காணலாம்.


🔴 நான்காவது நிலை 

(சிறுநீரகத்தின் செயல்பாடு 15-29%)


இது சற்று தீவிரமான நிலையாகும். இந்த நிலையில் நோயின் தாக்கத்தை பொறுத்தும் இதர நோய்களின் வீரியத்தை பொறுத்தும் அறிகுறிகள் மாறுபட்டு காணப்படும்.


🔴 ஐந்தாவது நிலை (சிறுநீரகத்தின் செயல்பாடு 15% க்கும் குறைவு)


மிகவும் தீவிரமான நிலை என்று சொல்லலாம். இதில் மிதமான நிலையிலிருந்து, மிக மோசமான நிலை வரை பலதரப்பட்ட அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தைக் விளைவிக்கும் அறிகுறிகளும் இருக்கும். ஒரு சிலருக்கு டையாலிஸிஸ் செய்தே ஆக வேண்டிய நிலை உருவாகும்.


🈵 சிறுநீரக நோய்களைக் குறிக்கும் பொதுவான அறிகுறிகள்.❓


↘பசியின்மை, 


↗வாந்தி எடுத்தல்


↘நலிவான உடல்நிலை, 


↘எடை குறைதல்.


↘கால்களின் கீழ் பாகம் வீக்கம் அடைதல்


↗முகத்தில் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படுதல்.(குறிப்பாக காலை நேரத்தில்)


↗உயர் இரத்த அழுத்தம், அதிலும் கட்டுப்படுத்த முடியாத அளவில் அல்லது இள வயதில் ஏற்படுதல்


↗தோல் நிற மாற்றம் (வெளுத்துப்போதல்).


➡தூக்கம்


➡கவனக் குறைபாடு, 

மற்றும் மயக்க [ கோமா] நிலை.


➡அறிப்பு, 


➡சதைப் பிடிப்பு, 

அல்லது ஓய்வின்மை.


➡பக்கவாட்டுப் பகுதியில் வலி ஏற்படுதல்


➡வழக்கத்திற்கு மாறாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு


➡எலும்பு வலி, 


➡வயதானவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு.


➡பாலியல் இன்பத்தில் நாட்டமில்லாமை, 


➡ஆண்குறி விறைப்புடன் இல்லாமல் இருத்தல், 


➡பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுதல்


💢 இந்நோயுடையவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அறிதல் எப்படி❓


💢 உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கீழ்கண்ட காரணங்களால் நாள்பட்ட சிறுநீரக நோய் வரலாம்.❗


▶ 30 க்குக் குறைவான அல்லது 50 க்கு அதிகமான வயது


▶உயர் இரத்த அழுத்தம் (அதாவது 200/120 க்கும் அதிகமாக இருந்தால்)


▶முறையான மருத்துவத்திலும் கட்டுப்படுத்த முடியாத உயர் இரத்த அழுத்தம்


▶இரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட கண்பார்வைக் கோளாறுகள்


▶சிறுநீரில் புரோட்டீன் இருத்தல்


▶வீக்கம், 


▶பசியின்மை,  


▶உடல் நலிவு


💢 இந்நோயின் முற்றிய நிலையில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் என்னென்ன❓


➡நுரையீரலில் திரவம் சேர்வதால்…… மார்பில் வலி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்.


➡உயர் இரத்த அழுத்தம்.


➡வாந்தி எடுத்தல்


➡மிகவும் பலவீனமடைதல்


⏩மைய நரம்பு மண்டலம் தாக்கப் படுதல்………


↙குழப்பம், 


↙தூக்கம், 


↗வலிப்பு மற்றும் கோமா நிலையை அடைதல்


➡இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருத்தல். (hyperkalemia) இது இருதயத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.


➡இருதயத்தைச் சுற்றி இருக்கும் மெல்லிய உரை வீங்கி விடுதல் (Pericarditis எனப்படும் நோய்)


💢 நாள்பட்ட சிறுநீரக செயலிழப்புடைய நோயாளி எப்பொழுது மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.❓


💢 நோயாளி உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். இல்லையெனில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படக்கூடும்.❗❓


▶காரணமின்றி திடீரென எடை கூடுதல், 


▶சிறுநீரின் கனஅளவு குறைதல், 


▶மூச்சு திணறல் அல்லது படுக்கையில் படுத்திருக்கும் பொழுது மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுதல்


❓ஸ்கேன் செய்து பார்த்ததில் #சிறுநீரகம்_சுருங்கிக்_காணப்படுதல்❗


▶மார்பில் வலி, 


▶சீரற்ற இதய துடிப்பு


▶காய்ச்சல், 


▶வயிற்றுப் போக்கு, 


▶பசியின்மை, 


▶மிக மோசமாக வாந்தி எடுத்தல், 


▶வாந்தியில் இரத்தமும் காணப்படுதல்


▶தசை பலவீனமடைதல்,


▶குழப்பம், மயக்கம் அல்லது உடல் பதை பதைப்பு


▶முறையாக கட்டுப்படுத்தப் பட்ட இரத்த அழுத்தம் திடீரென மோசமான நிலைக்குப் போதல்


▶சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளிப்படுதல் அல்லது அதிக இரத்த சேர்ந்து வெளிப்படுதல்


#கடுமையான_சிறுநீரக

#செயலிழப்பு…❓


👉கடுமையான சிறுநீரக செயலிழப்பு எப்படி ஏற்படுகிறது❓


👉இது பல காரணங்களினால் உருவாகலாம். மிக முக்கியமான காரணங்கள் கீழ்க் கொடுக்கப்

பட்டுள்ளன.


1. சிறுநீரகங்களுக்குப் போகும் இரத்தம் குறைதல். வயிற்றுப் போக்கினால் கடுமையாக நீர்வற்றிப் போதல்.


2. மோசமான நோய்த்தொற்று, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயுறுதல்.


3. சிறுநீர் கழிப்பதில் திடீரென்று தடங்கல் ஏற்படுதல். பெரும்பாலும் சிறுநீரகத்தில் அடைபட்டிருக்கும் கல்லே இதற்குக் காரணமாக இருக்கும்.


4. மற்றவை ஃபால்ஸிபாரம் மலேரியா, லெப்டோபைரோஸிஸ், பாம்புக்கடி, குறிப்பிட்ட சிறுநீரக நோய்கள், கர்ப்ப கால சிக்கல்கள் மற்றும் சில மருந்துகளின் பக்க விளைவுகளினால் ஏற்படக்கூடியவை ஆகும்.


⭕ கடுமையான சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்❓❓


இந்நோய் தாக்கும்பொழுது, சிறுநீரகத்தின் செயல்பாடு, வெகு குறுகிய காலத்திலேயே மிக மோசமாக ஆரம்பிக்கிறது. இதனால் கழிவுப் பொருட்கள் அதிகமாக உடலிலேயே தங்கி விடுகின்றன. உடலில் இருக்கும் திரவங்களில் சமநிலை கெடுகிறது. இதனால் சிறுநீரகங்கள் திடீரென்று செயலிழக்கின்றன. இதனால் அறிகுறிகளும் குறிப்பான சில தடயங்களும் வெகு விரைவில் உருவாகின்றன.


💢 இந்த பாதிப்பின் தீவிரம் ஒரு நோயாளிக்கும் மற்றவருக்கும் சற்று வேறுபட்ட நிலைகளில் காண்பிக்கப்படும்.


1. வயிற்றுப் போக்கு, இரத்தம் இழப்பு, காய்ச்சல், உடல் சில்லிட்டுப் போதல்


2. சிறுநீர் குறைவாகப் போக ஆரம்பித்தல். (ஒரு சிலருக்கு சாதாரண நிலையில் இருக்கும்.)


3. திரவங்கள் உடலுக்குள்ளேயே தங்கி விடுவதால், தோள் பட்டை அல்லது பாதங்களில் வீக்கம் ஏற்படுதல்.


4. பசியின்மை, வாந்தி, விக்கல், உடல் அசதி, சோம்பல், மற்றும் மனம் குழப்பத்தில் ஆழ்ந்து விடுதல் போன்ற நிலைகள் ஏற்படும்.


5. மிக மோசமான அறிகுறிகள் - மூச்சுத் திணறல், மார்பில் வலி, நடுக்கங்கள் அல்லது நினைவிழத்தல், இரத்தமாக வாந்தி எடுத்தல், மற்றும் சீரற்ற இதயத் துடிப்புக்கள் (இது பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருந்தால் இருக்கும்.) போன்றவையாகும்.


5. இந்த நோய் தாக்கப்படும் ஆரம்ப காலத்தில், ஒருசில நோயாளிகளுக்கு எந்தவித அறிகுறியும் தென்படாது. இது வழக்கமான இரத்த பரிசோதனைகள் ஒன்றின்பொழுது தெரியவரும்.


💢 இந்த நோயைக் கண்டறிவது எப்படி❓


பல பேருக்கு இந்த நோய் தாக்கும்பொழுது எந்தவித அறிகுறிகளும் தென்படாமல் போகலாம். ஆகவே இந்த நோய் தாக்கியது போன்று மிகச்சிறிய அளவு சந்தேகம் எழுந்தாலும், உடனுக்குடன் சோதனை செய்து கொள்வது நல்லது.


இந்த நோய் தாக்கினால், இரத்த பரிசோதனைகளில் யூரியா மற்றும் கிரியேட்டினைன் அளவு கூடுயிருப்பது தெரியவரும். அதைத் தவிர சிறுநீரின் அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும் சில பரிந்துரைக்கப்பட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.


💢 இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை செய்வது❓


முறையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை முற்றிலுமாகவே குணப்படுத்தி விடலாம் இது பெரும்பாலான நோயாளிகளுக்கு சாத்தியமாகியிருக்கிறது. 


💀…கால தாமதமும் முறையில்லாத சிகிச்சையும் உயிருக்கே ஆபத்தாக முடியும்.…💀

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி