மூலிகை மருத்துவ குறிப்புகள்

 சில எளிமையான சித்த மருத்துவக் குறிப்புகளைப் பற்றி பார்க்கலாம்.


ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து; ஆறவைத்து வடிகட்டி குடித்தால், அஜீரணம் சரியாகும்.


வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.


செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.


கற்பூரம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி, மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.


கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.


வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.


ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


 நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும்.


நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும்.


ஆடாதொடை பொடி, நிலவேம்பு பொடி, விஷ்ணுகரந்தை பொடி, இவைகளுடன் கிருந்தை நாயகம் இலை, குப்பைமேனி இலை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து காலை மாலை குடித்துவர எப்பேர்பட்ட காய்ச்சலும் 3 நாட்களில் சரியாகி விடும். மேலும் உடல்வலியும் தீரும்.


சர்பகந்தா பொடியை சிறிதளவு காலை, மாலை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் நீங்கி, இரவில் தூக்கம் நன்றாக வரும். மன சோர்வு நீங்கும்.


பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி எலும்பிச்சை சாற்றில் ஊற வைத்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.


பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. பீட்ரூட்டை சாப்பிடும் போது நைட்ரேட்டுகள் நமது உடலில் உள்ள பார்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றப்பட்டு இரத்த நாளங்களை விரிவடய செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேன்படுத்தும். மேலும் ஆண்மை சக்தியை அதிகரித்து பாலுறவில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.


 அதிமதுரம், விதை நீக்கிய கடுக்காய் தோல், திப்பிலி, மிளகு இவற்றை வறுத்து பொடித்து, தினசரி காலை மாலை நெய்யுடன் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கி கண் ஒளி பெரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி