விரைவீக்கம்

 🇨🇭#ஆண்களுக்கு_ஏற்படும்

#விரை_வீக்கம்……


🇨🇭#காரணங்களும்……❓❗


💊#தீர்வுகளும்……❗❗❗❓❓❓


👉விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக் கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது. 


யானைக்கால் நோய் (Filariasis) நோயினால் கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு.


விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கத்திலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.


அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தை குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று.


சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். 


.

🇨🇭#விரை_வீக்கம்_குணமாக……


❓#வீட்டு_மருத்துவம்❓


💢கழற்ச்சிகாய் மெழுகு💢

     


❓தேவையான பொருட்கள்


சுக்கு சூரணம் -50 கிராம் 


மிளகு சூரணம் -50 கிராம் 


வாய்விலங்கம் சூரணம் -50 கிராம் 


தலைச்சுருளி வேர் சூரணம் -50 கிராம் 


பெருங்காயம் சூரணம் -50 கிராம் 


திப்பிலி  சூரணம் -25 கிராம் 


ஓமம் சூரணம் - 25 கிராம் 


நெய்  விட்டு லேசாக வறுத்து எடுத்த கழற்ச்சிகாய் விதை பருப்பு -100 கிராம் 


பூண்டு -350 கிராம் 


பனங்கருப்பட்டி- 1 கிலோ 


⭐இவை அனைத்தையும் மெழுகு பதத்தில் நன்கு இடித்து எடுக்கவும்.


ஐந்து கிராம் அளவு காலை மாலை உணவுக்கு பின் வெந்நீரில் எடுக்கவும் இது…… 


சகலவிதமான வாய்வு 


அண்ட வாய்வு 


விரைவாதம் 


உடல்வலி 


தசை வலி 


கருப்பை நீர்க்கட்டி 


கொழுப்புகட்டி 


போன்றவைகளுக்கு நன்றாக இருக்கும் குணமாகும்.


.

💢கழற்ச்சிக்காய் சூரணம்💢


ஆளி விதை 100 கிராம்


கழற்ச்சிக்காய் 100 கிராம்


மிளகு 100 கிராம்


மருதம் பட்டை 100 கிராம்


சதகுப்பை 100 கிராம்


இவைகளை சூரணம் செய்து காலை இரவு உணவுக்கு அரை மணி நேரம் கழித்து 100 மில்லி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து பாதியாக்கி வடிகட்டி 

குடித்து வரவும். (30 தினம்)


.

💢கழற்ச்சிக்காய் மாத்திரை 💢


❓தேவையான பொருட்கள்❓


கசக்காய் பருப்பு 20 கிராம்


சுக்குத் தூள் 20 கிராம்


பெரிய லவங்கப்பட்டை 20 கிராம்


மூசாம்பரம் ( கரியபோளம் ) 20 கிராம்


🔰செய்முறை❓


இவைகளைத் தனித் தனியாகத் தூள் செய்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும் இதைக் கல்வத்திலிட்டு சிறுகச் சிறுக தண்ணீர் விட்டு அரைக்கவும். மெழுகு பதத்தில் எடுத்து சுண்டைக்காய் அளவு, மாத்திரைகளாக உருட்டி நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தவும்.


❓❓உபயோகம்❓


விதை வீக்கத்திற்கு 3 இம்மாத்திரையைப் பொடித்து நீரில் குழைத்து விதையின் மீது பத்துப் போட்டு சாம்பிரானி கின்ன அனலில் காட்ட வீக்கம் குறையும்.


.

💢கழற்ச்சிக்காய் அடை💢


❓தேவையானவை❓


சிற்றாமணக்

கெண்ணை:- 300 மில்லி


கழற்சிக்காய் பருப்பு:- 50 கிராம்


நாட்டுக்கோழி முட்டை:- 3


🔰செய்முறை❓


கழற்சிக்காய் பருப்பை கோழி முட்டையின் வெள்ளைக்கரு விட்டரைத்து வடைபோல் தட்டி எண்ணையில் போட்டு காய்ச்சி அடையை சாப்பிட்டுவிட்டு காய்ச்சிய எண்ணையை 2 தேக்கரண்டி சாப்பிடவும், வாரம் இருமுறை சாப்பிடவும். விரை வாதம், வீக்கம் , வலி சரியாக சரியாகிவிடும்.


.

💢விரைவாதத்திற்கு – வேறொருமுறை💢


கழற்சி பருப்பு             10 கிராம்


பூண்டு                           10 கிராம்


மிளகு                             10 கிராம்


விளக்கெண்ணெய்    10 கிராம்


இவைகளை ஒன்று கூட்டிக் காய்ச்சி, 3 நாட்கள் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட விரைவாதம் தீரும்.


 .              

🇨🇭#மேலும்_சில_வைத்தியம்……👇

                                                                 

 

⭕ கழற்ச்சிக்காய் பருப்பு கசப்புச்சுவை கொண்டது. இதன் பருப்புடன்1 பருப்புக்கு 4-5 மிளகு சேர்த்து லேசாக வருத்தும் பொடி செய்து வைத்துக்கொண்டு காலை மாலை 2 வேளைகள் 1 ஸ்பூன் வெந்நீருடன்  3 நாட்கள் சாப்பிடவும். சிலருக்கு லேசான பேதி ஏற்படலாம். கழிவுகள் வெளி வரட்டும். அதிக மானால் மோர்சாப்பிட பேதி நிற்கும். 2 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும்

இதனை சாப்பிடலாம்.


⭐இதற்கு புளியை விலக்கனால் நல்லது.


அடிக்குடலில் உள்ள வாயு நீங்கி விரை வீக்கம் prostate வீக்கம் குணமாகும்.


⭕50ml விளக்கெண்ணெயுடன்  இரண்டு டீஸ்பூன் கழற்சிக்காய் பருப்பு தூள் சேர்த்து  அடுப்பில் குறைந்த அளவு வெப்பத்தில் தைலமாக காய்ச்சி ஆறிய பின் வலியுள்ள இடத்தில் இரவில் தடவிவர  வலி, வீக்கம் சரியாகும்.


⭕புளிய இலை அல்லது துத்தி இலையை விளக்கெண்ணெயுடன் வதக்கி இளம் சூட்டோடு வலி வீக்கம் உள்ள இடத்தில் மேல் பற்றாக போட்டுவர வலி வீக்கம் சரியாகும்.


⭕வெடிக்காத தென்னம்பாலையில் உள்ள பிஞ்சுகளை பாலில் அரைத்து 2 கிராம் சாப்பிட விரைவாதம் நீங்கும்.


⭕ தழுதாழை இலையை

விரை வாதம், நெறிக்கட்டிகள் குணமாக இலைகளை ஆலிவ் எண்ணெயில் வதக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டுப்போட வேண்டும்.


⭕ தொட்டாற்சுருங்கி இலையை மெழுகு  போல அரைத்து வீக்கம் உள்ள விதைப்பை மீது பற்று போட்டு பருத்தி துணிவைத்து வைத்துக் கட்ட விரை வாதம்  குணமாகும்.


⭕ விரை வாதத்திற்கு மணித்தக்காளியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி பற்றாக உபயோகிக்கலாம். இதனை தினமும் உபயோகிப்பதால் விரை வாதம் குணமாக வாய்ப்புகள் உண்டு.


⭕ வாதநாராயணன் கீரையை

விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வந்தால் விரை வாதம் குணமாகும்.


⭕நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவை தொடர்ந்து ஒரு வாரம் விரைகளில் 

பூசிவர, விதை வீக்கம், விதை வலி 

குணமாகும்.


⭕கோழி முட்டையின் வெண்கருவில் கழற்சிப் பருப்பினை மைய அரைத்து, 

விரைகளைச் சுற்றி பற்றுப் போடவும். 

காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதனால் அண்டவீக்கம் முற்றிலும் தீரும்.


⭕சிறு குமுட்டியின் வேர்த்தூளை 3 கிராம் 

வீதம் காலை மாலை தொடர்ந்து சாப்பிட விரைவாதம், குடல் வாதம் தீரும்.


⭕முடக்கற்றான் இலை, வேர், பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து, 

விளக்கெண்ணெய் சேர்த்து காய்ச்சி, 

வடிகட்டி சாப்பிட விரைவாதம், வாயு தீரும்.


⭕ பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.


⭕ வள்ளை மூக்கிரட்டைக் கீரையை 

அரைத்து, சாறெடுத்து, சம அளவு தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி வடி கட்டவும்.


வடிகட்டிய அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். 5 முறைக்கு குறையாமல் பேதியாகும். இதனை 3 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை சாப்பிட விரைவாதம் தீரும்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி