Low bp

 🇨🇭#குறைந்த_இரத்த_அழுத்தமும்

#சமாளிக்கும்_முறைகளும்❓


🇨🇭#Low_Pp_சரி_செய்வது_எப்படி❓


 

 ✳👉 குறைந்த இரத்த அழுத்தம் எப்பொழுதும் ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லையென்றாலும், அதை பற்றி நன்கு புரிந்து கொண்டு , அதன் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டு அதை நீங்களே சமாளித்து ஆரோக்ய வாழ்வை வாழ்வது புத்திசாலித்தனம்.


உயர் ரத்த அழுத்தம் (Hypertension) குறித்து நம்மில் பலருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதேவேளையில் குறை ரத்த அழுத்தம் (Hypotension) குறித்து படித்தவர்களிடம் கூட விழிப்புணர்வு இல்லை என்பதுதான் வருத்தம். உலகில் இளம் வயதினருக்கு 100ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. வயது கூடும்போது இந்த சதவிகிதமும் கூடுகிறது. உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ (Silent killer) என்று மருத்துவர்கள் அழைப்பர். இதுபோல் குறை ரத்த அழுத்த நோயை ஒரு எரிமலை என்பர். எரிமலை எப்போது நெருப்பைக் கக்கும் என்று சொல்ல முடியாதோ, அப்படித்தான் பல நேரங்களில் இது ஆபத்தில்லாத நோயாக அமைதி காத்தாலும், சில வேளைகளில் திடீரென்று  உயிருக்கு ஆபத்து தருகின்ற நோயாகவும் மாறிவிடுவது உண்டு.


👉ரத்த அழுத்தம்


ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்திற்குப் பெயர்தான் ‘ரத்த அழுத்தம்’ (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது இயல்பு அளவு.


இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறோம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக்  குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைக்கிறோம்.


முப்பது வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம், இதில் 120 என்பது சுருங்கழுத்தம், 80 என்பது விரிவழுத்தம். ஆனால், இது எல்லோருக்குமே சொல்லி வைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சுருங்கழுத்தமும்  விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம்.


ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை `நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் ‘குறை ரத்த அழுத்தம்’ என்றும் சொல்கிறது.


👉குறை ரத்த அழுத்தம்


குறை ரத்த அழுத்தத்தில் பல வகை உண்டு. வழக்கத்தில் நாம் குறிப்பிடும் குறை ரத்த அழுத்த நோய்க்குத் ‘தமனிநாளக் குறை ரத்த அழுத்தம்’ (Arterial Hypotension) என்று பெயர். ஒருவருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 90க்குக் குறைவாகவோ அல்லது டயஸ்டாலிக் அழுத்தம் 60க்குக் குறைவாகவோ இருந்தால், அவருக்கு இவ்வகை குறை ரத்த அழுத்தம் இருப்பதாகக்  கொள்ள வேண்டும்.


அல்லது சிஸ்டாலிக் அழுத்தம் 115க்கு மேல் இருந்து டயஸ்டாலிக் அழுத்தம் 50க்குக் குறைவாக இருந்தால் அப்போதும் அதைக்  குறை ரத்த அழுத்தம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். பலருக்கும் குறை ரத்த அழுத்தம் இருக்கும். ஆனால், தொல்லைகள் எதுவும் இருக்காது. அப்படிப்பட்டவர்கள் பயப்படத் தேவையில்லை. திடீரென்று 20 மி.மீ. அளவுக்கு சிஸ்டாலிக்  அழுத்தம் குறைகிறதென்றால், அப்போது சில அறிகுறிகள் தோன்றும். இந்த நிலைமையில் அவசியம் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உயிருக்கு ஆபத்து நேரும்.


👉ரத்த அழுத்தம் குறைவது ஏன்❓


இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்ல தடை உண்டாவதுதான் குறை ரத்த அழுத்தம் ஏற்பட அடிப்படைக் காரணம். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. இதயத்துக்கும் மூளைக்கும் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்துவிடுகிறது, மயக்கம் ஏற்படுகிறது.


👉யாருக்கு இது வருகிறது❓


தடகள வீரர்கள், 


கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், 


ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், 


கர்ப்பிணிகள், 


தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், 


வயதானவர்கள், 


படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் 


போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


.

🔴 #அறிகுறிகள்❓


தலைக்கனம், 


தலைச்சுற்றல், 


மயக்கம், 


குமட்டல்  உணர்வு


வாந்தி, 


வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, 


சோர்வு, 


பலவீனம், 


கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, 


பார்வை குறைவது, 


மனக்குழப்பம், 


வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை, 


உடல் சில்லிட்டுப்போவது, 


மூச்சுவாங்குவது 


குறைந்த நாடி துடிப்பு


அதிர்ச்சி


போன்ற அறிகுறிகளில் ஒன்றோ பலவோ  ஏற்பட்டால் அப்போது குறை ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.


.

⭕யாருக்கு, எப்போது வாய்ப்பு அதிகம்❓❓❓


👉கர்ப்பம் 


கர்ப்பத்தின்போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாய்கள் அதிகம் விரிவடைவதால், ரத்த அழுத்தம் குறைகிறது. இதற்குப் பயப்படத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு இது சரியாகிவிடும்.


👉நீரிழப்பு


காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள், தீவிரமான  தீக்காயங்கள், அக்னி நட்சத்திர வெயில் போன்றவை காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படும்போது குறை ரத்த அழுத்தம் ஏற்படும்.


👉நோய்கள் 


இதய வால்வு கோளாறுகள், இதயத் துடிப்புக் கோளாறுகள், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற காரணங்களால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். நுரையீரல் ரத்த உறைவுக்கட்டி (Pulmonary Embolism), சிறுநீரகச் செயல்இழப்பு, காலில்  சிரை ரத்தக்குழாய் புடைப்பு நோய் (Varicose veins) போன்றவற்றாலும் தானியங்கி நரம்புகள் செயல்படாதபோதும் இது ஏற்படுகிறது.


👉விபத்துகள் 


வீட்டில், சாலையில், அலுவலகத்தில், தண்ணீரில் ஏற்படும் விபத்துகளால் மூளை, முதுகுத் தண்டு வடம் மற்றும்  நுரையீரலில் அடிபடும்போது அல்லது பாதிப்பு ஏற்படும்போது அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு குறை ரத்த அழுத்தம்  ஏற்படுகிறது.


👉ஹார்மோன் கோளாறுகள் 


தைராய்டு மற்றும் பிட்யூட்டரி குறைபாடுகள், பேரா தைராய்டு மற்றும் அட்ரீனல் கோளாறுகள், கட்டுப்படாத நீரிழிவு நோய், ரத்த சர்க்கரை தாழ்நிலை போன்றவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.


👉ரத்தம் இழப்பு 


விபத்துகள் மூலம் ரத்தம் இழப்பு ஏற்படும்போதும், டெங்கு காய்ச்சல், மூலநோய், இரைப்பைப் புண், குடல்  புற்றுநோய், அளவுக்கு அதிகமான மாதவிலக்கு போன்ற உடல் நோய்களால் ரத்தம் இழக்கப்படும்போதும் குறை ரத்த அழுத்தம்  ஏற்படுகிறது.


👉தீவிர நோய்த்தொற்று


சில தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலந்து நச்சுக்குருதி நிலையை (Septicaemia) உருவாக்கும்.  அப்போது ரத்த அழுத்தம் குறையும்.


👉ஒவ்வாமை


மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்றவற்றால் ஒவ்வாமை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் திடீரென்று குறையும்.


👉சத்துக்குறைவு 


ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கும், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் குறைவாக  உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் குறைவதுண்டு.


👉மருந்துகள்


சிறுநீரைப் பிரியச் செய்யும் மருந்துகள், மன அழுத்த நோய்க்கான மருந்துகள், ஆண்மைக் குறைவுக்குத்  தரப்படுகிற ‘வயாகரா’ வகை மாத்திரைகள், பார்கின்சன் நோய்க்கான மருந்துகள் போன்றவற்றால் ரத்த அழுத்தம் குறையலாம்.


👉ரத்த அழுத்த மாத்திரைகள் 


உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும்


👉அதிர்ச்சி நிலை 


இதயம், நுரையீரல், சிறுநீரகம், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும்போது  உடலில் அதிர்ச்சி நிலை (Shock) உருவாகும். இதுபோல் மருந்து ஒவ்வாமை,  விஷக்கடிகளாலும் இம்மாதிரியான அதிர்ச்சி  நிலை உருவாவது உண்டு. இதுதான் ஆபத்தைத் தரும்.


சிலருக்குப் படுக்கையை விட்டு எழுந்ததும் அல்லது கழிப்பறையில் கழிப்பிடத்திலிருந்து எழுந்ததும் கண்கள் இருட்டாவதுபோல் உணர்வது, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதுவும் குறை ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படுவதுதான். இதற்கு ‘இருக்கை நிலை சார்ந்த குறை ரத்த அழுத்தம்’ (Postural hypotension) என்று பெயர். இது 65 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கு மிகவும் சகஜம். இது இளம் வயதினருக்கும் வரலாம். 


நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் அமர்ந்துவிட்டு, திடீரென்று எழுந்து நின்றால் இவ்வாறு குறை ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் வரும். 


சில மாத்திரை மருந்துகளாலும், உறக்கமின்மை போன்ற உடல் சார்ந்த கோளாறுகளாலும் இது ஏற்படுவதுண்டு.


சிலருக்கு உணவு சாப்பிட்டதும் ரத்த அழுத்தம் குறைந்துவிடும் 

(Postprandial hypotension). இது பொதுவாக 60  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுவதுண்டு. தானியங்கி நரம்புக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் நோயாளிகளுக்கும் இது ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உணவை  சாப்பிட்டதும் அதை செரிமானம் செய்ய குடலுக்கு அதிக அளவில் ரத்தம் வந்துவிடும். இதனால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடும்.  அப்போது ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதைத் தவிர்க்க சிறிது சிறிதாக அடிக்கடி உணவு சாப்பிட வேண்டும். மாவுச் சத்து  நிறைந்த, கொழுப்புச் சத்து குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியதும் முக்கியம்.


👉பரிசோதனைகள்❓


குறை ரத்த அழுத்த நோய்க்கு முதல்முறையாக மருத்துவரிடம் செல்லும்போது வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், இசிஜி, எக்கோ, டிரெட்மில் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. சிலருக்கு ‘சாய் மேஜை பரிசோதனை (Tilt-table Test) தேவைப்படும். இவற்றின் மூலம் குறை ரத்த அழுத்தம் நோய்க்குக் காரணம் தெரிந்து சரியான சிகிச்சையை  தொடங்க முடியும்.


👉#பொதுவான_யோசனைகள்❓❗


அடிப்படை காரணத்தை சரி செய்தால் மட்டுமே குறை ரத்த அழுத்தம் சரியாகும். எனவே, காரணத்தைச் சரியாக கணித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். 


மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் உப்பை சிறிதளவு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.


நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.


சிறு தானியங்கள், காய்கறி, பழங்கள் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.


ஒரே இடத்தில் வெகு நேரம் நிற்பதை தவிர்க்கவும். தலை சுற்றினால் சிறிது நேரம் அமரவும்.


ஷவரில் சுடு நீரில் வெகு நேரம் நிற்காதீர்கள்.


உங்கள் இரத்த அழுத்தம் குறையும் பொழுது நிறைய நீர் அருந்தி போதுமான அளவு இரத்தம் இரத்த குழாய்களுக்குள் பாய வழி வகுக்க வேண்டும்.


ஆர்த்தோ ஸ்டேடிக்ஸ் நிலை ஏற்படாமல் இருக்க அவ்வப்பொழுது இடமாற்றம் செய்துக் கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமர்வது நல்லது.


உங்கள் மன அழுத்தத்தை கட்டப்பாட்டுக்குள் வைத்திருந்தால் அதிர்ச்சியால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.


உங்கள் இரத்த அழுத்தத்தை சமன் நிலையில் வைத்திருக்க உங்கள் உணவில் கூடுதல் உப்பு சேர்க்கவும்.


தேவையான மருத்துவ பரிந்துரைப்பு பெற மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.


குறை ரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல், மயக்கம் வரும்போது காபி அல்லது தேநீர் குடிக்கலாம். தற்காலிகமாக இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் கால்களை மடக்கித் தரையில் உட்காராதீர்கள். இடையிடையில் எழுந்து செல்லுங்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதும் கூடாது. வெயிலில் அளவுக்கு அதிகமாக அலையவும் விளையாடவும்  கூடாது.


கடுமையான உடற்பயிற்சிகள், `ஜிம்னாஸ்டிக்’, ‘கம்பிப் பயிற்சிகள்’ போன்ற தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். புகைப்பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள்.


போதை மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். 

கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத நிலைமைகளில் தரையில் உட்கார்ந்து கொண்டு, உடலை  முன்பக்கமாக சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.


படுக்கையை விட்டு சட்டென்று உடனே எழ வேண்டாம். சிறிது நேரம் மூச்சை நன்றாக உள் இழுத்து, பிறகு வெளியில்விட்டு, மெதுவாக எழுந்திருங்கள். எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.


படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலைச்சுற்றல் ஏற்படாது.  படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.  உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.


அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்க முடியும். வழுக்காத தரைவிரிப்புகளையே வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் பயன்படுத்துங்கள்.


இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள். மருத்துவர் பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே சுய மருத்துவம் செய்யாதீர்கள்


.

💊#வீட்டு_வைத்தியம்💊


🔴 ரத்த அழுத்தத்தை ஒரே சீராய்

வைத்துக்கொள்ள……


⭕ ரத்தக் கொதிப்பு நீங்கச❓❗


👉மருதரப் பட்டை  சூரணம்


💢 தேவையானவைகள்❓


மருதரப் பட்டை – 200 கிராம்


     

சீரகம்                  – 100 கிராம்


     

சோம்பு                – 100 கிராம்


     

விரலி மஞ்சள்                – 100 கிராம்


👉செய்முறை   


இவற்றை ஒன்றாகத் தூள்செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை அதிகாலை, மாலை உணவுக்கு பின் அல்லது முன் இருவேளையும் சாப்பிட்டுவர……


குறை ரத்த அழுத்தம் இருந்த சூவடே இல்லாமல் மறையும்.


.

💊#சீரக_சூரணம்💊


1.லேசாக வறுத்த சீரகம் 100கி,


2.லேசாக வறுத்த ஏல அரிசி 50கி,


3.பச்சை கற்பூரம் 25கி இதை நன்கு கல்வத்தில் அரைத்து பின் மேற்கண்ட பொருள்களையும் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொண்டு,


4.சுக்கு 10கி


5.மிளகு 10கி


6.திப்பிலி 10கி


7.கொத்தமல்லி 20கி


8. அமுக்கிரா 20கி 


4 முதல் 8 வரை உள்ளவற்றை நன்கு சூரணித்து பின் மேலுள்ள 1 முதல் 3 வரையுள்ள கலவையையும் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு 1 கிராம் அளவு உணவுக்குப் பின்பு……


#highபிரஷர் உள்ளபோது எலுமிச்சை சாற்றிலும், 


#lowபிரஷர் உள்ளபோது நாட்டுக்கோழி சூப் அல்து மிளகு ரசத்திலும் அருந்தவும். 


ரத்த அழுத்தம் விரைவில் சமநிலையை அடையும்.


என்ன பிரஷர் என்றே தெரியாத போது உடல் குளிர்ந்திருந்தால் வெந்நீரிலும், 


உடல் சூடாக இருந்தால் குளிர்ந்த நீரிலும் அருந்த வேண்டும்.


பலருக்கும் கொடுத்து நல்ல பலனை கண்டுள்ளேன் நன்கு அனுபவித்த மருந்து.


⭐ ஒரு கப் பீட்ரூட்டை எடுத்துக்கொண்டு அதில் ஜூஸ் செய்து தினமும் இரண்டு முறை பருகுங்கள். இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


⭐ ஒரு கப் கருங்காப்பி குடிப்பதும் மிகச்சிறந்த தீர்வாக அமையும்.


⭐ சிலர் பாதாமை பேஸ்ட்டாக அரைத்து, மிதமான சூடுள்ள நீரில் கலந்து பருகலாம்.


 ⭐ 10 பாதாம் பருப்புகளை தோல் நீக்கி, நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள், பின் அவற்றை பாலுடன் சேர்த்து  நன்றாக கொதிக்க வைத்து, அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை சரியாகிவிடும்.


⭐ குறைந்த ரத்த அழுத்தம் நோய் குணமாக தினமும் சாப்பிடும் உணவில் 10 மில்லி ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து கொள்ளுங்கள்.

இவ்வாறு ரோஸ்மேரி எண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதினால் குறைந்த இரத்த அழுத்தம் நோய் சீராகும்.


⭐ குறைந்த இரத்த அழுத்தம் குணமாக இரண்டு கேரட்டினை சிறு, சிறு துண்டுகளாக கட் செய்து, மிக்சியில் ஜூஸ் போல் அடித்து எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து தினமும் அருந்திவர குறைந்த இரத்த அழுத்தம் சரியாகிவிடும்.


⭐ ஒரு இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவது நன்றாக சூரிய வெளிச்சத்தில் காயவைக்கவும்.


பின் மறுநாள் அவற்றை ஒரு பாட்டிலில் மாற்றி அந்த இஞ்சி துண்டுகள் நன்றாக முழுகும் அளவிற்கு தேனில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.


பின் இந்த இஞ்சி துண்டுகளை தினமும் சாப்பிட பிறகு ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் பிரச்சனை குணமாகும்.


.

💚👉 #சாப்பிட_வேண்டிய_உணவுகள்❓


பட்டாணி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும். இதில் ப்ரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் ஃபொலிக் அமிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும்.


ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறந்த ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.


குறைந்த ரத்த அழுத்ததை சரிசெய்ய வைட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில்  நிறைய வைட்டமின்கள் நிறைந்திருக்க்கிறது. அதைவிட பப்பாளி பழத்தில் நிறைய வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.


சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.


உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.


தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள் தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளான கோழி, வான்கோழி போன்றவை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்களுக்கு ஏற்ற சிறப்பான உணவுகள். ஆகவே இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது நல்லது.


காய்கறிகளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது- எனவே இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் காய்கறிகளை அதிகம் உட்கொண்டு வருவது, இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.


பழங்களில் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. எனவே பழங்களையும் அதிகம் டயட்டில் சேர்த்து வர வேண்டும்.


பேரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், இதனை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் சாப்பிட்டு வருவது நல்லது. மேலும் இதனை உட்கொண்டால், இதயம் வலிமையடையும்.


முழு தானியங்களை இரத்த அழுத்த குறைவு உள்ளவர்கள் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.


இரும்புச்சத்து அதிகம் நிறைந்த மற்றொரு காய்கறிகளில் ஒன்று தான் பீட்ரூட். இதனால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.


🇨🇭#மேலப்பாளையம்_திருநெல்வேலி🇨🇭


 💊#வைத்தியர்_முகம்மது_யாஸீன்💊


      ☎ 999 437 9988 ☎ 81 4849 6869 ☎

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி