வாழ்க்கை என்ற பரிசு

 🇨🇭 #வாழ்க்கை_ஒரு_அற்புத_பரிசு❗

#அதை_மகிழ்வாய்_வாழ……


🇨🇭#முயற்சி_செய்யுங்கள்.❗❗❗


🇨🇭#நோய்யில்லாமல்_வாழுங்கள்❓


✳ மனிதனின் ஆயுட்காலம் 

குறுகிக்கொண்டே போவதற்கான காரணங்கள்❓ 


1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை


2. இரவில் கண் விழித்திருத்தல்


3. காலை உணவை தவிர்த்தல்.


4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.


5. பணத்தை நோக்கிய ஓட்டம்


6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்


7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.


8.வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.


9.நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது


10.தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சூடாக நீர் அருந்துங்கள்.


11.தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.


12.போதியளவு நீர் அருந்துங்கள்.


13.இளநீர் போன்றவை மிக நல்லது


14.பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும்  உண்ணுங்கள்.


15.காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.


16.அளவாக உண்ணுங்கள்.


17.எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.


18.தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.


19.உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.


20.மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.


21.இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.


22.உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள். 


23.அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்


24.ஆளைக் கொல்லும் கவலைகளைப்  புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.


25.எண்ணெய் தேய்த்தால் தலைக்கு வெந்நீரில் குளிக்க வேண்டும்.


26.பகலில் புணர வேண்டாம்

(no sex in day time), 


27.பகலில் உறங்க வேண்டாம்.

 இரவில் மட்டுமே உறங்கவேண்டும்.


28.மூத்த பெண்களோடு உடலுறவு கொள்ளவேண்டாம்.

 

29.காலை இளம்வெயிலில் அலையவேண்டாம்.

 

30.மலத்தை , சிறுநீரை அடக்கவேண்டாம்.

 

31.உறங்கும் போது இடப்பக்கம் மட்டும் ஒருக்களித்து படுக்கவேண்டும்.

 

32.பால் தேவையான அளவு குடிக்கவேண்டும்.

 

33.மூலநோயை ஏற்படுத்துகின்ற உணவு வகைகளை உண்ணவேண்டாம். மூலநோய் என்பது எல்லா நோய்க்கும் இது தான் மூலகாரணம். இதன் மூலம் உடல் நோய் எதிப்பு சக்தியை இழந்து வருவதன் அடையாளமாக இன் நோய் கருதப்படுகின்றது,

 

34.புளித்த தயிர் தான் சாப்பிடவேண்டும்

பயன்படுத்தவேண்டும்.

 

35.நேற்று சமைத்த பொருட்கள் அமுதென்றாலும் சாப்பிடகூடாது.

 

36.பசிக்காமல் உணவு சாப்பிடகூடாது.

 

37.இரு வேளை மட்டுமே உண்ணவேண்டும்.

 

38.கிழங்குகளில் கருணைக்கிழங்கை மட்டும் சாப்பிடவேத்டும்.

 

39.பிஞ்சு வாழைக்காய்களையே சமைத்து உண்ணவேண்டும்.

 

40.மாதம் ஒரு முறை உடலுறவு கொள்ளவேண்டும்.

 

41.உணவு உண்ணும் போது தாகம் இருப்பினும் இடையிடையே நீர் அருந்தகூடாது.

 

42.சாப்பிட்ட பின்பு சிறுநடை நடக்கவேண்டும்.

 

43.ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி  மருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

44.நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். 


45.ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுக்கும்.

 

46.வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்ளவேண்டும்.

 

47.நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும். 


48.மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மைய்போட வேண்டும்.

 

49.மணம் வீசும் மலரை இரவில் நுகரகூடாது.

 

50.ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க கூடாது. 

 

51.தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்ககூடாது.

 

52.இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்ககூடாது.

 

53.பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ளகூடாது.


54.அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்யகூடாது.


55.பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்ககூடாது.

 

⭐ இவற்றை எல்லாம் செய்தால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழலாம்.❗❗❗

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி