Posts

Showing posts from 2020

வெள்ளைப்படுதல்

 #வெள்ளைப்படுதல்_நல்லதா…❓ #அதை_எப்போது #பிரச்சினைக்குரியதாக #பார்க்க_வேண்டும்…❓❓❓ எல்லாப் பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் நிகழ்கிறது. பிறப்புறுப்பு, கருப்பையின் வாய் போன்ற இடங்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து வரக்கூடிய கசிவே வெள்ளைப்படுதல்.  இது சாதாரணமாக இருக்கும்வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப்போனால் வெள்ளைப் படுதல் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 🔴 இந்தக் கசிவு இல்லையென்றால் என்னவாகும்❓ 🔴 பிறப்புறுப்பு உலர்ந்துவிடும். ஏன் பிறப்பிறுப்பில் ஈரப்பசைத் தன்மை இருக்க வேண்டும்……❓  👉வெள்ளைப்படுதலில் சிறிதளவு அமிலத்தன்மை இருக்கும். இது கிருமிகளைக் கொல்லக் கூடியது. இதேபோல் பின்னாளில் ஆண்-பெண் உறவு நிகழும்போது பிறப்புறுப்பு உலர்வாக இருந்தால் வரக்கூடிய எரிச்சலையும் வலியையும் இது கட்டுக்குள் வைக்கும்.  👉சாதாரண வெள்ளைப்படுதல் என்பது இறந்துபோன செல்களும் பிறப்புறுப்பில் உள்ள நுண்ணுயிரிகளும் இணைந்தது.  அது மெல்லிதாக ஒட்டக்கூடிய தன்மையுடனும்  நீளக் கூடியதாகவும் இருக்கும். வெள்ளை நிறத்திலோ லேசான மஞ்சள் கலந்த வெள்ளையாகவோ இருக்கும். எவ்விதத் துர்நாற்றமும் இருக்கா...

திரிபாலா பயன்

 திரிபலா என்றால் என்ன? திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும். திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது? திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.  நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை ...

பாலும் பசுவும்

 #நாம_பயன்படுத்தும்_பசும்பால்…❗ #உண்மையான_பசும்பால்_தானா…❓ 💢  பாக்கெட்பால் Vs பசும்பால் 💢 ⭐ குழந்தையின் முதல் உணவு பால் இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதன் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டபோது பிற விலங்குகளின் பாலைப் பயன்படுத்தத் தொடங்கினான்.  ஆடு, பசு, எருமை, கழுதை, குதிரை... ஏன் ஒட்டகப்பால் வரை மனிதன் பருகாத பாலே இல்லை. ஆனால், ‘தாய்ப்பாலுக்குப் பிறகு பசும்பாலே குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகும்’ என்கிறது மருத்துவ உலகம். உலகளாவிய பால் உற்பத்தியில், பசும்பால் உற்பத்தி மட்டும் 85 சதவிகிதம். பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது. ⭕ #பசும்பாலின்_உள்ளே…… இது, தாய்ப்பாலுக்கு இணையானது. ஃபோலிக் அமிலம் தயமின், பொட்டாசியம் நிறைந்தது. பசும்பாலில் அனைத்துவித அமினோஅமிலங்களும் உள்ளன. ஆனால், புரதத்தின் அளவு குறைவு. கால்சியம், லாக்டோஸ் நிறைந்தது. இது உடலுக்குள் சென்று லாக்டிக் அமிலமாக மாறுகிறது. லாக்டிக் அமிலம், உடலுக்குத் தேவையான புர...

சம்சக்தச் சூரணம்

 ஸம்ஸக்தச் சூரணம் ( அய்யாக்கண்ணு பிள்ளையின்  முறை ) அதிமதுரம்  சீரகம்  சோம்பு  கறிவேப்பிலையின் ஈர்க்கு  நெல்லி முள்ளி  உயர்ந்த ஏலம்  சடாமாஞ்சில்  வேங்கை மர சுள்ளியின் தூள்  நாகப்பூ  லவங்கப்பட்டை  இவைகள் வகைக்கு 2 வராகனெடை மல்லி 22 வராகனெடை கற்கண்டு 44 வராகனெடை எடுத்து அதிலுள்ள கல் தூசி முதலியவர்களை நீக்கி சுத்தம் செய்து வெய்யிலில் நன்கு உலர்த்தி கற்கண்டை தவிர மற்றவைகளை இடித்து சூரணம் செய்து வஸ்திரகாயம் செய்து கற்கண்டை தனியே பொடித்து இம் மருந்துடன் சேர்த்து ஒரு புதிய மண் பாண்டத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும் மருந்தின் அளவு : காலை மாலை இருவேளையும் வராகனெடை இரண்டு விதம் சாப்பிட்டு வரவும் தீரும் வியாதிகள் :                       நீர் கடுப்பு நீர் எரிவு கண் எரிவு பித்தத்தினால் ஏற்படும் கை கால் எரிவு விடியற்காலையில் வயிற்றில் ஏற்படும் எரிவு பித்த ரோகம் ருசியின்மை உஷ்ண நோய் விக்கல் வாந்தி தாகம் சிரங்கு இவைகள் தீரும் பித்தத்தினால் மெலிந்த உடல் புஷ்டி அடையும் மேகத்தின...

தும்பை மருத்துவம்

 நுரையீரலின் கோர்க்கும் நீரை போக்கும்... கபத்தை அறுக்கும்... கற்பமூலிகை *தும்பை.*🌿🍁🙏 மூலிகையின் பெயர் -: தும்பை.  தாவரப்பெயர் -: LEUCAS ASPERA.  தாவரக்குடும்பம் -: LABIATACEAE  பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ மற்றும் வேர்முதலியன.  வகைகள் -: தும்பை, பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, பேய்தும்பை, கழுதைத்தும்பை, கசப்புத்தும்பை, கவிழ்தும்பை, மற்றும் மஞ்சள்தும்பை.   தாவர அமைப்பு -: தும்பைக்கு எல்லாவகை மண்ணும் ஏற்றது. இந்தச்செடி வறண்ட நிலங்களில் கடல் மட்டத்திலிருந்து சுமார் மூவாயிரம் அடி உயரம் வரை உள்ள இடங்களில் நன்கு வளரும் தாவரம். ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. கணுக்குருத்து இரு கிளைகளாக இலைக்கோணத்தில் பிரிந்திருக்கும். இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் பூக்களும் அமைந்திருக்கும்.  மலர்கள் தூய வெள்ளை நிறமாக ஒரே இதழ்விட்டு ஒரு சிறிய மொட்டு இதழின் நேராக நிற்கும். ஐந்து இதழ்களை உடையது. அடியில் இவை இணைந்து குழல் வடிவமாயிருக்கும் மகரந்த வட்...

பழங்களின் பயன்

 #பழங்களின்_பயன்கள்❗❓ 💊மாதுளை  மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது. 💊நாரத்தம் பழம்  நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும். 💊முந்திரிப் பழம்  கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும். 💊கண்டங்கத்திரிப்பழம்  கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும். 💊தூதுளம் பழம்  தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும். 💊பலாப்பழம்  பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும். 💊இலந்தைப் பழம்  பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும். 💊திராட்சை  உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி ப...

குழந்தை பேறு

 'இயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்' பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம். 1) கருப்பையில் புழுக்கள் இருந்தால் மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும். சீரகம், கடுக்காய் சமன் சேர்த்தரைத்து தண்டில் புசி புணர குழந்தை உண்டாகும். புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும். விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்பூச்சிகள் சாகும். 2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட்டு விட்டு விலக்கு முடிந்தபின் தண்டில் தடவி புணரவும். 3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக...

உமிழ்நீர் மருத்துவம்

 #உமிழ்_நீர், #உயிர்_நீர்..! ◆ 108  வியாதிகளுக்கும் ஒரே மருந்து.... ◆ அதுவே,  உமிழ் நீர், உயிர் நீர் !😋 ◆ சர்க்கரை நோய்க்கான எளிய,   இயற்கை மருந்து, நம்ம வாயிலேயே இருக்கு ! உமிழ் நீராக  இருக்கு !😋 ◆ சர்க்கரை  நோய்க்கும்  வாயில் ஊறக்கூடிய உமிழ் நீருக்கும்  என்ன சம்பந்தம் ?😉 ◆ உணவுடன்  கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்தில் இன்சுலினைச்  சுரக்கத் தூண்டுகிறது !😋 ◆ உமிழ் நீர் எனும்  இயற்கை மருந்தை,  நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவு வழியாகவே, அதிக அளவு  எடுத்துக் கொண்டனர் !🙂 ◆ வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர் !😀 ◆ அதனால்தான், பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும்  உணவு உண்டனர் ! அதனால், அவர்கள் சாப்பிடும்😌 உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து, வயிற்றுக்குள் சென்றது ! ◆ கூடுதலாக  உமிழ் நீரை சுரக்கச் செய்வதற்காக, ஊறுகாயைச்  சிறிதளவு எடுத்துக் கொண்டனர் !🤪 ◆ நம் முன்னோர்களுக்கு, உமிழ் நீரின் அருமை தெரிந்திருந்ததால், ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்...

மூக்கிரட்டை கீரை பயன்கள்

 மூக்கடைச்சிட்டு மூச்சு விட சிரமமா இருக்கா, இந்த கீரையை சாப்பிடுங்க! நிலத்தில் தனித்து படர்ந்து தனித்தன்மையோடு வளரக்கூடியதுதான் மூக்கிரட்டை என்னும் மூலிகை செடி. இது ஊதா நிற பூக்களை கொண்டிருக்கும். இலைகள் மேல் பச்சை நிறத்திலும் கீழ்ப்பக்கத்தில் சற்று வெளுத்தும் இருக்கும். வேர் தடிமனாக இருந்தாலும் இவை பூமிக்குள் இருக்கும். தண்டுகள் தனித்து இருக்கும். இந்தக்கீரையை புணர்னவா என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு உயிரூட்டுவதால் மூக்கிரட்டை இந்த ஒரு பெயரும் உண்டு. இவை என்னவெல்லாம் மாயம் செய்கிறது பார்க்கலாமா? ​ரத்த அணுக்களை அதிகரிக்கும் : உடலில் ரத்த அணுக்கள் இல்லை என்றால் உடல் சீராக இயங்காது என்று தான் சொல்ல வேண்டும். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என்று மூன்று விதமானாணுக்கள் உள்ளது. இவை நமது எலும்பு மஜ்ஜைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணுக்கள் உடலில் சீராக இருக்க வேண்டுமெனில் வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை இந்த கீரையை உணவாக எடுத்துகொள்ளலாம். மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாதத்தில் பிசைந...

மலைவேம்பு பயன்கள்

 *மலைவேம்பு மரம்* 🙏🌿💫🌳🌿🍃🍂 வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்க வேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை தர வேண்டும். இதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட  காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள  கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது.  டெங்கு காய்ச்சலுக்கும் இதனை கஷாயம் செய்து கொடுக்கலாம். சிறுநீரில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களுக்கு  மருந்தாகிறது.  வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும். வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக்  காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.  வேம்பு எண்ணெய், பித்...

மூலிகை சுத்தி முறை

 சுத்தி முறைகள் கடைசரக்கு:- 1) சுக்கு - ஓர் எடை சுக்குக்கு 2 எடை சுண்ணக்கல் சேர்த்து தாளித்து, ஒரு சாமம் சென்றபின் கழுவி உலர்ததி மேல்தோலை சீவி கழிக்க வேண்டும். 2) மிளகு - புளித்த மோரில் ஒரு சாமம் ஊறபோட்டு எடுத்துலர்த்தி கொள்ளவும். 3) திப்பிலி - கொடிவேலி இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊறப் போட்டு பின்னர் இரவியில் உலர்த்தவும். 4) திப்பிலி மூலம் - கணுக்களை போக்கி உலரவைத்து எடுத்துக் கொள்ளவும். 5) ஆனைத்திப்பிலி - காடியில் ஒரு சாமம் ஊறவைத்து ரவியில் உலர்த்தி எடுக்கவும். 6) செவ்வியம் - மேல் தோல் சீவிச் சிறு சிறு துண்டுகளாக்கி இரவியில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். (மரமஞ்சள், மஞ்சள், அதிவிடயம், சிறுதேக்கு, சாதிக்காய், அரத்தை இவைகளையும் இதேபோல் சுத்தி செய்து கொளளவும்) 7) சித்திரமூலம் - உள்நரம்பை நீக்கி மேல்பட்டையை மாத்திரம் இடித்துச் சூரணம் செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால்விட்டு, ஏடுகட்டி, அதன் மேல் சூரணத்தை பரப்பி, மேல்சட்டி மூடி, ஒரு சாமம் சிறு தீயாக எரித்து சூரணத்தை வடித்துலர்த்தி, மறுபடியும் கல்வத்தில் இட்டரைத்து வைத்து கொள்ளவும். 8) ஓமம் - இதனை சுண்ணநீரில் நனைத்து உலர்த்திக் கொள்ளவும். ...

சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக_செயலிழப்பு.! உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும். பொதுவாகக் கட்டுப்படாத நீரிழிவு நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்தஅழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், சிறுநீரகக் கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்கவிளைவு, உணவு நச்சுகள், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவற்றால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. என்று மேலோட்டமாக சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.  ஆனால் அதை கடந்து சில பிரச்சினைகள் உண்டு. அது நேரில் வரும் நோயாளிகளுக்கு விளக்கிச் சொல்லப்படும்.  இந்தப் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துச் சிகிச்சை பெற்றுவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால், நாளடைவில் எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்துவிடும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால், உடலில் கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றும்: # சிறுநீர் பிரிவது குறையும். # பசி குறையும். # வாந்தி வரும். # தூக்கம் குறையும். # கடுமையான சோர்வு ஏற்படும். # உடலில் அரிப...

நோய்கள் 4448 வகைகள்

 🌿 *சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்*🌱 *சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.*  🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது. 1. தலை 307 2. வாய் 18 3. மூக்கு 27 4. காது 56 5. கண் 96 6. பிடரி 10 7. கன்னம் 32 8. கண்டம் 6 9. உந்தி 108 10. கைகடம் 130 11. குதம் 101 12. தொடை 91 13. முழங்கால் கெண்டை 47 14. இடை 105 15. இதயம் 106 16. முதுகு 52 17. உள்ளங்கால் 31 18. புறங்கால் 25 19. உடல்உறுப்பு எங்கும் 3100 ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, *சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.* 🌵 *உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.* 🐲 *கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்*🐾 ☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப...

50 மருத்துவ குறிப்புகள்

 நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்! 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் ...

வில்வம் பயன்கள்

 வில்வம் – மருத்துவ பயன்கள் 1.வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் வியர்வையைப் பெருக்கும் மலமிளக்கும் காய்ச்சலைத் தணிக்கும் காமம் பெருக்கும். 2.வில்வம் பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்ட, ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம். வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும். 3.வில்வம் பூக்கள், 2.5 செ.மீ. குறுக்களவில், சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், இனிய மணத்துடன் காணப்படும். வில்வம் பழங்கள், பெரியவை, 20 செ.மீ. வரை குறுக்களவானவை, கோள வடிவமானவை, முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். 4.வில்வம் பழத்தோல், கடினமானது, பழச்சதை ஆரஞ்சு, நிறமானது. மணமும், சுவையும் கொண்டது. வில்வம் இந்தியா முழுவதும், சமவெளிகள், மலையடி வாரங்களில் பரவலாக காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. 5.பல சிவன் கோயில்களில் இவை ஸ்தல விருட்சமாக வளர்கின்றன. வ...