மூக்கடைப்பு

 மூக்கடைப்பு பீனிசம்

இதற்கான வைத்திய முறைகள்


மூக்கில் நீர் கோர்த்துக்கொண்டு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அதற்கான ஒரு கை மருந்து


தேவையான பொருட்கள்


இண்டு இலை 150 கிராம் 

சுக்கு 50 கிராம் 

மிளகு 50 கிராம் 

திப்பிலி 50 கிராம்


செய்முறை


   இவை அனைத்தையும் சுத்தம் செய்துகொண்டு இடித்து சலித்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் 


  இதில் ஐந்து கிராம் அளவு எடுத்து தேன் விட்டு குழப்பி உணவு சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக காலை மாலை என இரண்டு வேளையும் ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் தீராத மூக்கடைப்பு பீனிசம் தீரும்


     இந்த மருந்தை சாப்பிடும்பொழுது இதற்கு துணை மருந்தாக கீழே சொல்லப்படும் மருந்தையும் இதனோடு சேர்ந்து சாப்பிட வேண்டும்


   உடலில் தங்குகின்ற மலக்கழிவு மற்றும் கபக் கழிவான சளி இவைகள் இரண்டும் முழுமையாக வெளியேறாமல் தங்கி விடுவதால் மனிதர்களுக்கு நோய்கள் வருவதற்கான காரணமாக இருக்கின்றது  


     இந்த காரணத்தினாலே மூக்கடைப்பும் உண்டாகின்றது இந்த மூக்கடைப்பை ஆரம்ப காலத்திலேயே சரிசெய்யாமல் விட்டதால் இது பீனிசம் என்ற பெருநோயாக மாறிவிடுகின்றது ஆக நோய்கள் உண்டாவதற்கு காரணமான கழிவுகளை முதலில் நீக்க வேண்டும்


இதற்கு தேவையான பொருட்கள்


தோல் நீக்கிய சுக்கு 100 கிராம்

தோல் உரித்த பூண்டு 100 கிராம்

பனை வெல்லம் 100 கிராம்


செய்முறை


     இவை அனைத்தையும் ஒன்றாக உரலில் இட்டு நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும் இது ஒரு கற்கம் போல சற்று பிசுபிசுப்பு தன்மையானதாக இருக்கும் இதை உணவு அருந்தியபின் காலை மாலை மதியம் என மூன்று வேளையும் தொடர்ந்து  ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வர வேண்டும்


குறிப்பு


      ஒவ்வொரு நாளும் இந்த இரண்டு மருந்துகளையும் தொடர்ந்து ஒரு மண்டல காலம் பயன்படுத்தி வருவதினால் மூக்கடைப்பும் பீனிசம் தீர்ந்துவிடும் 


மூக்கடைப்பு உடனே நீங்க


   மாசிக்காய் 50 கிராம் வாங்கி வந்து இதை இடித்து சூரணமாக செய்து கொண்டு ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தி கொள்ளவும்


     இதை மூக்குப்பொடி போடுவது போல பயன்படுத்தி வந்தால் அப்பொழுதே  மூக்கடைப்பு நீங்கி விடும்


இதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை பயம் வேண்டாம்


இன்னொரு எளிதான முறை


     சிற்றரத்தை வாங்கி வந்து இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு மிட்டாய் சாப்பிடுவது போல வாயிலேயே அடக்கி வைத்துக் கொண்டு சிறிது சிறிதாக மென்று உயிர் நீரை விழுங்கி வந்தால் மூக்கடைப்பு நீங்கும்


பிரம்மஸ்ரீ இராமலிங்கம்

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி