கீழாநெல்லி

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


 *#கீழாநெல்லியை எடுத்துக்கொள்ளும் முறை பற்றி தெரியுமா?* 


🌿மஞ்சள் காமாலை:

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.


🌿சர்க்கரை நோய்:

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.


🌿உடற்சூடு மற்றும் தொற்றுநோய்கள்:

கீழாநெல்லியின் வேரை நன்றாக அரைத்து பசும்பாலுடன் கலந்து மூன்று வேளையும் குடித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும். தொற்று நோய்கள் நெருங்காது.


🌿வயிற்றுப்புண்:

1 டம்ளர் மோரில்,  கைப்பிடி அளவு அரைத்த கீழாநெல்லி இலையைக் கலந்து காலையில் குடித்துவர, வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான அத்தனை பிரச்னைகளும் தீரும்.


🌿தலைவலி:

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.


🌿சொறி, சிரங்கு:

கீழாநெல்லி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்து, குளித்து வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் சரியாகும்.


🌿வெள்ளைப்படுதல்:

கையளவு கீழாநெல்லி இலையை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், அதை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து ஒரு டம்ளர் நீராக வரும் அளவுக்குச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும்.


🍃 🍃 🍃 🍃 🍃 🍃 🍃 🍃 🍃 🍃

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி