வாதம்

 வாதம் நோய்... ..!

Nature Care Ayurvedha  cell/what's app-7010302640


1,வாதநோய் என்றால் என்ன ?


2,வாதம் எத்தனை வகைப்படும்.? 


3,வாதம் எதனால் உருவாகிறது ?


4,வாதத்திற்க்கு உண்டான மருத்துவம் என்ன ?



1,வாதநோய் என்றால் என்ன,?


நமது உடலில் உருவாகும் வாயு தொல்லையே இதற்க்கு காரணம் ,மலசிக்கல் இருந்தாலே வாயு உற்ப்பத்தியாகி உடலில் சேருகின்றது, இதுவே நாளடவில் வாதநோயாக மாறுகின்றது,....


2,வாதம் எத்தனை வகைப்படும் ,?


வாதம் 84வகைப்படும்,1,மனிதர் களின் கால் பாதத்தில் உருவானால் அதற்க்கு குதி வாதம்,என்றும் கூறப்படும், 2.கனுக்காலில் வருவதால் இதற்க்கு கனுக்கால் வாதம் என்று கூறப்படும், 3,கால் கென்டையில் வருவதால் இதற்க்கு கென்டை வாதம் என்று கூறப்படும 4,முட்டியில் வருவதால் இதற்க்கு நரித்தலை வாதம் என்றும் கூறப்படும், 5,தொடையில் வருவதால் இதற்க்கு தொடை வாழை என்று கூறப்படும், 6,சாரையில் வருவதால் இதற்க்கு பக்க பிளவை என்றுகூறப்படும்,7,ஒரு கை ,கால் இழத்தால் இதற்க்கு பக்கவாதம் என்று கூறப்படும்,8,முகத்தில் வந்தால் இதற்க்கு முகவாதம் என்று கூறப்படும், 9,உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிளும் வந்தால் இதற்க்கு சர்வங்க வாதம் என்று கூறப்படும், இதுபோல் நமது உடலில் வாயு எங்கு தங்கி உபத்திரம் கொடுக்கின்றதோ அதற்க்கு அந்த இடத்தின் பெயரை சொல்வது வழக்கத்தில் உள்ளது.


3,வாதம் எதனால் உருவாகிறது ?


ஒருவரின் இதய ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கலை மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) என்கிறோம். இதேபோன்று ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.


4,வாதத்திற்க்கு உண்டான மருத்துவம் என்ன ?


மூளை திசுக்கள்:-


ஒருவரின் இதயத்திலிருந்து வெளியேறும் ரத்தம், கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் வழியாகப் பாய்ந்து மூளைத் திசுக்கள் ஆரோக்கியத்துடன் செயல்பட உதவுகின்றன. இதனால் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படும் அங்க இயக்கங்கள், பேச்சுத்திறன், சிந்தனைத் திறன், மனநிலை, பார்வை, கேட்கும் திறன், உடல் உணர்வுகளின் தன்மை ஆகியவை சீராகச் செயல்படுகின்றன. அதனாலேயே நாம் அன்றாடப் பணிகளைச் சரியான சுயசிந்தனையுடன் செய்ய முடிகிறது.


கொழுப்பு படிதல்:-


மூளைத் திசுக்களிடையே பரவி இருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைந்து போதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிந்து விடுதல் ஆகியவை காரணமாக மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டு வாதநோய் ஏற்படுகிறது. மூளையின் வலது பக்கம் பாதிக்கப்படும்போது உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதிக்கப்படும்போது வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.


அறிகுறிகள்:-


பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்தரவுகள் திடீரென ஏற்படக்கூடும். இவை வாதநோயின் பொதுவான அறிகுறிகள்.


பக்கவாதம்:-


உடலின் ஒரு பகுதியில் கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழக்கக்கூடும். மேலும் செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போய்விடும். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு உளறலைப் போல இருக்கும். இதைப் பேச்சு வழக்கில் ‘பக்கவாதம்' என்கிறோம்.


ஏலக்காய்:-


அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடியுடன் அரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து உணவு உண்பதற்கு முன்னர் அருந்தி வந்தால் வாயுத்தொல்லைகள் விலகிச் செல்லும்.


புதினா:-


காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தேவையான அளவு வறுத்து எடுத்து, இவற்றுடன் புதினா, வல்லாரை, புளி, உப்பு சேர்த்து அரைத்து சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்வுக் கோளாறுகள் விலகும். மலச்சிக்கலும் நீங்கும்.


வாதநாரயண இலை:-


சிறிது வாதநாராயண இலைகளை மையாக அரைத்து, மாவுடன் கலந்து தோசை வார்த்து சாப்பிட்டால் வாதக் கோளாறுகள் நீங்கும். இதன் இலை அல்லது காம்புகளை ரசம் வைத்து அருந்தினாலும் பொரியல் செய்து சாப்பிட்டாலும் வாத நோய் விலகும்.


கோதுமை மாவு:


கைப்பிடி அளவு கோதுமை மாவை இளம் வறுப்பாக வறுத்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாதத்தால் வரக்கூடிய வலிகள் மட்டுமல்லாமல் மூட்டுவலியும் விலகும்.


நன்னாரி:-


20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீர் போட்டு 200 மி.லியாகக் காய்ச்சி 100 மி.லி வீதம் காலை மாலை சாப்பிட்டுவந்தால் நாள்பட்ட வாதம் விலகும்.


சாமை:-


சாமை அரிசியை சமைத்தோ, கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் குணமாகும்.


புளிச்சக்கீரை :-


வாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் புளிச்சக்கீரையை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வாத நோய் தணியும்.


நொச்சி, வேப்பிலை:-


நொச்சி, வேப்பிலை இரண்டும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாகும். நொச்சி இலை மற்றும் வேப்பிலைகளை காய்ச்சி குளித்து வந்தால் வாத நோய்கள் விலகும்.


சிகிச்சை முறைகள்:-


முன்பெல்லாம் வாதநோய்க்குச் சிகிச்சை அளிப்பது கடினம் என்றிருந்த நிலை மாறி, தற்போது வாதநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வாதநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க ஆயுர்வேத வர்ம மருத்துவ சிகிச்சை முறைகளே தற்போது பெரிதும் உதவுகின்றன.


தீய பழக்கங்கள்:-

மது அருந்துவது, புகைபிடிப்பது, போதை மருந்து பழக்கத்தை விட்டொழிப்பது போன்றவற்றின் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்க முடியும்.


மன பிரச்சனைகள் :-

மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதும் நல்லது. உடலில் வாதநோயை உண்டாக்கும் நச்சுகள் சேராமல் இருக்க மாதமிருமுறை மூலிகை ஆயில் வர்ம மசாஜ் செய்து கொள்வது அவசியமாகும்.


மலச்சிக்கல் :-

மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும், மலம் கழிக்கும்போது அதிக சிரமப்படாமல் இருப்பதும் அவசியம். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மூக்கு அடைப்பைப் போக்கப் பயன்படுத்தும் மூக்கு சொட்டு மருந்துகள், அலர்ஜி நீக்கி மருந்துகள் போன்றவற்றை மருத்துவர் ஆலோசனையுடன் பெறுவது நல்லது. இந்த அம்சங்களைக் கடைப்பிடித்தால் வாதநோயை விலக்கி வைக்கலாம்.

மேலும் விவரங்கள், மருத்துவ ஆலோசனை மற்றும் முன்பதிவிற்கு  அழைக்கவும்.

Dr.M.Ramachandran.B.A.M.S.,

Nature Care Ayurvedha

Cell:7010302640

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விந்து சக்தி