சித்தவித்தை

 அதர்மக்கல்வியை பயின்று தர்மக்கல்வியாம் மத்தகக்கல்வியை மறந்தான், மறைத்தான். 


எத்தர்களாய் மாறி ஏழைகளை வதைக்கின்றான். 


ஏகபோக வாழ்விற்கு எதனையும் செய்யத்துணிந்தான்.


அந்திம காலத்தில் அவன் செய்தவினையை அறுக்க முடியாமல் அவமாய் நோயால் மடிகின்றான்...


ஏ மானுடமே... ஒவ்வோர் உயிரும் ஈசனென்றறியாமல், ஈசனாய் உள்ள ஜீவர்களையே வதைக்கின்றாய் அறிவியலின் பெயராலே...


உன் அறிவியலால் உன் உயிரை இழக்காமல் வாழச் செய்ய முடியுமோ?


ஏன் இந்த பேயாட்டம் ஆடுகிறாய்? 


மனிதத்தன்மையை மறந்து நாயாய், நரியாய், புலனின்பங்களை சுகித்து,  நுகர்ந்து அவமாய் , அவனியிலே அகால மரணத்தை தழுவதை எப்போது உணரப்போகிறாய்?


மனிதனென்ற பிறப்பின் மகிமையை உணர்வாயோ?


மனிதப்பிறப்பு  பரிணாமத்தின் பூரணத்தை அடைய பரிபூரணத்தின் வடிவாய் அமைந்தது என்பதை பேதையான நீ எங்ஙனம் அறிவாய்?


நான் பண்டிதன் என்ற துரபிமானத்தால் அழியும் கல்வி கற்று, இழிபிறவியை அடைகிறாயே...


இழிபிறவியை அகற்றி ஆனந்தவாழ்வாம் ஏகாந்தநிலையை அருளும் மத்தகத்தை எப்போது காணப்போகிறாய்?


உணர்ந்து திருந்தினால் உய்யலாம்.


அன்றேல் மரணப்பிடியில் அகப்பட்டு சாகலாம்.


மத்தகமாம் தன்னுள்ளில் வாசியை படித்துணர, உய்ய கற்பீர்  "சித்தவித்தை" யை... வடகரை வள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் உன்னத அனுபவம்.


குருசிஷ்யன் நிலையை உன்னுள் உணர்த்தி, தானே ஈஸ்வரன்!

மனமே குரு!

அடங்கிய மனமே சற்குரு!

உணர்வே பிரம்மம்!


என முன்மொழிந்த வள்ளல்... வள்ளலாரின் வள்ளல்...


ஞானத்தை பருக வாரீர் ஜெகத்தோரே....


இறைஉணர்வோன் சங்கர்.

Comments

Popular posts from this blog

சித்தவித்தை பயில அணுகவும்

சித்தாதி எண்ணெய்

விதைப்பை வலி